இந்திய ஜனநாயக நாட்டில் அகிம்சை வழியில் போராடிகொண்டிருக்கிற ஒரு ஒப்பற்ற தியாகி அன்னா ஹஸாரே வினை கைது செய்திருப்பதன்மூலாம் ஊழலால் கரைபட்டுகொண்டிருக்கும் காங்கிரஸின் கபடபுத்தி தெள்ளதெளிவாகிறது! இந்த நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த போராட்டமாக அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட சுதந்திரபோராட்டத்தினை டைம் பத்திரிக்கை சுட்டிகாட்டியது அவ்வழியில் காந்தியவாதியான திரு அன்னா அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்க்கு அனுமதி மறுத்தும் அவரை கைதுசெய்திருப்பதும் நாட்டில் குடிமக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது அப்படி அவரொன்றும் அவரது சொந்த நலனுக்காக போராடவில்லை நாட்டையே உலுக்கிகொண்டிருக்கும் ஊழல் என்று கிருமியினை வலுவான சட்டம்கொண்டு அழிக்க வேண்டு மென்பது அவரதுமட்டுமல்ல அவரைப்போன்ற தூயள்ளம் கொண்ட இந்தியர்களின் எண்ணமாக கொண்டுதான் போராடுகிறார். சுமார் அறுபது ஆண்டுகாலாமாக ஆட்சிகட்டிலில் கோலோச்சிகொண்டிருக்கும் இந்த காங்கிரஸ் கட்சியில்தான் போபார்ஸ் ஊழலிருந்து தொடங்கி இன்று ஸ்பெக்ரம், ஆதர்ஸ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது! இந்த காங்கிரஸ் ஆட்சியிருக்கும...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"