Skip to main content

Posts

Showing posts from August, 2011

அன்னா ஹஸாரே கைது

இந்திய ஜனநாயக நாட்டில் அகிம்சை வழியில் போராடிகொண்டிருக்கிற ஒரு ஒப்பற்ற தியாகி அன்னா ஹஸாரே வினை கைது செய்திருப்பதன்மூலாம் ஊழலால் கரைபட்டுகொண்டிருக்கும் காங்கிரஸின் கபடபுத்தி தெள்ளதெளிவாகிறது! இந்த நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த போராட்டமாக அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட சுதந்திரபோராட்டத்தினை டைம் பத்திரிக்கை சுட்டிகாட்டியது அவ்வழியில் காந்தியவாதியான திரு அன்னா அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்க்கு அனுமதி மறுத்தும் அவரை கைதுசெய்திருப்பதும் நாட்டில் குடிமக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது அப்படி அவரொன்றும் அவரது சொந்த நலனுக்காக போராடவில்லை நாட்டையே உலுக்கிகொண்டிருக்கும் ஊழல் என்று கிருமியினை வலுவான சட்டம்கொண்டு அழிக்க வேண்டு மென்பது அவரதுமட்டுமல்ல அவரைப்போன்ற தூயள்ளம் கொண்ட இந்தியர்களின் எண்ணமாக கொண்டுதான் போராடுகிறார். சுமார் அறுபது ஆண்டுகாலாமாக ஆட்சிகட்டிலில் கோலோச்சிகொண்டிருக்கும் இந்த காங்கிரஸ் கட்சியில்தான் போபார்ஸ் ஊழலிருந்து தொடங்கி இன்று ஸ்பெக்ரம், ஆதர்ஸ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது! இந்த காங்கிரஸ் ஆட்சியிருக்கும

தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர் -- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். " நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான் பறப்பேன், பறப்பேன், பறப்பேன் ' என்று உங்களுக்குள் திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள். இந்த புவியில், இளைஞர்களின் ஆற்றல்தான் பெரிய ஆற்றல். இந்தியாவின் சமூக பொருளாதார நிலையை மாற்றும் சக்தி மாணவர்களின் செழுமையான சிந்தனைக்கு மட்டுமே உண்டு. 2020ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்கிற வல்லரசுக் கனவு, இந்தியாவுக்கு உண்டு. இந்த லட்சியத்தை எட்ட, தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். பல்பையும், வெளிச்சத்தையும் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசனும், விமானங்களைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், கணிதம் என்றதும் சீனிவாச ராமானுஜமும், "பிளாக் ஹோல்' என்றதும் சுப்ரமணியன் சந்திரசேகரும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்துவத்துடன் இயங்கியவர்கள்; தமக்கென்று ஒ