Skip to main content

Posts

Showing posts from August, 2010

பெரியகோயில் 1000-வது ஆண்டுவிழா: தஞ்சை

இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர். தரணிபுகழ் மிக்க மாமன்னன் தோற்றுவித்த பெருவுடையார் ஆலயம் உயர்ந்தந் செருக்கோடும் கலைநயத்தோடும் மாமன்னன் ராஜராஜன் புகழ் திக்கெட்டும் பரவுமபடி அது 1000 ஆவது ஆண்டில் வீரநடை போட்டுகொண்டிருக்கிறது. மாமன்னன் அவர்களை வாழ்த்த நம்க்கெல்லாம் அருகதையில்லை அந்தளவுக்கு பரந்த அறிவும் தீரமான் வீரமும் கலையின் மீது தீராத ஆர்வமும் கொண்ட தலைவர்கள் சிலரைத்தவிர யாருமில்லை. இந்திய சாம்ராஜ்ஜியங்களிலே சோழ பேரரசில்தான் கப்பல்படை இருந்தது அதுவும் இந்திய எல்லைகளை கடல்தாண்டி கடாரம், சாவகம், சுபத்திரா, பர்வதம், இலங்காபுரி போன்ற தீவுகளையும் நாடுகளையும் வெற்றிகொ