தமிழ் மொழி, பண்பாடு,கலாசாரம் என்பது இன்றுவரை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றுதான் பலராலும் நம்பப்படுகிறது.ஆனால் நாமெல்லாம் அறியாத நம் தமிழ் மொழி தோன்றி இருபதாயிரம் ஆண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், தமிழினம் உலகிலேயே மிகவும் பழமையான இனம், உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.உலக மொழிகளை ஆராய்ந்தால் அவற்றில் தமிழ் சொற்களும், பெயர்களும் வெவ்வேறு வடிவில் இருக்கிறன என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதற்கான ஆதாரம், நம் தமிழும்,தமிழ் பாரம்பரியமும் தோன்னிய குமரிக்கண்டம் இன்றிலிருந்து இருபதாயிரம் ஆண்டுகளுக்க முன்னர் தமிழனின் பிறப்பிடமும், தமிழனின் பாரம்பரியமும் குமரிக்கண்டம்தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது அன்றே நம் தமிழ் மேதைகளினால் கண்டறியப்பட்டு பெயர் சூட்டப்பட்ட கடல் கோளினால் இக்கண்டம் அழிந்து போனது. முச்சங்க வரலாற்றிலும்,சிலப்பதிகார உரைகள்,தேவநாயேப் பாவனார் எழுதிய முதற் தாய் மொழி வாயிலாகவும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். தமிழன் தோன்றிய குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் படிப்...