முதலாம் ராஜேந்திர சோழரின் வங்காள படையெடுப்பின்போது கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை வரலாற்று ஆய் வாளர்களின் கூற்று. ஆனால், வட கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான ஆவணம் தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது. கங்கைகொண்ட சோழரின், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவைகள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன. ராஜேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாள மாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான். இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"