ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை. தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) 16. மறவனப்பு (இதிகாசம்) 17. வனப்பு 18. அணிநூல் (அலங்காரம்) 19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 20. நாடகம் 21. நடம் 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்) 23. யாழ் (வீணை) 24. குழல் 25. மதங்கம் (மிருதங்கம்) 26. தாளம் 27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை) 29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை) 30. யானையேற்றம் (கச பரீட்சை) 31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை) ...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"