Thursday, March 18, 2010

எங்கே செல்கிறது ஊடங்களின் பாதை/ நோக்கம்?!

கலாச்சார சீரழிவு. விசயங்கள் அனைத்தும் அதிர்ச்சிகொள்ளும்வகையில் உள்ளது. ஆம் கலாச்சாரம் சீரழிந்துதான் உள்ளது அதிலும் கொடுமை என்னவென்றால் பெரும் பல‌ கோடிகளும் செல்வாகுகளும் கொண்டவர்களே அதை செய்கிறார்கள் வசதியான வீட்டுபையன் திருடுவதுபோல. இன்று இளைஞர்களையும் சிறுவர்களையும் வெகுவாக அடிமைபடுத்தி அவர்களை அவைகளின் ஆளுமையின் கீழ் வைத்துள்ளன ஊடகங்கள் அவைகளுள் முதன்மையானவைகள் திரைப்படம், வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஒருவனது தனிப்பட்ட உள் எண்ணங்கள் வைத்துக்கொள்வோம் தற்பொழுதிய சூழ்நிலையில். ஆம் சமுதாய அக்கரையோடும், அறிவுசார்ந்த விசயங்களை கொண்டுசெல்லும் பெரும்பொறுப்புகள் மேற்க்கண்ட ஊடகங்க்ளுக்கு இருக்கிறது இல்லையென்று சொல்லிவிடமுடியாது ஏனென்றால் இன்று ஏறக்குறைய இவைகளை கடக்காத எவரும் இருக்கமுடியாதென்று அடித்து சொல்லலாம் அப்படியிருக்க பொறுப்போடு செய்திகளை, கருத்துக்களை வெளிவிடவேண்டும்.

ஆனால் இன்று அப்படியல்ல நிலமை, முதலில் திரைப்படத்திற்க்கு வருவோம் இன்றைய இளைஞர்கள் பட்டாலம் தங்களது தாய் தந்தையரின் புகைப்பட்ங்களை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக கூத்தாடி ஒருவரின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள் அந்த அளவுக்கு அவர்கள் மட்டமான் ஒரு விசயத்தை சாதாரண நிகழ்வாக செய்துவிட்டார்கள். அதற்க்கு ஒரு சில பெற்றோர்களே அதரவு!! திருடு என்பதையே சுட்டுவிடு என்று (அ)நாகரீகமாக சொன்னதது இந்த திரைப்படம்தான். எங்கே போகிறது இளைய சமுதாயம்?! ஒரு கூத்தாடி, புகழ் உச்சானிக்கொம்பில் இருக்கும் ஒரு நட்ச்சத்திர நடிகர் அவருக்கு காவடிதூக்கும் பெரும் கூட்டம்கூட அவரை பின்பற்றிகொண்டு இருக்கிறது என்றுகூட கூறலாம் அவர் ஒரு படத்தில் வந்தார்(நடிக்கவில்லை) மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் அந்த நடிகா சர்வசாதாரணமாக முதல்வரைக்கூட சந்திக்கும் அந்தஸ்து கொண்ட அந்த‌ கூத்தாடி, அந்த படத்தில் கேவலமான இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்களை ஏற்று நடித்திருப்பார் தன்னை மகா ஞானி என்றும் சொல்லும் இவர் தனக்கு கல்யாண வயதில் மகள்கள் இருக்கிறார் என்பதைக்கூட அவர் மறந்து மோசமான காரியத்தை செய்திருக்கிறார்?! ஒரு பெரிய அந்தஸத்தில் இருக்கும் கூத்தாடிக்கு ஒரு பொறுப்பு வேண்டாம? வெறும் பணத்திற்க்காகத்தான் என்றால் பணம் அவரிடம் இல்லாததா?! கூறுங்கள் யாரவது தெரிந்தால்?!

இரண்டாவது காணொளி கூடகம் எனப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள்: ஊடகங்களிலே அதிக சக்திமிக்க ஊடகம் தொலைக்காட்சி எனலாம் இலட்ச்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டது உலகம்முழுவதும். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால், ஒரு பெரும் தொலைகாட்சி அலைவரிசைகளை கொண்ட ஒரு குழுமம், மக்களையோ, இளைஞர்களையோ, சமுதாயத்தையோ அவ்ர்கள் எள்ளள‌வும் கண்டுகொண்டதாக தெரியவில்லை என்பதை சமீபத்தைய ஒரு ஒளிபரப்பு அதை உறுதிசெய்கிறது. அது இதுதான், கடந்த மாதம் மும்பையில் கடந்த ஒருவருடத்திற்க்கு பிறகு புனேயில் குண்டுவெடித்தது அதை அனைத்து ஆங்கில சேனல்களும் திரும்ப திரும்ப காண்பித்தார்கள் மக்களை விழிப்புற செய்யக்கூடிய நிகழ்வு மேலும் வரவேற்க்ககூடியது அது. அசேசமயம் தமிழ் சேனல்கள் ஒவ்வொன்றாக வலம் வந்தபோழுது எந்த ஒரு தமிழ் சேனல்களிலும் அது ஒளிபரப்பப்படவில்லை மீடியாவின் ராஜா என்று சொல்லிதிரியும் அந்த பெரிய நெட்வொக்கில்கூட ஒளிபரப்பாகவில்லை. ஆனால் அதை காண்பிக்காத அதே சேனல் போன வாரம் ஒரு காணொளியினை ஒளிபரப்பு செய்தது அதுவும் கொஞசம் கூட எடிட் செய்யாமல் அவர்களது படத்தைக்கூட எடிட்செய்து வெளியிடும் அவர்க்ள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பசெய்து குடும்பத்தோடு பார்த்துகொண்டிருப்பவர்களை கூசவைத்தது.. அன்று குண்டுவெடிப்பு ஒரு செய்தி அதுவும் ம்றுநாள் செய்தியோடு ஒளிபரப்பிய அந்த சேனல் இதைமட்டும் கொஞசம்கூட பொறுப்பில்லாமல் திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்கின்றது எங்கே செல்கிறது அவர்களது நோக்கம் மக்களை கீழ்த்தரமான எண்ணங்களை உசுப்பேற்றுவது போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அக்குழுமம் தீவிரம்காட்டுகிறது அதன் மூலம் தனது கல்லா நிறைந்தால் போதும் என்று குறுகிய மனப்பாண்மையோடுயிருக்கிறது. ஏன் இவர்களாம் ஒரு டிஸ்கவரி, ஹிஸ்டரி, நேட்கியோ போன்ற ஒரு அலைவரியை ஏற்ப்படுத்தமுடியாது?! பணமில்லைய இல்லை செல்வாக்கில்லையா? இருக்கிறது அவர்களுக்கு சமுதாயத்தின்பால் மக்க்ளின்பால் அக்கரை இல்லை.

அடுத்துவருவோம் வாரயிதழ்கள்!! இன்றையா வார இதழ்கள் அனைத்தும் நல்ல விசயங்களை கருத்துக்களை வெளியிடாமல் கூத்தாடிகளின் அந்தரங்கத்திலிருந்து அவர்களின் அம்பலம் வரை ஒவ்வொரு செய்திகளை இன்ஞ் இன்ஞ்சாக தெரிந்துவைத்து வெளியிடுகிறாக்ள். பக்கத்திற்க்கு பக்கம் அவர்களின் டேட்டா பேஸைத்தான் வெளியிடுகிறாகள் இவைகளை தெரிந்து மக்களுக்கு சமுதாயத்திற்க்கு என்ன பயன்? இவர்களுக்கு அதிக பிரதிகள் விற்க்கவேண்டும் என்பதற்க்காகந் மிகவும் கீழ்த்தரமான செய்திகளை வெளியிடவும் தயாராகிவிட்டார்கள். புதிதாக ஒரு வார இதழ் வந்தது புதியதலைமுறை என்ற பெயரோடு அது வெளிவந்த சில மாதங்களிலேயே பல இலட்ச்சம் பிரதிகளை தாண்டிவிட்டதாக கேள்வி. அதற்க்கு அவர்கள் சினிமா சம்பந்தமாக ஒரே ஒரு பக்கம்தான் அதுவும் கலைஞர்களை ஊக்கிவிக்கு நோக்கில் வெளியிடுகிறார்கள். அதை நாம் வாரயிதழ் என்று சொல்லலாம்?! இதழ்கள் முழுவதும் அவ்வள்வு கருத்துக்கள் மக்களுக்கு சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாற்று கருத்து இருந்தால் கூறுங்கள்?!

இவ்வகையில் மக்களை, இளைஞர்களை, சமுதாயத்தை பெருவாரியாக சென்றடையும் மேற்க்க்ண்ட ஊடகங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கிறது? அவர்களின் நோக்கம் பணம் மட்டும்தானா? அவற்றையும் தாண்டி வரமுடியாதா? விடைதெரிந்தால் சொல்லுங்கள்?!