Skip to main content

என் இனிய சமுதாயமே!

என் இனிய சமுதாயமே!

என் மனதில் எப்பொழுதும் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறது...
அது என்னவென்று நானும் எனக்குள் உட்புகுந்து பார்க்க் முயன்றேன். அது முகம் காட்ட மறுத்தது...

ஆனாலும் நான் அசரவில்லை ஏனென்றால் எப்பொழுதும் என் மனதில் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறதே!...

ஆம் அயராத முயற்ச்சியின் முடிவில்.. என் முயற்ச்சி பயனளித்தது!
அந்த முகத்தை என்னால் பார்க்க முடிந்தது மேலும் அது என்னிடம் சில வினாக்க்ளை வினாவியது..

அவ்வினாக்கள் என்னுள் கனன்று கொண்டிருந்த அக்னியை ஒரு காட்டுத்தீயாக்கியது!
முடிவில் அவ்வினாக்ளுக்கு விடை தேடும் சற்றே கடினமான முயற்ச்சியி்ன் முதற்ப்படியில் நான்...

ஆம் அதுயாதெனில்...

நீ யார்? உன் அடையாளம் என்ன? உன் பிறவியின் நோக்கமென்ன?
உன் பிறப்பால் ஏதேனும் மாற்றம் உண்டோ உன் வாழ்வில்..? மாற்றம் காணவைக்கமுடியுமோ பிறர் வாழ்வில்..?

அப்படியானால் நான் எதை ஆரம்பிப்பது..? எங்கிருந்து ஆரம்பிப்பது...?
யாருக்காக ஆரம்பிப்பது...? யாரை நோக்கி ஆரம்பிப்பது...? உன்னால் முடியுமோ..? விடை கூற..

ஆம் அதுயாதெனில்...

பிறப்பிற்க்கு பின்பு வாழ்க்கை உண்டோ... நிச்சியமில்லை அது அவரவர் வாழ்வைபொறுத்தது.. ஆனால்
இறப்பென்பது நிச்சயமாக்கப்பட்டது ஒவ்வொருவர் வாழ்விலும்.. நான் ஏதோ புதியாதாக இதை கண்டுபிடித்தவனல்ல.. ஆனால்

இறப்பிற்க்கு பின்பும் பலர் வாழ்வதை, பலர் வாழ்ந்து காட்டியிருப்பதை, பலர் வாழ்ந்துகொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது..

அவர்கள் யாவர்..? அவர்கள் எதை செய்தார்கள்..!
அவர்களால் எதை செய்யமுடிந்தது..!

அவர்களால் செய்யமுடிந்ததை நம்மால் செய்யமுடியுமா? பதில்தேடிப்போன நான் ஒரு
கேள்வியால் பிடித்து நிறுத்தப்பட்டேன்...

தொடர்ந்து பதில் தேடுவேன்... முன்பைவிட வீரியமாக....

Comments

  1. உழைப்பாளர்களை குறிப்பாக மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் விடுதலைக் குரல் உங்களுடையது. அதை பொதுவான நோக்கத்திற்காக செயல் படுத்தப்பட வேண்டும். உங்களைப் போன்று சிந்தப்பவர்கள் பாமக பொறுப்பில் உள்ளார்களா என்றால் சந்தேகமே.

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்...