Skip to main content

Posts

Showing posts from November, 2010

நாடுகள் தோறும் காடுகள் வளர்ப்போம்!

தவறான வேளாண் சாகுபடி நுட்பங்கள், ரசாயன இடுபொருள்கள் தவிர பயிர் சாகுபடித் திட்டம் எனப் பல்வேறு அதிரடித் திட்டங்கள் மூலம் 1950-களில் விவசாயத்தில் வெற்றி காணச் செய்த முயற்சியின் விளைவு, சுற்றுச்சூழல் பாழ்பட்டுப்போய் விளையும் மண்ணே நோய்வாய்ப்பட...்டுக் கிடக்கிறது. இந்த நிலையிலாவது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பயிரினங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காது, உணவுப் பொருள் உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குறைந்து போவதோடு, நச்சுத்தன்மை மிகுந்ததாகவும் இருக்கும். தட்பவெட்ப நிலை மாறுபாடு ஏற்பட்டு பூமியில் பிரளயம் நிகழும். நாம் எதிர்கொள்ளவிருக்கும் இந்தச் சீர்கேடுகளையும், பேரழிவினையும் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பதுதான். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல; வனம் வனமாய், தோப்புத் தோப்பாய் காணும் இடமெல்லாம் பச்சைப் போர்வை படரச் செய்ய வேண்டும். மொத்தமுள்ள நிலப்பரப்பில் 3-ல் ஒரு பங்கு மரங்களும், செடி கொடிகளும் சூழ்ந்த தாவரப் போர்வையாக இருக்க வேண்டும். நம் நாட்டில் இப்போது 5-ல் ஒரு பங்குகூட தாவரப் போர்வை இல்லை. பசுமை இல்லை. வனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்