சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன். தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு- கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெர...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"