Thursday, July 11, 2013

மூத்தகுடிமக்கள் யாவரும் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து தமிழனின் தமிழகத்தின் பாரம்பரிய‌ பெருமைகளை கட்டமைப்புகளை மீட்டெடுப்போம்!

மிகத்தொண்மையான அரசப்பாரம்பரியம் கொண்டது நம் வன்னியகுல சத்ரியர்கள் பேரினம்!

பெரும்பாறைகளையும் கற்களையும் குடைந்து பல குடவரைக்கோவில்களையும் கற்றழிகளையும் சிற்ப்பங்களையும் தோற்றுவித்த உயர்திரு. நரசிம்மவர்ம பல்லவம் அவரது பணிகளை ஏற்று செவ்வனே செய்து முடித்த உயர்திரு. பரமேசுவர்ம பல்லவரும் அவரது இளவல் உயர்திரு. இராசசிம்ம பல்லவரும் இணைந்து இன்றைய மாமல்லபுரம் (மாமல்லை), காஞ்சி (கைலாசநாதர் மற்றும் ஏகாம்பரேசுவர் ஆலயங்கள்) போன்ற ஊர்களில் தோற்றுவித்து அழியாத பல கலை கலஞ்சியங்களை உலகிற்க்கு வழங்கிய வேந்தர்களின் வழிவந்தது வன்னிய பேரினம்!

மற்றொரு பல்லவகுல தோன்றல் உயர்திரு. கருணாகரத் தொண்டைமான் முதல் வடக்கே இமயம் வரை படைநடத்தி சென்று வென்று தமிழ் அரசை நிலைநாட்டிய பேரரசர் உயர்திரு. மும்முடிசோழர். ராசராசசோழ தேவரும் கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, ஜாவா மற்றும் கடாரம் (மலேசியா) நாடுகளை வென்று தமிழகத்தின் உன்னத ஆட்சியை அங்கேயும் நிலைநாட்டி தமிழனின் பெருமையை பறைசாற்றிய‌ உயர்திரு. ராசேந்திர சோழதேவரும் அவருக்கு பேருதவியாக இருந்து அவரது ராஜதூதனாக சீனம் வரை சென்றவரும் அரசகவி புலவர். சேக்கிழாரிடத்தில் பெரியபுராணம் என்ற சைவ பொக்கிசத்தை உருவாக்க கோரிய உயர்திரு. அநபாயச் சோழ தேவரும் தோன்றிய குலத்தில் உதித்த வன்னியப்பேரினம்! 

இவ்விதம் உயர்திரு. இராசராச சோழ தேவரும் உயர்திரு. இராசேந்திர தோழ தேவரும் வெற்றுகரமாக ஆட்சியமைத்து நமது ஒருங்கிணைந்த முந்தைய தமிழ் மன்ணையும் பாரம்பரியத்தையும் காத்துவந்தது பல குறுநில சமுதாய மன்னர்களின் ஒத்துழைப்பாலும் பேருதவியாலும் என்றால் அது மிகையாகாது. மாட்சிமை மிக்க பழுவேட்டையார் சமுதாயமும் வீரமிக்க செம்பியான் குல‌ சமுதாயங்களும் இன்னும் பற்ப்பல சமுதாயஙக்ளும் இணைந்து ஒன்றுபட்டும் ஓரணியில் இருந்துதான் பழ‌ம்பெரும் தமிழ்நாட்டினை ஆண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை நாம் வரலாற்றில் காண முடிகின்றது! 


பாரபட்சமற்ற ஆங்கிலேயன் அங்கீகரித்த தென்இந்தியாவின் மூத்த போர்குடி மக்கள் வன்னிய பெருங்குடி மக்கள்!

ஆகையால் தான் இன்றுவரை தமிழக கெஜட்டில் உள்ள தமிழ் சத்ரிய குலம் என்பதாக வீரவன்னிய பிரிவு உள்ளது! 

இனி அதை முழுமையாக உணர்ந்து, முற்போக்கான வீரத்துடன் நடப்போம்! அதாவது அரசின் எந்த சொத்துக்களையோ, பொது சொத்துக்களையோ எப்போதும் சேதப்படுத்தாமல், நெஞ்சம் நிமர வைத்த நமது முன்னவர் "நாகப்பன் படையாட்சி" போல் அமைதியான வழியில் நமது உரிமைக்கான அதிகாரமையத்தை பெற‌ போராடுவோம்!!

ஆதலால் தமிழ்நாட்டிலுள்ள‌ மூத்தகுடிமக்கள் யாவரும் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து மீண்டும் பழைய பெருமைகளை கட்டமைப்புகளை மீட்டெடுப்போம்!

திராவிட ஓநாய்களின் தந்திரத்தால் விழுந்து இன்றுவரை
தன்னையும் தனது பெருமைகளையும் அழித்துவிட்ட தமிழ்பேரினமே!

நீ ஏன் ஜாதியே இல்லை என்று சொல்லும் தலைவனை எதிர்ப்பார்க்கிறாய் ?.
உனக்குள் வீரம் செத்துவிட்டதா ??
உனக்குள் போராடும் திறன் குறைந்துவிட்டதா ??
தமிழினமே நீ அரசாண்ட இனத்தில் பிறந்தும் 
ஏன் எவனுக்கோ அடிபணிகிறாய் ??.
தனி ஆளாக நின்று நீ பல சாகசம் புரியும்போது 
ஏன் சொந்தங்களோடு சேர மறுக்கிறாய் ??
இன்று யார்யருக்கோ பாதிப்பு என்று நினைக்கிறாயோ ??
அது நாளை உனக்கும் நடந்தால்! ?? 

அன்று உன்னைப்போல அப்பாவிகள் தானே 
இடஒதுக்கீடு போராட்டத்திலும் மரக்காணம் கலவரத்திலும் குருபூஞைகளிலும் கொல்லப்பட்டவ‌ர்கள்! ??.
நான் உன்னை வாள் எடுக்க சொல்லவில்லை 
ஒற்றுமையோடு சாதிக்காக வா என்றுதான் சொல்கிறோம்!! 

வடக்கிலிருந்து வந்து "திராவிடம்" என்று உன்னை யாரோ ஆட்டிவைக்கிறார்கள் ??
ஆனால் பூர்வீக குடிகளோடு நீ ஏன் சேர மறுக்கிறாய் ?
எவனோ உன்னையும் அடக்க நினைக்கிறான்,
மற்றவரையும் அடக்க நினைக்கிறான்!.

நம் இருவரின் நிலை இப்படி இருக்கையில் 
நாம் சேருவதில் என்ன தப்பு இருக்கு ??
வடகே வன்னிய குல சத்ரியர்கள், 
தெற்க்கே முக்குலத்தோர்கள்,
மேற்கே வெள்ளாளர்கள் 
நாம் சேர்ந்து ஆளுவோமே !??. நம்மால் முடியாதா ??... 
எவனுக்கோ அடங்கி போவதற்கு 
நாம் நம் தோழமையோடு தோள் கொடுப்போமே ??


தமிழ்பூர்வகுடி சமுதாயங்கள் இணைவதில் என்ன பிழை இருக்கின்றது?!
வாருங்கள் ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! 

பிறகு நாளை நமதே! இத் தாய்தமிழ் நாடும் நமதே!!

Tuesday, July 9, 2013

என்ன கொடுமை இது! உலகத்தில் எங்கும் நடக்காத வஞ்சக அரசும் நீதியும் இங்கே தமிழகத்தில் நடைபெறுகின்றது.!!

மரக்காணம் கலவரம் வரையில் பல்வேறு உயிர்கள் அந்த குருமா கும்பலினால் பறிக்கப்பட்டிருக்கின்றது அதற்க்கு நீதி கேட்டு வந்து போராடியவரை ஈவு இரக்கமின்றி கொஞ்சிறையில் வைத்து கொடுமை படுத்தியது அதை தொடர்ந்து தமிழகமெங்கும் பல்வறு தலைவர்கள் மற்றும் மக்கள் குண்டாஸ் மற்றும் தே.பா.கா. தடுப்புச்சட்டத்தில் கைது செய்து மேலும் அதன் வஞ்சகத்தை தீர்த்துகொண்டது.

அது ஒருபுறம் இருக்க, மாவீரர் குரு உள்ளிடவர்களை தே.பா.கா. தடுப்புச்சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியபின்பும் அதே சட்டத்தில் மறுநாள் மீண்டும் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார் இதை எந்த நீதிபதியும் கண்டிக்கவும் இல்லை கருத்தில் கொள்ளவும் இல்லை! ஊடகஙக்ளோ பத்ரிக்கைகளோ ஒரு சிறு கண்டனத்தைக்கூட தெரிவிக்க வில்லை.

ஆனால், 19வயதே கடந்த ஒரு தருதலை சிறுவனின் கிறுக்கதனத்தால் விளைந்த கன்றாவின் காரணமாக பல்வேறுகாட்சிகள் ஒரு தருதலை கட்சியாளும் வஞ்சக ஆட்சியாளராளும் அரங்கேற்றப்பட்டது அதன் விளைவாக அந்த சிறுவனே கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கின்றான் அதை அம்மாவட்ட டிஜிபி உறுதிபடுத்துகின்றார்.

ஆனாலும் அந்த தருதலை கட்சிகளின் தூண்டுதலின் பேரில் அவனது சடலம் இரண்டாம் முறையாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது அதையும் ஒரு நீதிபதி ஆய்வு செய்கின்றார் என்ன இழவு ஆட்சி இது? என்ன கீழ்த்தரமான ஆட்சி இது? நீதிபதிகளே இப்படி நடந்துகொண்டால் நீதிக்கு நாம் எங்கே செல்வது?!

நாட்டில் எத்தனையோ தற்கொலைகள் தினந்தோறும் நடைபெற்றுகொண்டுதானிருக்கின்றது
, அநேக பருவவயதினர்கள் பக்குவமில்லாத காதலில் விழுந்து தற்கொலை செய்கின்றனர், கள்ளக்காதலில் ஈடுபடுவரும் தற்க்கொலை செய்கின்றனர்.

அதைவிட விவசாயிகள் அரசின்மீது கொண்ட கோபத்தால் தன் துயர்துடைக்க எந்த அரசும் முன்வரவில்லையே என்று தற்க்கொலை செய்துகொள்கின்றனர் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அரசும், இந்த நீதிமன்றமும், ஊடகங்களும் இதை மட்டும் வெட்டம் வெளிச்சம்போடு விளம்பரம்படுத்தும் காரணம் என்ன?

அவர்களது நோக்கம்தான் என்ன?

தலித்துகளின் ஓட்டுமட்டுமால்தான் வென்றார்களா இவர்கள்? வன்னியர்கள் யாரும் ஓட்டளிக்கவில்லையா?!

இல்லை திராவிட கட்சிகளுடன் கூட்டில்லை என்றநிலைப்பாட்டால் அவர்கள் செய்வதறியாது இப்படி வீண் பழிபோடுகின்றார்களா?!

புறாவிற்க்கு நீதி வழங்கிய பெரும் பெருமைகள் கொண்ட நமது பாரம்பரியம் இன்று வாக்குகளுக்காக வக்கத்துப்போன ஆட்சியாளர்களால் கூனிக்குருகி நிற்ப்பதோடு ஒருசாரர் மட்டும் ராஜ உபசரிப்போடு மற்ற சமூகத்தினரை வஞ்சித்துகொண்டுவருவது பெரும் வேதனைத்தருகின்றது?!

என்னருமை தமிழ்பெருங்குடி மக்களே? சிந்தியுங்கள்!

Wednesday, July 3, 2013

ஏர்முனைக்கு முன்னால் எத்தனை கூர்முனைகள் வேண்டுமானாலும் வரட்டுமே!!

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2. ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3. ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4. ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்
நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்..!


5. செருப்பு தயாரிப்பவன் முதல் சாஃப்ட்வேர் தயாரிப்பவன் வரை அவன் பொருளுக்கு அவனால் விலை நிர்ணயம் செய்துகொள்ள முடிகின்றது ஆனால் இந்த் வக்கத்த அரசுகளால் விவசாயி தனது விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை! இன்னும் கரும்புக்கு 1000 கொடு நெல்லுக்கு 1000 கொடு கொப்பரை தேங்காய்க்கு ஆயிரம் கொடு என்று அவர்கள் அறுவடை செய்யும் ஒவ்வொருவருடமும் ஒரே அக்கப்போர்தான் அரசாங்கத்திடம்! 

என்னருமை விவசாய தமிழ்பெருங்குடி மக்களே சிந்தியுங்கள் விவசாயத்தை பற்றி எள்ளலவு அக்கறை கொள்ளாத கூத்தாடி அரசிற்க்கு சுயநல கொலைஜரின் டெஸோ நாடக கம்பெனிக்கு என்னும் எத்தனை முறை மாறி மாறி அடிமை சாசனம் எழுதி கொடுத்து அடி முட்டாள்களாக வாழ்ப்போகின்றீர்கள்!?

நம்மை ஆள ஒரு தமிழன் உங்களுடைய கண்களுக்கு புலப்படவில்லையா?! சபதம் செய்யுங்கள் நம்மண்ணை ஒரு மண்ணின் மைந்தன் ஆளட்டும் என்று!

அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான். அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு. சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி. இந்த தகவ்ல் நமது நெஞ்சை உருக்குகின்றது!

டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன்வியர்வைக்கு முன் மண்டி இடும்...!

ஏர்முனைக்கு முன்னால் எத்தனை கூர்முனைகள் வேண்டுமானாலும் வரட்டுமே!! 

போராடுவோம்! விவசாயத்தை பேணுவோம்!