தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நா ட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர்.டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"