குற்றாலம் நகரில் அருவிகள்தான் பிரதானம் என்றாலும் அங்குள்ள அருங்காட்சியகம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. குற்றாலம் பண்பாட்டையும், இந்து மத வழிப்பாட்டையும் தன்னகத்தே தக்க வைத்து கொண்ட சிறப்பு வாய்ந்த பழமையான நகரமாகும். குற்றாலத்தின் பழமை: ************************ 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், பழைய குற்றால அழுதகண்ணி ஆற்றங்கரையில் காணப்படுகின்றன. இந்த ஆற்றங்கரையில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பழைய குற்றாலத்திலும், அதனை அடுத்து ஆயிரப்பேரி என்ற கிராமத்திலும் பெருங்கற்கால பண்பாட்டு தடையமாகிய முதுமக்கள் தாழிகளும், கருப்பு, சிவப்பு கலயங்கலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்கற்கால மனிதர்கள் குற்றாலம் பகுதியில் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன. திருக்குற்றாலநாதர் கோயிலில் காணப்படும் பாண்டியர், சோழர், நாயக்கர், தென்காசிப் பாண்டியர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள், ஜமீன்தார்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் இவ்வூரில் தொடர்ச்சியான வரலாற்றை உறுதி செய...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"