Skip to main content

இலவசங்கள் தொடர்ந்தால்...!!!

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் ‍‍‍‍‍‍~ எதற்க்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் ~ கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்?

அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார் ~ என்னைப்பார், ஒரு ரூபாய்க்கு அரிசியும், ரூ. 140 க்கு பருப்பும் (ஆடு அரைப்பணம் ------ முக்கப்பணம்)  வாங்கி சமைத்து உண்டு உறங்கிவிடுவேன். போரடித்தால் அரசு வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துவிடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் சென்று உயர் சிகிச்சை பெற்றுவிடுவேன் ராஜமரியாதையுடன் (பொதுவார்டில் இருந்தால் மட்டுமெ என்பது முக்கியம்).

நான் கேட்டேன் ~ உழைக்காமல் எப்படி இத்தனையும் கிடைக்கும் என்று?

அதற்க்கு அதிர சிரித்துவிட்டு சொன்னார் ~ நான் யார் தெரியுமா? தமிழ்நாட்டின் குடிமகன், என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்க்கு எரிவாயு அடுப்பும் இலவசம், பொழுதுபோக்கிற்க்கு(பல அறிய அறிவுசார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் ) வண்ணத்தொலைக்காட்சிபெட்டி மின்சாரத்துடன் இலவசம் , உழைக்காமல் நோய் வந்தால் குடுப்பத்தார்க்கு உயிர்காக்கும் உயர்சிகிச்சையும் இலவசம் பிறகு எதற்க்காக உழைக்கவேண்டும்!?

அதற்க்கு நான் கேட்டேன் ~ உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

அவர் பலமாக நகைத்தபடி சொன்னார் ~ மனைவி பிள்ளை பெற்றால் ரூ 6000 ஊட்டச்சததுடன் இலவசம், பிறகு பள்ளியில் கல்வியுடன்(ஏதோ) மதியஉணவு முட்டையுடன் இலவசம், பாடம் படிக்க புத்தகமும் இலவசம், பள்ளிசெல்ல பேருந்து கட்டண அட்டை இலவசம், தேவையென்றால் சைக்கிளும் இலவசம், பெண் திருமணத்தின்போது உதவித்தொகை ரூ. 15000 இலவசம். மகள் பிள்ளை பெற்றால் இதே இலவசங்கள் கிடைக்கும் அவர்களது வாழ்க்கையிலும் பின் எதற்க்கு உழைக்கவேண்டும்?!

வியந்துபோனேன் நான்!!! 

என்னுயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்நிலமை தொடரும்? இலவசம் என்பதற்க்கு இரண்டு அர்த்தமுண்டு ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை!! இதில் நீ எந்த வகை? இதன் பின்விளைவென்ன? உழைக்காமல் உண்டு யாருக்கும் உதவாது சோம்பேறியாகி விடுகிறாய். ~ இந்த இலவசங்கள் நின்றுபோனால் உன்நிலைமை என்ன? உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!

இதே நிலை தொடர்ந்தால், இலவசங்கள் வள்ர்ந்தால் அமைதியான தமிழகம் கள்வர்களின் பூமியாய் மாறிடும் நிலை வெகுதொலைவில் இல்லை..

தமிழா விழித்திடு ~ உழைத்திடு!
இலவசங்களை வெறுத்திடு ‍~ அழித்திடு!!
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு!!!


நாளைய தமிழகம் நம் கையில்
மானமுள்ள தமிழனே சிந்திப்பாயா!!!

Comments

  1. Aiya Murali samy,

    Ungalin karuthukkal migavum Thairiyamaga irruku. Vaalthukkal

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் நண்பா.... இலவசங்கள் கொடுக்கப்படுவது தமிழகத்தை தன் வசப்படுத்தவே(கையகப்படுத்தவே) என்று அறியாத மக்கள்....

    ReplyDelete
  3. Mekka sariyaga sonnirgal thozare.....

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்!!

  துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். டையிலும், ஷூவிலும் நீங்கள் ஆரம்...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்...