Wednesday, September 14, 2016

நமது பரிணாம கொள்கை(Theory of evolution)சார்லஸ் டார்வின் எனும் இங்கிலாந்து அறிஞர் 1931-36 வரை ஆய்ந்து வெளியிட்ட உயிர்கள் பற்றிய பரிணாம கொள்கையே இன்று நவீன (உயிரியல்) அறிவியலின் பிரதானமாக இருக்கிறது இதையே நாமும் மதிப்பெண்னிற்காக மணனம் செய்து தேரிவந்தோம்..!

இதையேதான் நம்மவர்கள் ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கதையாக சொல்லியும், பதிகம், பாட்டாக படித்தும் வைத்திருக்கிறார்கள் கண்டுகொண்டோமா நாம்?
இந்த கலாச்சாரத்திலே கடவுளின் அவதாரங்களாக சொல்லப்பட்ட அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் படிமானங்களே...!

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்...!

-எனும் அருணகிரியாரின் கந்தர் அநுபூதி-51 யும்...

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்...

-எனும் திருவாசகமும் 

கற்பனை என்று நவீனத்தை தலையில் தாங்கியாடும் நமக்கு யாரோ வந்து தலையில்குட்டி சொன்னால்தான் தெரிகிறது நம்மவர்களின் பெருமையே... 
இதுதான் இந்த மெக்காலே கல்விமுறையின் உச்சபட்ச முட்டாள்தனம்.

இந்த புடைப்பு சிற்பம் எனது வானியல் வரலாற்று தேடலின் போது தமிழ்நாட்டின் கழுகுமலை வெட்டுவான் கோவிலின் முன்விதானத்தில் கண்டது. இது போன்ற இன்னும் ஆறு வரைபடங்களை (அனைத்தும் கல்லால் ஆனது) இந்தியாவின் பலபகுதிகளில் கண்டு ஆவனபடுத்தினோம். முதலில் வானியல் வரைபடமாக பாடம் சொன்ன இந்த சிற்பம் இப்போது பரிணாம கொள்கையின் உச்சமாக நிற்க்கிறது.

சரியாக நூறு கூறுகளை கொண்ட இது வலக்கீழ் பக்கத்திலிருந்து ஆரம்பித்து பார்த்தால் ஏதோ ஒருசெல் (ஏகாத்மா) உயிராக ஆரம்பித்து வலதுமேல் பக்கத்தில் முடியும்போது நெடுவால் கொண்ட உயிர்களையும்...!

வலக்கீழ் பக்கத்தில் ஆரம்பித்து அதே வலதுமேல் பக்கத்தில் முடியும் போது குறுவால் கொண்ட மிருகங்களையும் காட்டுகிறது. அதற்கடுத்த இரண்டாம் வரிசையில் வானியல் வாய்பாடுகளைகயும் அடுத்த வரிசையில் ஆத்மசக்கரங்களையும் காட்டுகிறது நடுவிலிருக்கும் கூறை நம்மவர்கள் எப்போழுதும் போல் சிதைத்திருக்கிறார்கள்...!

இதைபோன்ற நமக்கு தெரியாத பலநூறு ஆயிரம் நவீனங்களை நம்மவர்கள் சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள் நாம்தான் வெள்ளையாய் இருப்பவனுக்கு விளக்கு பிடித்து கொண்டிருக்கிறோம்...! அறிவு விளக்கை...!!

*தமிழின் நவீன சிறப்பு*❗

*1.* டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தாய்மொழி தமிழ்மொழி.

*2.* வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழை தான் இந்தியை அல்ல.

*3.* சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம்.

*4.* ரஷ்யா நாடாளுமன்றத்தின் நான்கு வாயிலின் பெயர் நம் தமிழில் உள்ளது.

*5.* உலகம் அழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் திருக்குறள் உள்ளது.

*6.* லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை வழங்கப்பட்டுள்ளது.

*7.* ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி தமிழ்.

*8.* இந்தியாவிலேயே முதன்முதலில் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) மொழி பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில் தான்.

*9.* முதன் முதலில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஓன்று.

*10.* ஆங்கிலத்துக்கு பின் இனையதளங்களில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே.


🙏🏼 *தமிழ் வளர்ப்போம்.* 🙏🏼


Wednesday, February 18, 2015

தமிழ் மொழி


இறைவனோடும் இவ்விகத்தோடும்
இணைந்து தோன்றிட்டு
காலங்களை கடந்து வாழ்ந்திடும்
பண்பட்ட பழமை மொழி

அடர்காடுகளில் கரடுமலைகளில்
அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன்
இயற்கையோடு இணைந்து உறவாடி
வடித்திட்ட இயற்கை மொழி

சொல்யொன்றை உயிர் ஓவியமாய்
யுகமதில் வாழும் காவியமாய்
சிந்தனையை கடைந்து படைத்து
தீட்டிட்ட தொன்மை மொழி

தானே விதையுண்டு விருச்சகமாய்
வேரோடி ஆலமரமாய் தழைத்திட்டு
இலக்கண இலக்கியம் வளம் கொளுத்து
செழுத்திட்ட செம்மொழி

தெலுகு கன்னடம் துளு மலையாளம்
என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்
தன்னிலே ஈன்றெடுத்து பிறமொழி கலவாது
உயர்தனி தமிழ் தாய்மை மொழி

தமிழ் வேந்தர்களும் மாந்தர்களும்
சங்கங்கள் நிறுவிட சான்றோர்கள்
இயிற்றிட்ட வாழ்வியியல் நூற்களால்
கல்வி சிறந்திட்ட நெறியியல் மொழி

திருநூற்கள் குறளும் நாலடியும் சிலம்பும்
தெய்வ புலவன் திருவள்ளுவரையும்
தேன்கவி புலவன் கம்பனையும்
வரமாக பெற்றிட்ட சிறப்பு மொழி

தமிழகம் ஈழம் தன் தாயகத்தில்
மலேயா சிங்கை மொரிசு பிஜு
என புலம்பெயர்ந்த பன்னாட்டில்
தலைநிமிர்ந்து புகழ்சேர் உலக மொழி

கணிணியுகத்தில் தடம் பதித்து
அறிவியியல் மொழியாய் பரிணாமித்து
இணையத்திலும் புதுமை புரட்சி செய்து
நாளும் உயரும் நம் தாய் தமிழ் மொழி

நன்றி: பழனிநிலவன்.

Thursday, January 15, 2015

தமிழ் மொழி
அந்நிய மொழிகள்
ஆயிரம் முளைத்தும்
அழியாக் கதிராய்
அவள் தான் நிலைத்தாள்....


பேரலை வந்தே
பெருஞ்சேதம் நிகழ்ந்தும்
வள்ளுவன் சிலையாய்
பெருமையுடன் நின்றாள்....


எம்மொழியிலும் காணவியலா
இனிமையது எம்மொழியில்
செம்மொழியாய் சிறந்திடவே
சரித்திரமும் படைத்தாள்....

அம்மியம்மி அரைத்தாலும்
அழித்திட இயலுமோ ?
இம்மையிலும் மறுமையிலும்
இதுபோல் மொழியுண்டோ ?


உணர்ந்திட்ட உள்ளங்கள்
உள்ளதிங்கு சொற்பமாக
உறுதியுடன் தமிழ்பேச
பிறமொழியாகும் அற்பமாக...

தமிழராக வாழ்வதே
தரணியில் நம் பேறு
தடையின்றி எந்நாளும்.!!

தமிழ் வாழுமென்பதில் மறுப்பேது....!!

Tuesday, January 13, 2015

தமிழுக்காக ஒரு மளிகைக் கடைக்காரர்


உன்னதமான சேவை செய்யும் மாமனிதர். வாழ்க பல்லாண்டு
மதுரையில் ஒரு புத்தக ஐயா…. 9578797459.

உங்களுக்கு தமிழில் ஏதேனும் நூல்கள் தேவைப்படலாம்.அப்போது நீங்கள் இவரை ஒரு முறை அழையுங்கள்.புத்தகம் இருந்ததால் கொடுப்பார்,இல்லை தேடியாவது கொடுப்பார்.தொலைவில் இருந்தால் அனுப்பிவைப்பார்.ஏனென்றால் இதுதான் பல ஆண்டுகாலமாக இவரது வாழ்க்கை.நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் முனைவர் பட்ட ஆய்வுக்கு குறிப்புதவி நூல்களை தேடி கொடுத்து உதவியவர்.ஐயா முருகேசன் அவர்கள்.அகவை 70 கடந்தவர்.மதுரை காமராஜ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்களுக்கு இந்த தமிழ்ப்பெரியவரை தெரியாமல் இருக்க முடியாது.

ஒரு மளிகைக் கடைக்கரராக வாழ்வை தொடங்கி,பழைய புத்தக விற்பனையளராக மாறி,பின்னர் தன்னிடம் சேர்ந்த நல்ல தமிழ் நூல்களின் பெருமையை அறிந்த பின் இத்தகைய நூல்கள்,அறிவாக பயன்படவேண்டும் என்று மாணவர்களை தேடிச்சென்று அளிப்பார்.இப்படி தொடங்கிய வாழ்க்கை அப்படியே தொடர்கிறது.பிள்ளைகள் அனைவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.துணைவரும் இல்லை.ஒரு தனி மனிதராக தம் வாழ்க்கையை தொடர்கிறார்.வீடெல்லாம் புத்தகம் தான்.நடைபாதையை தவிர அனைத்து இடமும் புத்தக அடுக்குகள் தான்.
மாணவர்கள் ஆய்வு முடிந்த பின் நூல்களை திரும்ப கொடுத்துவிடவேண்டும்.இல்லையேல் எப்படியாவது வாங்கிவிடுவார்.நூல்களை விலைக்கு தரமாட்டார்.ஏனென்றால் நூல்கள் பிறருக்கும் பயன்படவேண்டும்,அடுத்து யாராவது ஆய்வுக்கு தேவைப்படும் என்பதால் பயன்பெற்றவர்கள் திரும்ப தந்து விடுவார்கள்.யாரிடமும் பணமும் கேட்க மாட்டார்.விரும்பி கொடுத்தால் மட்டுமே ஏதேனும் பெற்றுக்கொள்வார்.

தினமும் நூல்களை தேடிசென்று மாணவர்களுக்கு கொடுப்பதும்,மாணவர்கள் தேடும் நூல்களை தாமும் தேடிச்செல்வதும் தான் அன்றாட வாழ்க்கை.எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முனைவர் அம்பிகா சரண் ,அவர்களின் மூலம் அறிமுகமானார்.இப்போது ஐயாவுக்கு ஒரே சிக்கல் அனைத்து நூல்களும் ஒரு வாடகை வீட்டில் தான் இருக்கின்றது.அவற்றை பாதுகாக்க ஒரு இடம் வேண்டும்.அதை தேடி அலைந்து வருகிறார்.அவ்வாறு ஒரு இடம் தனக்கும்,தமது நூல்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.மதுரை புறநகரில் இருந்தாலும் பரவாயில்லை என்பதே இவரது தேடல்…..
 தமிழ்ப்பிள்ளைகளுக்கு பயன் பட வேண்டும் என்று,இந்த நூல்களை தம் பிள்ளைகள் போல பேணி காத்து வருகிறார்.உங்களுக்கு புத்தகம் தேவைப்படாவிட்டலும் இவரை அழைத்து பேசுங்கள் மகிழ்வார்.தமிழ் மொழியின் நூல்கள் பாதுகாக்கப்படுகிறது என்றால் இவர் போன்ற மனிதர்களின் எதிர்ப்பார்ப்பற்ற 

தமிழ் இலக்கணச் சொற்களுக்கு ஆங்கிலம்

எழுத்து - Letter

முதல் எழுத்து – Primary letter

சார்பு எழுத்து – Secondary letter

உயிர் – Vowels

மெய் – Consonants

ஆய்தம் – Guttural

குறில் – Short Letters

நெடில் – Long letters

அளபெடை – Prolongation of letters, Protraction

சுட்டெழுத்து – Demonstrative letters

அண்மைச் சுட்டு – Proximate demonstratives

சேய்மைச் சுட்டு – Remote demonstratives

வினாவெழுத்து – Interrogative letters

இன எழுத்து – Kindred letters

வல்லினம் – Hard Consonants

மெல்லினம் – Soft Consonants

இடையினம் – Medial Consonants

உயிர்மெய் – Vowel-Consonants

குற்றியலுகரம்- Shortened

குற்றியலிகரம் – Shortened

பெயர்ச்சொல் – Noun

வினைச்சொல் – Verb

இடைச்சொல் – Interjection, Conjunction, Particles and Adjuncts

உரிச்சொல் – Adjective and Adverb

பொருட் பெயர் – Names of things

இடப்பெயர் – Names of places

காலப் பெயர் – Names of times

சினைப் பெயர் – Names of parts or the organs of the body

குணப் பெயர் – Names of quality

பண்புப் பெயர் – Abstract Nouns

தொழிற் பெயர் – Verbal Nouns

வினாப் பெயர் – Interrogative Nouns

இடுகுறிப் பெயர் – Conventional Nouns – Arbitraries

காரணப் பெயர் – Casual Noun

காரண இடுகுறிப் பெயர் – Casual noun used as a Coventional Noun

பொதுப்பெயர் – Epincene, Common or generic Names

ஆகுபெயர் – Metaphor, Metonymy, Synecdoche

ஆக்கப் பெயர் – Optional

வினையாலனையும் பெயர் – Conjugated Nouns, Inflectional Nouns

எழுவாய் – Subject

பயனிலை – Predicate

செயப்படு பொருள் – Objective force

உயர்தினை – Personal class

ஆஃறினை – Impersonal class

ஆண்பால் – Masculine Gender

பெண்பால் – Feminine Gender

பலர்பால் – Masculine plural and Feminine plural

ஒன்றன்பால் – Neuter Singular

பலவின்பால் – Neuter plural

ஒருமை – Singular

பன்மை – Plural

தன்மை – First person

முன்னிலை – Second person

படர்க்கை – Third Person

முதல் வேற்றுமை – Nominative case

இரண்டாம் வேற்றுமை – Acuusative case

மூன்றாம் வேற்றுமை – Instrumental case

நான்காம் வேற்றுமை – Dative case

ஐந்தாம் வேற்றுமை – Ablative case

ஆறாம் வேற்றுமை – Genitive case

ஏழாம் வேற்றுமை – Locative case

எட்டாம் வேற்றுமை – Vocative case

அண்மை விளி – Proximate vocative case

சேய்மைவிளி – Remote Vocative Caseவேற்றுமைப் புணர்ச்சி – Casal combination

அல்வழிப் புணர்ச்சி – Combination with all other parts of speeches, but nouns in one of the Cases from 2 to 7

இயல்பு – Natural

விகாரம் – Change

தோன்றல் – Reduplication, Augmentation

திரிதல் – Changing, Permutation

கெடுதல் – Dropping, Omission

பகுபதம் – Derivative or divisible word

பகாப்பதம் – Primitive or Indivisible word, Radice, Root

பதப்புணர்ச்சி – Combination of words

உருபு புணர்ச்சி – Combination of casal Particles

பகுபத உறுப்புகள் – The elements of members of divisible word

நிலை மொழி  – Standing or Preceding word

வருமொழி – Following word

பா – Poems

பாவினம் – Varities of stanza

அசை – Syllable

சீர் – A metrical foot

வழக்கு – Usage. Acceptation

மரூஉ – A contraction, or coined word, that is term, or word used by great or leraned men though not formed by grammatical rule

இடக்கரடக்கல் – anm occult, a Figurative expression

மங்கலம் – Euphemism

குழூஉகுறி – Cant, or form of speaking peculiar to a certain body of men

தளை – Junction or the Connecting of metrical feet with each other

அடி – Metrical line

தொடை –  Consonance of lines in stanza

எதுகை – Rhyme

மோனை – Alliteration

அணி – Rheoterical figure

அடைமொழிகள் – Adjuncts

போலி – Interchange of letters, Substitutes

இன்னிசை அளபெடை – Euphonic protraction

சொல்லிசை அளபெடை – Verbal protraction

சூத்திரம் – Verse

பாயிரம் – Preface

மாத்திரை – Measurement of time

பொதுப் பாயிரம் – General preface

சிறப்புப் பாயிரம் – Specual preface

உரைநடை –  Prose

முதனூல் – Original Classics

வழி நூல் – Supplemental Classics

சார்பு நூல் – Derivative Classics

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..

 திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நாம் கதைக்கு வருவோம், திருக்குறளில் தமிழ், கடவுள் என இந்த இரண்டு சொற்களுமே இடம்பெறவில்லையாம்.

நன்றி: தமிழறிவோம்

Tuesday, January 6, 2015

சிதம்பரம் ‎நடராஜர்‬ கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் !!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

"மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே"


என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

(11)மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொங்கதேச தங்கம் கொண்டு (கொங்கு நாட்டில் விளைந்த தங்கத்தாலேயே) பொன் ஓடு அமைத்துள்ளனர்.


கீழ்கரைப் பூந்துறை நாட்டின் இணைநாடு பருத்திப் பள்ளிநாடு ஆம். அந்நாட்டில் உள்ள கஞ்சமலையில் ஒரு சிறு வாரி உற்பத்தியாகி வருகிறது. அத மகடஞ்சாவடி ரைல்வே ஸ்டேஷன் ஓரமாகத் தெற்கு நோக்கிச் செல்கின்றது. அதனைப் பொன்னி ஆறு என்பர். அதிலுள்ள மணலைக் கரைத்துப் பொன் சன்னமெடுக்கிறார்கள். எட்டரை மாற்றுண்டு.

 இது போற் கொங்கு மண்டலத்தும் பொற்கனி உள்ள இடங்களிருக்கின்றன. ஆதித்த சோழன் தில்லையை கனக சபையாக்கப் பிரயத்தனப்பட்ட சமயத்தில் கொங்கு நாட்டில் விளைந்த தங்கத்தாலேயே பொன் ஓடு பாவினன். (இக்காலத்தில் ஆய்வாளர்கள் தங்கம் இல்லை என்றும் பொன்னி ஆறு கால மாற்றத்தால் இயற்கையால் அழிந்துவிட்டதேன்றும் கூறிவிட்டனர்)


சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வமெ னப்பறைபோக்
கெட்கட் கிறைவ னிருக்கும் வேளூர்மன் னிடங்கழியே
                         (நம்பியாண்டார்நம்பி திருவந்தாதி)


கொங்கு மண்டல சதகப்பாடல்
பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்
சிற்றம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்
முற்றிலுந் தன்கைத் தேவிளை வாவதை மொய்ம் பிறையுண்
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே.

இந்த செய்தியை சிதம்பர கோவில் கல்வெட்டுகளும் நம்பியாண்டார் நம்பியின் திருவந்தாதியும், சேக்கிழார வாக்கும் உறுதி செய்கிறது.

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..‪


#‎Centre‬ Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?

அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..?

திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..

விஞ்ஞானம் இன்று சொல்வதை நம்முன்னோர்கள் அன்றே கூறிவிட்டார்கள்.

வாழ்க தமிழ்...!!!

வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!


--நன்றி தகவல்தளம்

Monday, January 5, 2015

மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை!!!


‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது.
தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு  பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை.
பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன.
கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ்  பங்கியாவைப்   ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து உடையத் தொடங்கிய நிலப்பரப்பு கோண்டுவானா. வடக்கிலிருந்து பிரிந்த நிலப்பரப்பு இலாராசியா. கோண்ட்வானா மீண்டும் உடைந்து தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்று பிரிந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோண்ட்வானா பெருங்கண்டம் அமைந்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
கன்னியாகுமரி வரலாற்றுச் சிறப்புமிக்க இதனைத் தென்கடலில் மூழ்கிப் போன குமரியத்தின் எஞ்சிய நிலமாகக் குமரிமுனை, இலங்கை, இலட்சத் தீவுகள் அறியப்படுகின்றன.
”பஃறுளி-…………………………………………
………………………………கொடுங்கடல் கொள்ள”…….சிலம்பு கா. காதை (19-20) பாடலடிகள் தமிழ்மொழியின் பெருமையை அறியச் செய்துள்ளது. குமரிக்கோடு என்ற மலைநிலத்தைச் சுற்றி குமரி ஆறு, மலை, அதனைச் சுற்றி நாடுகள் பல இருந்தன. அவைகளே பஃறுளியாறு, குமரிக்கோடு. குமரிமுனையின் வரலாறு குறித்து
•    ஸ்டிராபோ-கி.மு.74-கி.பி-24
•    தாலமி—கி.பி.119-161
•    மார்க்கோபோலோ—கி.பி.1254-1324 போன்றோர் ஆய்வு செய்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
தாலமி இந்தக் குமரி முனையை ‘ புரோமன்போரியம் குமரி‘ என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் பஃறுளி ஆறு அழிந்து, குமரிக்கோடு கடலில் மூழ்கிய பின், முசிறியின் பல பகுதிகளும் கடலில் மூழ்கின. கடல்கோள் நடந்த செய்திகள் கி.பி. 79 ஆகஸ்டு 23-24 அத்துடன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் (300) இறுதி எனவும், காவிரிப்பூம்பட்டினம், மலங்கே என்ற மகாபலிபுரம் என்ற மாமல்லபுரம் ஆகியன கடலில் மூழ்கியவற்றைக் கூறுகின்றனர்.
”குமரியக் கிழக்கு மலையாளப் பாண்டியப் பண்டு நாட்டிலிருந்து செங்கடல் வழியாக வந்து நைல் நதிக்கரையில் குடியேறிய (தமிழர்) மக்கள்  எகிப்தியர் என்று ” புராதன கிழக்கு வரலாறு”  (The Ancient History of the Near east) என்ற தமது நூலில் ஆர்.எச்.ஹால் என்பவர் கூறுகிறார்.. அவரே  திராவிட மக்களும் எகிப்தியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும் கூறுகிறார். இதே கருத்தினை( outline of history by H.G Wellman”s place in nature  and other essays P.23 Thoms Huxle) மற்றும்” ருக்வேத இந்தியா ” என்ற தமது நூலில் அபினஸ் சுந்தரதாஸ் என்பவரும் ” புராதனக் கலைஞன் ” என்ற தமது நூலில் பண்டிதர் சவுரிராயர், மற்றும் மெகஸ்தனீஸ் ஆகியோரும்  குறிப்பிடுகின்றனர்.
ஏராளமான சங்கச் செய்திகள் சமகாலமான சங்க இலக்கிய எழுத்துகளில் கிடைத்துள்ளன. புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப் பத்து 7,8,9 ஆம் பத்துக்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ பெயர் பொறித்த பழந்தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது. தேரிருவேலி அகழாய்வில் நெடுங்கிள்ளி பெயர் பொறித்த பானை ஓடும், மாக்கோதை, கொல்லிப்பாறை, கொல்லிரும்பொறை, குட்டுவன்கோதை என்ற சேரர் பெயரும், பெருவழுதி என்ற பாண்டியர் பெயரும் பொறித்த காசுகளும்  கிடைத்துள்ளன.
அண்மைக்காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் பல சங்ககாலச் சோழர்  புலிக்காசும், பெரும்பத்தன் கல் என்று பழந்தமிழ் எழுதப்பட்ட தங்கம் உரைத்துப் பார்க்கும் உரைகல்லும் கிடைத்துள்ளன. எகிப்து நைல் நதிக்கரை ஊரான குவாசிர் அல்காதிம் என்ற ஊரில் கண்ணன், சாத்தன், பனை ஒறி என்று எழுதப்பட்ட பானை ஓடுகளும், பெறனிகே என்ற இடத்தில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானைஓடும் கிடைத்துள்ளது. இவை சங்ககாலத்தின் இருப்பையும், தொன்மையையும், காட்டுகின்றன. (செவ்வியல் ஆய்வுக்கோவை, உலகத் தமிழ்ப்படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சிராப்பள்ளி, மு.பதி.2011) விழுப்புரம் கீழ்வாலை மலைப்பாறைப் பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், குறியீடுகள் போன்றவை பழங்காலத்து வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளனவாக அமைந்துள்ளன. இங்கு காணப்படும் ஓவியங்கள் ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா ஓவியங்களை ஒத்துள்ளது.
செங்கோன் தரைச்செலவு குறித்த நூல் குமரிக்கண்டம் குறித்த பழமையான செய்திகளைத் தரலாம் என ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. சமவயங்க சுத்த என்ற சமண நூல் (18 மொழி-தொகுப்பு) வாயிலாகத் தமிழ்மொழி குறித்த பல செய்திகளை அறியலாம். லலிதா விஸ்தாரம் என்ற பௌத்த நூல் தொகுப்புப் பட்டியலில் தமிழ்மொழி குறித்த செய்திகள் கிடைக்கலாம்.
கி.மு 4500-இல் எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன் ஆண்டான். இதுபற்றி எகிப்திய அக்கால குருவான மனேதா என்பவர் மீனன் முதல், 300 புராதன அரசர் வரலாற்றை அவர் அங்கு எழுதி வைத்தார். எகிப்தில் மீனன் சவ உடல் மதமதக்கத் தாழி என்ற குழு தாழியில் தைலம் பூசிப் புதைக்கப்பட்டுள்ளது. கி.மு.4000 ஆண்டில் பரவன் என்ற தமிழ் மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான். அவர்கள் பேசிய மொழி தமிழ்மொழி எனப் பலநூல்கள் குறிப்பிட்டுள்ளன.
 கி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன.  எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு(பாண்டியர்)நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.
சுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம்  அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த  கடலாடிப் பகற்பரவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழியினரே பிரிட்டானியர்.  இச்செய்திகளின் வழி தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது என அறியப்படுகிறது.
யோனாகுனி  தீவை ஒட்டிக் கடலில் மூழ்கித் தேய ஆய்வாளர்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்தில் பிரமிடுகள் போன்ற வடிவத்துடன்கூடிய கட்டுமானங்களைக் கண்டறிந்தனர்.கற்களால் ஆன இந்தக் கட்டுமானங்கள் இயற்கையா? இலெமூரியாக் கண்டத்தின் நாகரிக எச்சங்களா என்ற ஆய்வு நிலை நீடித்து வருகிறது.
இலெமூரியாக் கண்டம் என்பதை மூ என்று சொல்வார்கள். இந்தியாவிலும், பர்மாவிலும் உள்ள இந்து மடாலயங்களில் கிட்டும் ஆவணங்கள் இது பற்றிப் பேசுகின்றன.


 ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சுசர்ச்சுவார்டு 1931 இல் எழுதிய காணாமற்போன மூ அல்லது இலெமூரியாக் கண்டம் ஹவாய் தொடங்கி மரியானாவரை பரவி இருந்ததாகவும், கடற்கோள் ஏற்பட்ட பிறகு தென்னமெரிக்கா வழியாக அட்லாண்டிசுக் கண்டத்தின் கடலோரம் வழியாக ஆப்பிரிக்காவுக்கும் அகதிகள் பரவினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்சு எழுத்தாளர் அகசுதசு லெ பிளாஞ்சீயோன்(1825-1908) 19 ஆம் நூற்றாண்டில் மூ கண்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது சிறப்பானது. மாயன் சுவடிகளை அவர் மொழியாக்கம் செய்தபோது மூ என்னும் கண்டம் இருந்தது குறித்தும், அக்கண்டத்திலிருந்து தப்பித்தவர் மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் எழுதியுள்ளார். இதன்வழி இலமூரியாக் கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
எட்கார் காய்சி(1877-1945) அட்லாண்டிசு பற்றியும், மூ பற்றியும் அறிந்தவரான இவரே முதன்முதலில் இலெமூரியாக்கண்டம் எனப் பெயரிட்டார். துறவி தந்த சுவடிகள் வழி மூ என்னும் பழம்பெரும் நாகரீகம் குறித்து அறியப்பட்டுள்ளதாக நந்திவர்மன் குறிப்பிடுகிறார் (கடலடியில் தமிழர் நாகரீகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.,மு.ப.2010) .
 மேலும், மூழ்கிக் கிடக்கும் அட்லாண்டீசு தென் சீனக் கடலில் இருப்பதாயும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூழ்கிய குமரிக்கண்டம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கனடா நாட்டின் புகழ்பெற்ற ஆங்கில ஏடான ஏட்டில் திசம்பர் 7,இல் செய்தியாளர் மைக்கேல்  கியூபா நாட்டருகே கடலடி நாகரிகம் குறித்த சான்றுகள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.
 கியூபா நாட்டு மாந்த உயிரியல்( Anthropology ) அகாதமியின் ஆய்வாளர் ஒருவர் அந்தப் பாறையின் மீது குறியீடுகளும், கல்வெட்டு எழுத்துகளும் தெளிவாகப் பார்க்கமுடிந்ததையும், அது எம்மொழி எனத் தெரியவில்லை எனவும் குறித்துள்ளார்.
இதன்வாயிலாகத் தமிழ்மொழியின் பெருமை அறியப்படவேண்டிய நிலையிலேயே இன்னமும் அமைந்துள்ளது. இவ்வாய்வு முடிவுகள் வெளிவரின் தமிழ்மொழியின் பெருமை தழைத்து வளரும்.இது குறித்து இன்னமும் ஆய்வுகள் வெளிவர தமிழ்மொழி செழித்து வளரவேண்டும். சுவடிகள் படிக்கவும், கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் குறித்தும் அறிய மக்கள் முன்வரவேண்டும்.

– முனைவர்.பி.ஆர்..லட்சுமி.
பி.லிட்.,எம்.ஏ.,(தமிழ்),எம்.ஏ.,(மொழியியல்),எம்ஃபில்.,டிஎல்பி.,(பிஜிடிசிஏ).,(எம்பிஏ)
தமிழ்த்துறை வல்லுநர்

Thursday, October 9, 2014

ஒளவையாரின் ஆத்திச்சூடி


1. அறம் செய விரும்பு
எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது.

2. ஆறுவது சினம்
கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும். 

3. இயல்வது கரவேல்
நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும்.

4. ஈவது விலக்கேல்
பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கக் கூடாது. அதாவது நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்கள் பிறருக்கு செய்யும் உதவியை செய்ய விடாமல் தடுக்கக் கூடாது.

5. உடையது விளம்பேல்
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே. உன்னிடம் சில நல்ல குணங்களும் இருக்கும். சில கெட்ட குண்ங்களும் இருக்கும். நல்ல குண்ங்களைப் பற்றி கூறி பெருமை பீற்றிக் கொள்ளவும் கூடாது. கெட்ட குணங்களைப் பற்றி கூறி நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ளவும் கூடாது. 

6. ஊக்கமது கைவிடேல்
எந்த ஒரு செயலில் ஈடுபடும்போதும் இடையில் சில தடங்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்த மாதிரி நேரங்களில் நாம் நம் மனதளவில் உற்சாகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் தைரியத்தைக் கைவிட்டு விடக்கூடாது. உடல் அளவில் இருக்கும் தைரியத்தை விட மனதளவில் கொள்ளும் தைரியம் வேகத்தையும் கொடுக்கும். வெற்றியையும் கொடுக்கும். ஆகவே எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்.

7. எண் எழுத்து இகழேல்
எண்கள் சம்பந்தப்பட்ட கணிதம், எழுத்துகள் சம்பந்தப்பட்ட இலக்கியம் இவை இரண்டும் நம்முடைய இரண்டு கண்களைப் போன்றவை. இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது. எந்த ஒரு பொருளையும் நாம் பார்க்கும்போதும் நம்முடைய இரண்டு கண்களையும்தான் பயன்படுத்துகிறோம். ஒரு கண்ணால் பார்த்தால் ஒரு பாதியைத்தான் காண முடியும். ஆகவே கணிதம், இலக்கியம் இவை இரண்டையுமே இகழ்ந்து ஒதுக்கக் கூடாது.

8. ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும். சிலர் வீறாப்பாக பேசும்போது, ’நான் பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர உன்கிட்டே கையேந்த மாட்டேன்’ என்று சொல்வதை கேட்டிருப்போம். பேச்சுக்கு வேண்டுமானால் அப்படி பேசலாம். பிறரிடம் சென்று பிச்சை எடுத்து சாப்பிடுவது மிகவும் இழிவான ஒரு செயலாகும்.

9. ஐயம் இட்டு உண்
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும். பிச்சை எடுத்து சாப்பிடுவது இழிவான செயல்தான் என்றாலும் அவ்வாறு பிச்சை கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு கொடுத்து விட்டு பிறகு மீதி இருப்பதை நாம் சாப்பிடுவதுதான் நல்ல செயலாகும்.

10. ஒப்புரவு ஒழுகு
உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள். ஊரோடு ஒத்துப் போ! என்று சொல்லக் கேட்டிருப்போம். நம்மை சுற்றி சில நல்ல விஷயங்களும் சில கெட்ட விஷயங்களும் நடந்து கொண்டேதான் இருக்கும். அந்தந்த சூழ்நிலைக்கேற்ப நாம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

11. ஓதுவது ஒழியேல்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் படியுங்கள். படிப்பதை மட்டும் விட்டுவிடவே கூடாது. செல்வம் இருக்கும் இடத்தில்தான் சிறந்தது. ஆனால் நாம் கற்றிருக்கும் கல்வியானது நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பைக் கொடுக்கும். அதோடுமட்டுமில்லை நாம் கற்றதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பது இன்னும் நல்லது. உங்களுக்கு ஒன்று தெரியுமா?  நாம் நமது மூளையின் இரண்டு சதவீத அளவைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

12. ஔவியம் பேசேல்
மற்றவர்களைப் பற்றி பேசும்போது பொறாமையோடு பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் ந்ம்மை அறியாமலே அவர்களை நமது எதிரியாக உருவாக்கி விடுகிறோம். போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது. போட்டி இருந்தால் அங்கே ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும். பொறாமை இருந்தால் அங்கே நிச்சயமாக அழிவுதான் இருக்கும். பொறாமை நம்மை அழித்து விடும். எனவே அடுத்தவர்களைப் பற்றி பெசும்போது பொறாமையை தவிர்த்து பெருமையோடு பேசுவது ந்ன்றாக இருக்கும்.

13. அஃகஞ் சுருக்கேல்
தானியங்களை தராசில் எடை போடும்போது அளவு குறைக்கக் கூடாது. நாம் சூப்பர் மார்க்கெட் செல்லும்போது அங்கே ‘எலக்ட்ரானிக் ஸ்கேல்‘ பார்த்திருப்போம். அதில் எடை போடும்போது துல்லியமாக மில்லி கிராம் அளவில் எடை போடுவர்கள். அதுவே காய்கறி கடையில் கை தராசில் எடை போடுபவர்கள் அளவுக்கு அதிகமாகவே போடுவார்கள். சில இடங்களில் தராசின் எடைக்கற்களின் அடியில் ஓட்டை போட்டோ, அல்லது தராசு தட்டின் அடியில் புளியை ஒட்டி வைத்தோ ஏமாற்றுவார்கள். அவ்வாறு செய்வது பாவம். (இந்த் காலத்தில் பாவ புண்ணியத்தைப் பற்றி யார் பார்க்கிறார்கள்?) 

14. கண்டு ஒன்று சொல்லேல்
நம் கண்களால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் சொல்லக் கூடாது. எந்த ஒரு விஷயமும் நாம் மற்றவர்களிடம் சொல்லியதை, அவர்கள் வேறு ஒருவரிடம் சொல்லும்போது அதற்கு கண், காது, மூக்கு வைத்து ஒரு உருவமாக்கி, ஒன்றை பத்தாக்கிக் கூறி விடுவர்கள். அதனால் பலப்பல பிரச்சினைகள் உருவாகலாம். ஆகவேதான் நாம் ஏதாவது சொல்ல நினைத்தாலும் அதை மிகைப்படுத்தாமல் சொல்ல வேண்டும்.

15. நுப்போல் வளை
பெரும் சூறைக்காற்றிலும்கூட மூங்கில் மரம் தன்னைத்தானே வளைத்து, நெழித்துக் கொண்டு ஒடிந்து விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும். தமிழ் எழுத்துக்களில் 'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் நம்மையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

16. சனி நீராடு
நம் உடலின் வெப்பத்தைத் தணிக்க வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். வாரக் கடைசி நாளான சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டால் அடுத்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பக இருக்கலாம்.

17. ஞயம்பட உரை
ஒரு விஷயத்தை, அது நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ, அதிர்ச்சியான விஷயமோ, துக்க விஷயமோ, அதை மற்றவர்களிடம் கூறும்போது மிகவும் கனிவான முறையில் கூறினால் நன்றாக இருக்கும். அதுவும் அறிவு சார்ந்த விஷயங்களைக் கூறும்போது இன்னும் இனிமையான, கனிவான முறையில் கூறினால் வேகமாக சென்றடையும்.

18. இடம்பட வீடு எடேல்
தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது நம் வீட்டுக்கும் பொருந்தும். வீட்டைக் கட்டிப் பார் & கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். சுப விரயமான வீடு ஒரு வகையில் சேமிப்பு என்றாலும், அகலக்கால் வைக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. கை மீறி கடன் படாமல் தேவையான் அளவுக்கு கட்டிக் கொள்வது மிகவும் நல்லது. கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன். அந்த நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

19. இணக்கம் அறிந்து இணங்கு
ஒருவருடன் நட்புறவு கொள்ள நினைத்தால், அதற்கு முன் அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு நட்பு பாராட்ட வேண்டும். குறிப்பாக பெண்கள் & கண்டதும் காதல் என்பது மிகமிக கேவலமானது. அதனால் பிற்காலத்தில் அவதிபபடப் போவது பெண்கள் மட்டுமே. தராதரம் அறிந்து பழகுவது மிகவும் நல்லது. ஒருவர் நல்லவராயிருப்பாரேயானால் அவரைத் தேடிப்போய் பழகுவது நல்லது. கெட்டவராயிருந்தால் கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவரது நட்பை ஒதுக்கி விடுவது நல்லது. 

20. தந்தை தாய் பேண்
நம்மைப் பெற்ற தாய், தந்தையரைப் பேணிக் காக்க வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் & இவர்களில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ள நம் பெற்றோரை & நம்மை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய நம் பெற்றோரை ந(£)ம் கடைசிக் காலம் வரை அவர்களை நன்றாக ஆதரித்து, கவனித்துக்கொள்ள வேண்டும். 

21. நன்றி மறவேல்
ஒருவர் நமக்கு செய்த உதவியை நாம் என்றும் மறக்கக் கூடாது. நாம் மற்றவர்களுக்கு செய்த உதவியை அன்றே அப்பொழுதே மறந்து விட வேண்டும். ஆனல் மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை எந்த காலத்திலும் மறந்து விடாமல் நன்றி பாரட்ட வேண்டும். அவ்வாறு மறப்பவர்களுக்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடைக்காது.

22. பருவத்தே பயிர் செய்
உரிய காலத்திலே உழுது பயிரிட்டால் விழைச்சல் நன்றாக இருக்கும். ஐந்தில் வழையாதது ஐம்பதில் வழையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விஷயங்களும் குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதியும். அதுவே பிற்காலத்தில் குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கும். சிசு கருவிலிருக்கும்போதே அதன் தாய் தனது எண்ணங்கள் மூலமாக நல்ல விஷயங்களை விதைத்து, பிறகு குழந்தை பிறந்தபின் குரல் வழியாக சொல்லி வளர்த்தால் இன்னும் ஆழமாக பதியும். 

23. மண் பறித்து உண்ணேல்
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது. அதிலும் மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை மூலம் உண்டு வாழக்கூடாது. மண், பெண், பொன் & இம்மூன்றிலும் ஆசை வைக்கக் கூடாது. அடுத்தவர் இடத்துக்கு ஆசைப்பட்டாலும், அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்டாலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டாலும், அது நம்மை அழித்து விடும்.

24. இயல்பு அலாதன வெயேல்
நம் உடலும் சரி, மனமும் சரி, அவை சில பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். அத்தகைய வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது. உடலைப் பொறுத்தவரை, நேரம் தவறாமல் சாப்பிடுவதும், மனதைப் பொறுத்தவரை பொய் சொல்லாதிருப்பதும் நல்லது. நேரம் தவறி சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்வதும், சொல்லிய ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லி மனதைக் கெடுத்துக் கொள்வதும் தேவைதானா?  

25. அரவம் ஆடேல்
பாம்போடு விளையாடினால் என்ன ஆகும்? பாம்பு கடித்தால் விஷம் ஏறி சாவு நிச்சயம். அது போலத்தான் தீயவர்களோடு உறவு வைத்துக் கொண்டால் அதன் பின்விழைவுகள் நிச்சயம் கெடுதலாகத்தான் இருக்கும். ஆகவே தீயவர் நட்பு என்றும் வேண்டவே வேண்டாம்.

26. இலவம் பஞ்சில் துயில்
தரையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! வெறும் கட்டிலில் படுத்து தூங்கிப் பாருங்கள்! பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கிப் பாருங்கள்!  இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! எது சுகம்? இலவம் பஞ்சு மெத்தைதானே. அது போலவே நம் மனதையும் மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நமக்கும், நம்முடன் பழகும் மற்றவர்களுக்கும் அது மென்மையாக, இனிமையாக இருக்கும்.

27. வஞ்சகம் பேசேல்
எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது. மனதில் வஞ்சம் வைத்துப் பேசுவது, பொறாமையோடு பேசுவது, கடுப்புடன் பேசுவது & இவையெல்லாம் மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களைத்தான் உருவாக்கும். கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவது குழந்தைத்தனமான அன்பான எண்ணங்களையே உருவாக்கும். ஆகவே மற்றவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் இயல்பாக பேசுவது நலம்.

28. அழகு அலாதன செயேல்
மற்றவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் இயல்பாக பேசுவது நலம். அது போலவே பிறர் இகழந்து பேசக்கூடிய செயலையும் நாம் செய்யாமல் இருப்பதும் நலம். அது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமானது.

29. இளமையில் கல்
ஐந்தில் வழையாதது ஐம்பதில் வழையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விஷயங்களும் குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதியும். அதுவே பிற்காலத்தில் குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கும். ஆகவே சிறு வயதிலிருந்தே கல்வியைக் கற்பது மிகச் சிறப்பாகும்

30. அரனை மறவேல்
கடவுளை வணங்க மறக்கக் கூடாது. இன்பமாக இருக்கும் போது மறந்து விடுவதும், துன்பம் வரும்போது மட்டும் கடவுளைத் தேடுவதும் மனித இயல்பு. அவ்வாறு இல்லாமல் எப்பொழுதும் கடவுளை மறக்காமல் வணங்கி வந்தால் கடவுள் அருள் நமக்கு கிடைக்கும்.

31. அனந்தல் ஆடேல்
கடலின் ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கக் கூடாது. அதோடு கடலின் அலைகள் எப்போது பெரிதாகும்? எப்போது சிறியதாக வரும் என்று தெரியாமல் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும். 

32. கடிவது மற
கடுமையான சொற்களை பயன்படுத்தி பேசக்கூடாது. பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களை பயன்படுத்தக் கூடாது. ஒரு நண்பனை உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால் ஒரு எதிரியை உருவாக்க ஒரு கடுஞ்சொல் போதும். கடுமையான பேச்சு ஒரு நண்பனையே பகைவனாக்கிவிடும். ஆகவே எப்பொழுதும் கடுமையான சொற்களை தவிர்த்து இனிமையாக பேச பழகிக் கொள்ள வேண்டும். 

33. காப்பது விரதம்
மூன்று வேளை பட்டினி கிடந்து மூன்றாவது வேளையில் வயிறு முட்ட சாப்பிடுவது விரதம் அல்ல. பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் அதைக் காத்து இரட்சிப்பதுதான் உண்மையான விரதம் ஆகும். இதை வேறு விதமாக சொல்வதென்றால் பிற உயிர்களை கொன்று தின்னும் வழக்கத்தைக் கைவிட வேண்டும்.

34. கிழமைப் பட வாழ்

தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் உதவியாக வாழ வேண்டும். ஏதோ பிறந்தோம். ஏதோ வாழ்ந்தோம் என்று இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வாழ வைப்பவனே மனிதன். முதலில் நம்மையும், நம் குடும்பத்தாரையும், பிற சொந்தக்காரர்களையும், அதன் பிறகு நண்பர்களையும் வாழ வைக்க வேண்டும். இறுதியாக முடிந்தால் ஊருக்காக உழைக்கலாம். 

35. கீழ்மை அகற்று

மற்றவர்கள் முகம் சுழிக்கக்கூடிய வகையில் கேவலமான, கீழ்த்தரமான செய்கைகளை செய்யக் கூடாது. அந்த மாதிரியான எண்ணங்களை நம் மனதிலிருந்தே அகற்றி விட வேண்டும். 

36. குணமது கைவிடேல்
நல்ல குணங்களை விட்டுவிடக் கூடாது. நல்ல குணம் என்பது நம்முடன் கூடப் பிறந்தது. பிறருக்கு உதவுவதும், நல்ல விஷயங்களையே நினைப்பதும், செய்வதும்தான் நல்ல குணங்கள். அத்தகைய நல்ல குணங்களைப் பெற்றவர்கள் சிலர் இருப்பதால்தான் இவ்வுலகில் சிறிதேனும் மழையாவது பெய்கிறது. அவர்கள் தங்கள் குணங்களை மாற்றிக்கொள்ளாமல் வாழ வேண்டும். 

37. கூடிப் பிரியேல்
நல்ல நண்பர்களை விட்டு பிரியக் கூடாது. நல்ல குணங்கள், பண்புகள் கொண்டவர்களோடு தொடர்பு கொண்டு நண்பர்கள் ஆன பிறகு எக்காரணம் கொண்டும் அவர்களை விட்டுப் பிரியக்கூடாது. ஆபத்தான காலகட்டங்களில் நமக்கு உதவி செய்ய, நாம் அழைக்காமலே ஓடி வருபவர்கள் நல்ல நண்பர்கள்தான். 

38. கெடுப்பது ஒழி
யாருக்கும் கெட்டது செய்யக்கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டது செய்ய வேண்டாம். கெட்டதை செய்யும் எண்ணத்தை மனதாலும் நினைக்கக் கூடாது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் வராது.

39. கேள்வி முயல்
அறிஞர்கள் சொற்களை கேட்டுத் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு புத்தகங்களைப் பார்த்திருந்தாலும், படித்திருந்தாலும்கூட நல்ல அறிஞர்களின் பேச்சுக்களை ஆவலுடன் காது கொடுத்து கேட்க வேண்டும். அதோடுமட்டுமல்ல & சந்தேகங்களை கேட்டு தெளிந்து அதை பின்பற்றி நடந்து கொள்ளவும் வேண்டும்.

40. கைவினை கரவேல்
கைத்தொழில்களை கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட ஒரு தொழிலை செய்ய கற்றுக் கொண்டால் நம் சொந்த காலிலே நின்று கொள்ளலாம். அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகாமல் இருக்கும். அவ்வாறு கற்றுக்கொண்ட கைத்தொழிலை அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் இன்னும் சிலருக்கு வாழ கற்றுக்கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்.

41. கொள்ளை விரும்பேல்
மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாதே. இருப்பதைக் கொண்டு இனிய வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பேராசைப்பட வேண்டாம். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட வேண்டாம்.

42. கோதாட்டு ஒழி
ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடாதே. அது நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தால், அத்தகைய விளையாட்டுகளை தவிர்த்து விடலாம். தீ சுடும் என்று தெரிந்தும் சுட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது அல்லவா? 

43. சக்கர நெறி நில்
அரசு ஆணைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும். நடைமுறை நெறிகளை வகுத்து அதை ஆணையாக மாற்றி தருவதுதான் அரசாங்கம். அரச கட்டளையை மதித்து நடப்பவனே நேர்மையானவன். நேர்மையானவன் வாழ்வில் என்றும் வெற்றி பெறுவான்.

44. சான்றோர் இனத்திரு
அறிஞர் பெருமக்களின் குழுவோடு சேர்ந்து இருப்பது பெருமை ஆகும். செல்வம் இருக்கும் இடத்தில்தான் பெருமை. ஆனால் கல்வி கற்றவைகளுக்கு செல்லும் இடமெல்லாம் பெருமை. பூவோடு செர்ந்த நாரும் மணம் பெரும். அதுபோல அறிவில் சிறந்த பெரியவைகளின் உறவால் நாமும் சிறப்பு பெறலாம். 

45. சித்திரம் பேசேல்
பொய்யை உண்மை போல பேசக் கூடாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பப் பேசினால் அது உண்மையாகி விடும் என்பார்கள். ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல நேரிடும். அதன் விழைவு & நாம் கெட்டவர்களாவதுடன் அடுத்தவர் மனதை புண்படுத்துவதுடன், அடுத்தவர் வாழ்வை கெடுத்தும் விடும். 

46. சீர்மை மறவேல்
நல்ல செயல்களை மறந்துவிட வேண்டாம். மனம் போல் வாழ்வு என்பார்கள். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்லதையே செய்ய நினைக்க வேண்டும். நல்ல எண்ணங்களே நல்ல செயல்களாக உருவெடுக்கும். நல்ல செயல்களை செய்யும் போது நல்ல நண்பர்களும், நல்ல உறவுகளும் உருவாவார்கள். நம்மைச் சுற்றி நல்லவர்கள் கூடும்போது நம் வாழ்வும் சிறப்பாக இருக்கும்

47. சுளிக்கச் சொல்லேல்
மற்றவர் முகம் கோணும்படியான சொற்களை பேசக்கூடாது. காதால் கேட்பதற்கே கூசும்படியான அருவெருப்பான, கேவலமான பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். கையால் ஒரு அடி அடித்துவிட்டாலும் அன்பால் அதை மறந்துவிட செய்யலாம். ஆனால் வாயால் பேசும் ஒரு தீய வார்த்தை மனதை விட்டு அகலாது. 

48. சூது விரும்பேல்
சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம். சூதாட்டங்களினால் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும்தான் உண்டாகும். சூதாட்டங்களில் விளையாடி மனைவியையும், நாட்டையும் இழந்த பாண்டவர்கள் கதையை கேட்டிருப்போம். சூதாட்டத்தில் வீட்டையும், பொருளையும் இழந்தவர்கள் ஏரளம்.

49. செய்வன திருந்தச் செய்
செய்யும் வேலையை திறம்படச் செய்ய வேண்டும். நாம் செய்ய நினைக்கும் வேலையை மனதாலும், உடலாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த வேலையில் நம் திறமையைக் காட்ட முடியும். நமக்கு திருப்தி வந்தால்தான் வாடிக்கையாளரை நாம் திருப்திப்படுத்த முடியும். ஆகவே நமக்கு கொடுத்த வேலையை சுத்தமாக செய்து கொடுக்க வேண்டும்.

50. சேரிடம் அறிந்து சேர்
நல்ல நண்பர்கள், நல்ல அறிஞர்கள் என்று தீர ஆராய்ந்து அவர்களோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும். ஆனால் பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும். எனவே தரம் அறிந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

51. சை எனத் திரியேல்
மற்றவர் நம்மை இகழ்ந்து பேசும்படி நடந்து கொள்ளக் கூடாது. ‘ச்சே! உன்னைப் போயி.....’ என்று வார்த்தையை முடிக்காமலே பேசுவார்கள். அந்த மாதிரி பேசுவதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.  

52. சொல் சோர்வு படேல்
யார்கூட பேசினாலும் நம் பேச்சு இறுக்கமாகவோ அல்லது மனம் தளர்ந்த சோர்வான பேச்சாகவோ இருக்கக் கூடாது. இயல்பான பேச்சாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பான, தன்னம்பிக்கையான பேச்சு நம் வாழ்வில் உயர்வை கொடுக்கும்.

53. சோம்பித் திரியேல்
எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது. எந்த முயற்சியும் எடுக்காமல் சோம்பேறித்தனமாக ஊரைச் சுற்றித் திரியக் கூடாது. மற்றவர் எதிரில் நின்று பேசும்போது சோம்பல் முறிக்கக் கூடாது. சோம்பேறித்தனம் தூக்கத்தையே கொடுக்கும். வெற்றியை கொடுக்காது. 

54. தக்கோன் எனத் திரி
நம்மை கௌரவமானவன் என்று பிறர் எண்ணும்படி நடக்க வேண்டும். நம்மை பார்க்கும்போதே நம் மீது ஒரு மரியாதை வரும்படியாக நடந்து கொள்ள வேண்டும். அது பயம் கலந்ததாக இருக்கக் கூடாது. கௌரவமான மரியாதையாக இருக்க வேண்டும். 

55. தானமது விரும்பு
இல்லாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது அன்னதானம். அடுத்தவர் பசியை போக்க அன்னதானம் செய்யலாம். அந்தணர்களுக்கு பசு தானம் செய்வது புண்ணியத்தைக் கொடுக்கும்.

56. திருமாலுக்கு அடிமை செய்
பெருமாள் கோவிலுக்கு சென்று சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும். ஆக்கல், காத்தல், அழித்தல் & இம்மூன்றில் காத்தல் தொழிலை செய்யும் பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும். ‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி‘. அப்போ வயதில் பெரிய முதியவர்களுக்கு செய்யும் சேவையும் பெருமாளுக்கு செய்த மாதிரிதானே?

57. தீவினை அகற்று
பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களை அறவே செய்யக் கூடாது. நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. தெரிந்தும் தீய செயல்களை செய்ய மனதாலும் நினைக்க வேண்டாம்.

58. துன்பத்திற்கு இடம் கொடேல்
பிறர் மனம் வருந்தும்படியாகவோ, மனம் புண்படும்படியாகவோ நடந்து கொள்ளக் கூடாது. பேசவும் கூடாது.

59. தூக்கி வினைசெய்
எந்தக் காரியத்தை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் பொறுமையாக தீர ஆரய்ந்து அறிந்து செய்ய வேண்டும்.

60. தெய்வம் இகழேல்
நாம் வணங்கும் கடவுளை இகழ்ந்து பேசக்கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் & இவர்களை இகழ்ந்து பேசினால் பாவம் சேரும். இவர்களிடம் தலை வணங்கி பேச வேண்டும்.

61. தேசத்தோடு ஒத்து வாழ்
ஊரோடு ஒத்துப் போ! என்பார்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நிலை வந்து சேரும். நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்தால் நமக்கு உயர்வு நிச்சயமகக் கிடைக்கும்.

62. தையல் சொல் கேளேல்
மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு நடக்கக் கூடாது. மனைவி மந்திரி மாதிரி என்பார்கள். நல்ல அறிவுரைகளை சொல்லி வழி நடத்துபவர்களே நல்ல மந்திரிகள். அவ்வாறில்லாமல் தவறான வழிகாட்டும் மனைவியின் சொல் கேட்டு நடப்பவர்கள் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

63. தொண்மை மறவேல்
காலங்காலமாக செய்து வரும் பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது. இன்றைக்கும் நாம் செய்யும் பல காரியங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நம் மூதாதையர் தொன்று தொட்டு செய்து வரும் காரணகாரியங்களே! வயதில் மூத்த பெரியவர்கள் இருக்கும் வீடு நிச்சயம்  சுபிட்சமாக இருக்கும்.

64. தோற்பன தொடரேல்
தோல்வி பயம் கூடாது. இருந்தாலும் தோல்வி நிச்சயம் உண்டாகும் என்று தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது. தீ சுடும் என்று தெரிந்தும் கையை சுட்டுக்கொள்வது முட்டாள்தனமானது அல்லவா?

65. நன்மை கடைப்பிடி
நல்ல காரியங்களை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் நன்மை தரும் செயல்களையே நாம் எப்போதும் செய்ய வேண்டும். மற்றவர்கள் நன்றாக இருந்தால்தான் அவர்களால் நமக்கு தொல்லைகள் இருக்காது. எனவே நாமும் நன்றாக இருப்போம்.

66. நாடு ஒப்பன செய்

நாட்டு மக்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகளைத்தான் சம்பாதித்துக்கொள்ள முடியும். நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்வதைவிட எதிரிகளை உருவாக்கிக்கொள்ளாமல் இருப்பது ரொம்ப நல்லது.

67.நிலையில் பிரியேல்
நம் தரத்தை விட்டுக் கொடுத்து கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது. நமக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது. நம் பேச்சும், நடத்தையும் அதற்கு தகுந்தாற்போல இருக்க வேண்டும். 

68. நீர் விளையாடேல்
ஆபத்து நிறைந்த காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி நீந்தக் கூடாது. அவரவர் பலம் அவரவர்க்கு. தேங்கிக் கிடக்கும் நீரில் நீந்துவதும், காட்டாற்று வெள்ளத்தில் நீந்துவதும் வேறு வேறு. காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவதைவிட நீர் போகிறபோக்கில் சென்று கரை ஏறுவதே புத்திசாலித்தனம். வாழ்க்கையிலும் அப்படித்தான்.

69. நுண்மை நுகரேல்
நோயை உண்டுபண்ணும் உணவை உண்ணக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உணவே மருந்து. தேவை அறிந்து உண்பது உடலுக்கு நல்லது.  

70. நூல் பல கல்
நிறைய படிக்க வேண்டும். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சிக்கான வெவ்வேறு வகையான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும். செல்வம் இருக்கும் இடத்தில்தான் சிறப்பு. கற்றவர்க்கோ செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

71. நெல் பயிர் விளை
உழவன் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். மக்களின் உணவு ஆதாரனம் அரிசி. அதற்கு விழை ஆதாரமான நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மனிதனின் உணவு தேவை பூர்த்தியானால் மற்றவை தானாகவே நடக்கும்.

72. நேர்பட ஒழுகு
நேர்மையாக இருக்க வேண்டும். சொன்ன சொல் தவறக் கூடாது. வாக்கு சுத்தமாக இருக்க வேண்டும். உண்மை இருக்கும் இடத்தில் நேர்மை இருக்கும். உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வை அடையலாம். 

73. நைவினை நணுகேல்

இகழ்ச்சி தரும் விஷயங்களைச் செய்யக்கூடாது. நாமும் கேவலப்பட்டு அடுத்தவரையும் கேவலப்படுத்த வேண்டாம்.

74. நொய்ய உரையேல்

பிறர் மனம் நோகும்படியாக பேசக் கூடாது. எப்போதும் அன்பான வார்த்தைகளைப் பேச வேண்டும்.  

75. நோய்க்கு இடம் கொடேல்
உடலில் நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் இருக்கும் இடத்தில் நோய் வராது. நம்மை நாமே பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிவகைகளை நாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

76. பழிப்பன பகரேல்

மற்றவர் சாபத்திற்கு ஆளாகாதே. அடுத்தவர் பழிக்கும்படியான இழிவான சொற்களை பேசவும் வேண்டாம். அவர் சாபத்திற்கு ஆளாகவும் வேண்டாம். கல்லடி பட்டாலும் படலாமே தவிர சொல்லடி படக்கூடாது. அளவாக, அன்பாக பேச வேண்டும்.

77. பாம்பொடு பழகேல்

பாம்போடு விளையாட வேண்டாம். எது நல்ல பாம்பு? எது கெட்ட பாம்பு? எது விஷமுள்ள பாம்பு? எது விஷமில்லாத பாம்பு? யாருக்கு தெரியும்? ஆபத்து என்று தெரிந்தும் பாம்போடு விளையாட முடியுமா? ஆனால் கெட்டவன் என்று தெரிந்த பின்பும் அவரோடு பழகுவது நல்லதல்ல.

78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்துக்களை தரும் பேச்சை பேச வேண்டாம். நாம் ஒன்று பேச, அடுத்தவர் அதை வேறு மாதிரி புரிந்துகொண்டு, அதற்கு கண், காது, மூக்கு வைத்து உருவமாக்கி விடுவார்கள். எதையும் நேரிடையாக பேச பழகிக்கொள்ள வேண்டும்.

79. பீடு பெற நில்
மற்றவர்கள் மதிக்கும்படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒருவனுடைய இறப்பில்தான் அவனுடைய உண்மையான மதிப்பு தெரியவரும். உயிரோடு இருக்கும் காலத்தில் முன் ஒன்று பேசுவார்கள். பின்னால் ஒன்று பேசுவார்கள். ஆகவே இப்போது நாம் வாழும் வாழ்க்கையை மற்றவர் மதிக்கும்படியாக வழ்ந்து காட்ட வேண்டும்.

80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழோடு வாழ்ந்த பெரியோர்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும். முன் ஏறு சென்ற தடத்தில் பின் ஏறு சென்றால் ஆழமாக உழ முடியும். கோடு போட்டால் ரோடு போட கற்றுக்கொள்ள வேண்டும். பெரியோர் காட்டிய வழியை பின்பற்றி வாழ்ந்தால் மேன்மை அடைய முடியும். 

81. பூமி திருத்தி உண்
நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும். அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்துக் குடி. அடுத்தவரிடம் கையேந்தாதே!

82. பெரியாரைத் துணைக் கொள்

அறிவார்ந்த பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். கோடி கொடுத்தேனும் பெரியோரை தேடிப்பிடி. அரிய பெரியோர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று, நட்பு பாராட்டி அவர்கள் அறிவுரையை கேட்டு நடந்தால் நம் வாழ்வில் எப்போதும் முன்னேற்றம்தான்.

83. பேதைமை அகற்று
மூடனாக வாழக்கூடாது. எதையும் சிந்தித்து ஆராய்ந்து நடக்க வேண்டும். மூட நம்பிக்கை வேண்டாம். 

84. பையலோடு இணங்கேல்

முட்டாளோடு பழகக் கூடாது. ‘ஒரு வாழப்பழம் இங்கேருக்கு. இன்னொன்னு எங்க? அதாண்ணே இது‘ & இதை கேட்கும்போது சிரிப்பு வரும். இந்த மாதிரி முட்டள்களோடு பழகினால் நம்மையும் அப்படித்தானே நினைப்பார்கள்.

85. பொருள் தனைப் போற்றி வாழ்.
சம்பாதிப்பது பெரிதல்ல. சம்பாதித்த பொன்னையும், பொருளையும் பாதுகாப்பது பெரிது. சேர்த்து வைத்த சொத்தை காப்பாற்றி வாழ வேண்டும். மற்றவர் கண்பட வாழக்கூடாது.

86. போர்த் தொழில் புரியேல்.

சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். போர் என்றாலே அங்கு அழிவு நிச்சயம். போர்க்குணம் என்பது மூர்க்க குணம். கோபப்பட்டு வார்த்தையை விடக் கூடாது. கோபமான நேரங்களில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அது நிச்சயம் தப்பாகத்தான் முடியும்.  

87. மனம் தடுமாறேல்.
மனதில் குழப்பம் கூடாது. எந்த சூழ்நிலையிலும் மனம் கலங்கி, செய்வது அறியாமல் தடுமாற்றம் கொள்ள வேண்டாம். நின்று நிதானித்து பொறுமையுடன் எதையும் செய்வது நல்லது. 

89. மிகை படச் சொல்லேல்
எதையும் அதிகப்படுத்தி பேசக் கூடாது. ஒன்றை பத்தாக்குவதோ, ஈறைப் பேன் ஆக்குவதோ கூடாது.

90. மீதூண் விரும்பேல்

அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதேபோல அளவோடு பேச வேண்டும். அளவுக்கு மீறிய பேச்சும் நம்மீது நம்பிக்கையை குறைக்கும்.

91. முனை முகத்து நில்லேல்.
போர் முனைக்கு செல்பவன் ஆயுதம் இல்லாமல் செல்லக்கூடாது. கோவிலுக்கு செல்லும்போது மனதில் பக்தியுடன் செல்ல வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் இடம் அறிந்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும்.

92. மூர்க்கரோடு இணங்கேல்.
முரட்டுக் குணம் கொண்டவர்கள், அறிவில்லா மூடர்கள் & இவர்களோடு சேரக்கூடாது. ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவனது நண்பர்களைப் பற்றி விசாரித்தாலே போதும் என்பார்கள். 

93. மெல்லி நல்லாள்தோள் சேர்
நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம். அத்தகைய நல்ல மனைவியோடு நன்றாக இணைந்து வாழ்ந்து வீட்டை கொவிலாக்க வேண்டும்.

94. மேன் மக்கள் சொல் கேள்.

பெற்றோர், சான்றோர், ஆசிரியர் போன்ற பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பெரியோர் சொல்பேச்சு கேட்டு நடந்தால் எப்போதும் நன்மையே உண்டாகும்.

95. மைவிழியார் மனை அகல்.
விலைமாதர் வீட்டுக்குப் போக வேண்டாம். ஒழுக்கம் தவறுவதின் முதல் படி விலைமாதர் பழக்கம்தான். அது குடும்ப உறவை சீர்குலைத்து விடும். அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. 

96. மொழிவது அற மொழி
சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும். சொல்லலாமா? கூடாதா? என்கிற சந்தேகமின்றி தெளிவாகக் கூற வேண்டும்.

97. மோகத்தை முனி

பெண் மீது கொள்ளும் அளவுக்கு மிஞ்சிய ஆசையே மோகம். அதுவே அழிவுக்கு வழிவகுக்கும். ஆகவே ஆசையை குறைத்து விடு. ஆசையை வெறுத்து விடு. ஆசையை அடக்கி விடு.

98. வல்லமை பேசேல்
உன்னிடம் உள்ள திறமையைப் பற்றி நீயே புகழ்ந்து பேசக் கூடாது. அவ்வாறு தற்பெருமை பேசினால் மற்றவர்கள் நம்மை மதிக்கக்கூட மாட்டார்கள்.

99. வாது முற்கூறேல்
வலியப்போய் யாருடனும் விவாதம் செய்யக் கூடாது. வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.

100. வித்தை விரும்பு
ஆய கலைகளையும் கற்றுக் கொள்ள மனதில் எண்ணம் வேண்டும். கனவு காண். அப்போதுதான் நீ நினைப்பதை அடைய முடியும்.

101. வீடு பெற நில்

இறைவன் அடிபணிந்து முக்தி அடைய முயற்சி செய்ய வேண்டும். இறை பணியே முக்திக்கு வழி.

102. உத்தமனாய் இரு
ஒழுக்கம் முதலான நல்ல குணம் உள்ளவராக வாழ வேண்டும். அவ்வாறு வாழ்பவர்களே மற்றவர்கள் பின்பற்றி வாழும் உத்தம நிலையை அடைவார்கள்.

103. ஊருடன் கூடிவாழ்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஊர் உறவோடு இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒற்றுமையே உயர்வுக்கு வழி.

104. வெட்டெனப் பேசேல்

வெட்டு ஒன்னு. துண்டு ரெண்டு என்கிற மாதிரி பேசக்கூடாது. ‘வார்த்தையைக் கொட்டாதே! அள்ள முடியாது.‘ என்பார்கள். ஆகவே பேச்சில் கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது நல்லது.

105. வேண்டி வினை செயேல்
தெரிந்தே யாருக்கும் தீமை செய்யக் கூடாது. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்து செய்வது தப்பு. தவறு மன்னிக்கக்கூடியது. தப்பு தண்டனைக்குரியது.

106. வைகறைத் துயில் எழு
சூரிய உதயத்திற்குமுன் கண்விழிக்க வேண்டும். அவ்வாறு எழுபவர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதிகாலை தூக்கம் குடும்பத்திற்கு ஆகாது.

107. ஒன்னாரைத் தேறேல்.
எதிரி என்று தெரிந்த பிறகு அவரிடம் நம்பிக்கை கொள்வது தவறு. தெரிந்தே கிணற்றில் குதிக்கலாமா?

108. ஓரம் சொல்லேல்
எதையும் யாருக்காகவும் ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது அவ்வாறு கூறுவது நீதி தவறுவதாகும். நீதி தவறிய பாண்டிய மன்னனால் மதுரையே எரிந்தது.