Skip to main content

தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர் -- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். "நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான் பறப்பேன், பறப்பேன், பறப்பேன்' என்று உங்களுக்குள் திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள். இந்த புவியில், இளைஞர்களின் ஆற்றல்தான் பெரிய ஆற்றல். இந்தியாவின் சமூக பொருளாதார நிலையை மாற்றும் சக்தி மாணவர்களின் செழுமையான சிந்தனைக்கு மட்டுமே உண்டு. 2020ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்கிற வல்லரசுக் கனவு, இந்தியாவுக்கு உண்டு.

இந்த லட்சியத்தை எட்ட, தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். பல்பையும், வெளிச்சத்தையும் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசனும், விமானங்களைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், கணிதம் என்றதும் சீனிவாச ராமானுஜமும், "பிளாக் ஹோல்' என்றதும் சுப்ரமணியன் சந்திரசேகரும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்துவத்துடன் இயங்கியவர்கள்; தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர்தான் வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது.

பெரிய பெரிய லட்சியங்கள், அறிவுத் தேடல், கடின உழைப்பு, விடா முயற்சி போன்றவை மாணவர்களுக்கு அவசியம். குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும். ஒவ்வொருவருக்கும் கனவுகள் வேண்டும்; கனவுகள் படைப்புத்திறனை நோக்கி அழைத்துச் செல்லும். படைப்புத் திறன், சிந்தனையாற்றலை வளர்க்கும். சிந்தனையாற்றல் அறிவை வளர்க்கும்; அறிவுதான் உங்களை உயர்ந்த மனிதர்களாக்கும். எனவே, கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!

Comments

  1. நண்பர் முரளி அவர்களே
    வன்னிய முரசு என்ற பெயரை முதலில் மாற்றிவிடுங்கள். நீங்கள் எல்லோருக்கும் பொதுவான விஷயங்களைத்தான் வெளியிடுகிறீர்கள். வன்னியர்களுக்காக, வன்னியர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பதிவு செய்யவில்லை. பின் ஏன் குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிக்கும் வகையில் தலைப்பை வைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது பின்னூட்டத்திற்க்கு நன்றி!

      ஆங்! பெயரில் என்ன இருக்கிறது கருத்தினை மட்டும் பாருங்கள்! எந்த பெயரில் எழுதினாளும் உண்மை உண்மைதான ராஜா!?!!

      Delete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்...

மோனோலிசாவை விட அழகானவள் எங்கள்...!!

இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார். அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது. ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான். பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது. பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது. மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை.  (இவ்வோவியம் பல்லவன...