தற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது. சில மொழிகள், எஞ்சியுள்ள அம்மொழி பேசும் ஒருவரின் இறப்புடன், உடனடியாக மறைந்து போகின்றன. இதர மொழிகள், இரு மொழி கலாச்சார சூழலில் படிப்படியாக ,அழிந்து போகின்றன. குறிப்பாக, பூர்வீக மொழிகள், பள்ளியில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, சந்தையில் செல்வாக்கு செலுத்தும் மொழி, தொலைக் காட்சியில் ஆட்சி செய்யும் மொழிகளால், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மிக விரைவாக மொழிகள் அழிந்து போகும் ஐந்து பகுதிகளாக, அண்மையில் ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. வடக்கு ஆசுத்திரேலியா, மத்திய தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் உயர் பசிபிக் கடற்கரை மண்டலம், கிழக்கு சைபீரியா, ஒக்லகோமா மற்றும் தென் மேற்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் அனைத்திலும், பலவகையான மொழிகள் பேசும் பூர்வீகக் குடிகள் சொற்...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"