சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கருணாநிதிக்கு கடந்த வாரம் மேலும் ஒரு பாராட்டு விழா! எதற்காகப் பாராட்டு என்றால் தமிழ்த் திரை உலகுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிய முதலமைச்சர் கருணாநிதி, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகுக்கும் பையனூர் அருகே குடியிருக்க இடம் வழங்கியிருக்கிறார். இதற்காக, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு நன்றி பாராட்டும் விழாவினை சிறப்பாக நடத்தியது. வீடில்லாதவர்களுக்கு இலவச மனைத்திட்டத்திற்குப் போதிய அரசு நிலங்கள் இல்லாத சூழலில் கூத்தாடிகளுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு நிலம் ஒதுக்கி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதுபோல் உள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரம், விலைவாசி உயர்வு, சேதுக்கால்வாய் எனப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தனக்குத்தானே விருது வழங்கியும் தன்னைப் புகழ்பவர்களுக்கு சலுகைகள் வழங்கியும் காலத்தைக் கடத்தாமல் முதல்வர் கருணாநிதி அவர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூத்தாடிகளின் முதல்வராகவே வரலாற்றில் அறியப்படுவார். இன்றைய நிலைமையில் ஒரு கடைக்கோடி சினிமாக்காரனுக்கு கிடைக்கும் அங்கீகாரம...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"