Skip to main content

Posts

Showing posts from July, 2010

எனது "கடவுள்"

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவ்ன் முதற்றே உலகு. - வான் புகழ் வள்ளுவர். பொருள்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. "கடவுள்" ‍~ இதை அவ்வளவு சுலபமாக யாரும் விளக்கிவிடமுடியாது. முதலில் கடவுள் என்பது ஏதோ கற்ப்பனையில் நாம் வடித்துகொண்ட உருவமலல! உருவமில்லாதவற்றை உணரும் திறனில்லாத பாமரனுக்காக வடிக்கப்பட்டதுதான் உருவங்கள்! அதை மேன்மேலும் அழகாக்கி அழகுபார்க்க நினைத்தபோது உருவானதுதான் ஆலயங்கள்! உண்மையில் நாம் அனைத்து கடவுள் உருவங்களயும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அந்த தோற்ற்ங்களின் உண்மையான் அர்த்தம்.. அது அனைத்து உயிரிடத்திலும் மனிதர்களாகிய நாம் அன்போடு பற்றோடு இருக்கவேண்டும். அன்பொன்றே உயிர்களிடத்தில் அடிப்படையானது அது ஒன்றே நம் துன்பங்களிலிருந்து விடுவிக்கவல்ல ஒரு அருமருந்து! அந்த அருமருந்தின் தத்துவங்கள்தான் "கடவுள்" ~ நாம் அதை கண்களால் காணமுடியாது அதை நாம் உணரத்தான் முடியும். இன்றைய உலகில் அந்த விலைமதிக்கமுடியாத் அன்பெனும் அருமருந்து வறண்டுகொண்டிருக்கிறது அதன் பயனாகத்தான் நாம் துன்பங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம்!