Skip to main content

Posts

மோனோலிசாவை விட அழகானவள் எங்கள்...!!

இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார். அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது. ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான். பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது. பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது. மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை.  (இவ்வோவியம் பல்லவன...

இந்தியா முழுதும் தமிழர் நாடே - I

ஒரு காலத்தே தமிழகம் 'நாவலந் தீவு' என்றழைக்கப் பட்டது. தமிழ் இலக்கியத்தில் நாவலந்தீவு என்ற பெயர் காணப்படுகிறது. வடமொழியிலும் நாவலந்தீவு என்ற சொல் வருகிறது. “நாவலந்தீ வாள்வாரே நன்கு” - (ஏலாதி, 56). கண்டப் பெயர்ச்சி, கண்ட நகர்வு கோட்பாடு ! காண்க கீழ்காணும் இணையத்திலுள்ள விளக்கங்களை https://pubs.usgs.gov/gip/dynamic/himalaya.html

உலகையே கட்டியாண்ட தமிழர்கள்..! : விஞ்ஞானிகளே வியந்து போன ஆச்சர்யம்..!

தமிழ் மொழி, பண்பாடு,கலாசாரம் என்பது இன்றுவரை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றுதான் பலராலும் நம்பப்படுகிறது.ஆனால் நாமெல்லாம் அறியாத நம் தமிழ் மொழி தோன்றி இருபதாயிரம் ஆண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், தமிழினம் உலகிலேயே மிகவும் பழமையான இனம், உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.உலக மொழிகளை ஆராய்ந்தால் அவற்றில் தமிழ் சொற்களும், பெயர்களும் வெவ்வேறு வடிவில் இருக்கிறன என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதற்கான ஆதாரம், நம் தமிழும்,தமிழ் பாரம்பரியமும் தோன்னிய குமரிக்கண்டம் இன்றிலிருந்து இருபதாயிரம் ஆண்டுகளுக்க முன்னர் தமிழனின் பிறப்பிடமும், தமிழனின் பாரம்பரியமும் குமரிக்கண்டம்தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது அன்றே நம் தமிழ் மேதைகளினால் கண்டறியப்பட்டு பெயர் சூட்டப்பட்ட கடல் கோளினால் இக்கண்டம் அழிந்து போனது. முச்சங்க வரலாற்றிலும்,சிலப்பதிகார உரைகள்,தேவநாயேப் பாவனார் எழுதிய முதற் தாய் மொழி வாயிலாகவும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். தமிழன் தோன்றிய குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் படிப்...

ராஜேந்திர சோழரின் வங்கதேச படையெடுப்பு: லண்டன் நூலகத்தின் ஒளிப்பட ஆவணத்தில் தகவல்

முதலாம் ராஜேந்திர சோழரின் வங்காள படையெடுப்பின்போது கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை வரலாற்று ஆய் வாளர்களின் கூற்று. ஆனால், வட கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான ஆவணம் தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது. கங்கைகொண்ட சோழரின், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவைகள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன. ராஜேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாள மாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான். இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்...

நமது பரிணாம கொள்கை(Theory of evolution)

சார்லஸ் டார்வின் எனும் இங்கிலாந்து அறிஞர் 1931-36 வரை ஆய்ந்து வெளியிட்ட உயிர்கள் பற்றிய பரிணாம கொள்கையே இன்று நவீன (உயிரியல்) அறிவியலின் பிரதானமாக இருக்கிறது இதையே நாமும் மதிப்பெண்னிற்காக மணனம் செய்து தேரிவந்தோம்..! இதையேதான் நம்மவர்கள் ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கதையாக சொல்லியும், பதிகம், பாட்டாக படித்தும் வைத்திருக்கிறார்கள் கண்டுகொண்டோமா நாம்? இந்த கலாச்சாரத்திலே கடவுளின் அவதாரங்களாக சொல்லப்பட்ட அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் படிமானங்களே...! "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்  மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்...! -எனும் அருணகிரியாரின் கந்தர் அநுபூதி-51 யும்... வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்... -எனும் திருவாசகமும்  கற்பனை என்று நவீனத்தை தலையில் தாங்கியாடும் நமக்கு யாரோ வந்து தலையில்குட்டி சொன்னால்தான் தெரிகிறது நம்மவர்களின் பெருமையே...  இதுதான் இந்த மெக்காலே கல்விமுறையின் உச்சபட்ச முட்டாள்தனம். இந்த புடைப்பு சிற்பம் எனது வானியல் வரலாற்று தேடலின் போது தமிழ்நாட்டின் கழுகுமலை வெட்டுவான் க...

*தமிழின் நவீன சிறப்பு*❗

*1.* டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தாய்மொழி தமிழ்மொழி. *2.* வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழை தான் இந்தியை அல்ல. *3.* சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம். *4.* ரஷ்யா நாடாளுமன்றத்தின் நான்கு வாயிலின் பெயர் நம் தமிழில் உள்ளது. *5.* உலகம் அழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் திருக்குறள் உள்ளது. *6.* லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை வழங்கப்பட்டுள்ளது. *7.* ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி தமிழ். *8.* இந்தியாவிலேயே முதன்முதலில் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) மொழி பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில் தான். *9.* முதன் முதலில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஓன்று. *10.* ஆங்கிலத்துக்கு பின் இனையதளங்களில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே. 🙏🏼 *தமிழ் வளர்ப்போம்.* 🙏🏼

தமிழ் மொழி

இறைவனோடும் இவ்விகத்தோடும் இணைந்து தோன்றிட்டு காலங்களை கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட பழமை மொழி அடர்காடுகளில் கரடுமலைகளில் அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன் இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட இயற்கை மொழி சொல்யொன்றை உயிர் ஓவியமாய் யுகமதில் வாழும் காவியமாய் சிந்தனையை கடைந்து படைத்து தீட்டிட்ட தொன்மை மொழி தானே விதையுண்டு விருச்சகமாய் வேரோடி ஆலமரமாய் தழைத்திட்டு இலக்கண இலக்கியம் வளம் கொளுத்து செழுத்திட்ட செம்மொழி தெலுகு கன்னடம் துளு மலையாளம் என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள் தன்னிலே ஈன்றெடுத்து பிறமொழி கலவாது உயர்தனி தமிழ் தாய்மை மொழி தமிழ் வேந்தர்களும் மாந்தர்களும் சங்கங்கள் நிறுவிட சான்றோர்கள் இயிற்றிட்ட வாழ்வியியல் நூற்களால் கல்வி சிறந்திட்ட நெறியியல் மொழி திருநூற்கள் குறளும் நாலடியும் சிலம்பும் தெய்வ புலவன் திருவள்ளுவரையும் தேன்கவி புலவன் கம்பனையும் வரமாக பெற்றிட்ட சிறப்பு மொழி தமிழகம் ஈழம் தன் தாயகத்தில் மலேயா சிங்கை மொரிசு பிஜு என புலம்பெயர்ந்த பன்னாட்டில் தலைநிமிர்ந்து புகழ்சேர் உலக மொழி கணிணியுகத்தில் தடம் பதித்து அறிவியியல் மொழியாய் பரிணாமித்து இணையத்திலும் புதுமை புரட்சி செய்...

தமிழ் மொழி

அந்நிய மொழிகள் ஆயிரம் முளைத்தும் அழியாக் கதிராய் அவள் தான் நிலைத்தாள்.... பேரலை வந்தே பெருஞ்சேதம் நிகழ்ந்தும் வள்ளுவன் சிலையாய் பெருமையுடன் நின்றாள்.... எம்மொழியிலும் காணவியலா இனிமையது எம்மொழியில் செம்மொழியாய் சிறந்திடவே சரித்திரமும் படைத்தாள்.... அம்மியம்மி அரைத்தாலும் அழித்திட இயலுமோ ? இம்மையிலும் மறுமையிலும் இதுபோல் மொழியுண்டோ ? உணர்ந்திட்ட உள்ளங்கள் உள்ளதிங்கு சொற்பமாக உறுதியுடன் தமிழ்பேச பிறமொழியாகும் அற்பமாக... தமிழராக வாழ்வதே தரணியில் நம் பேறு தடையின்றி எந்நாளும்.!! தமிழ் வாழுமென்பதில் மறுப்பேது....!!

தமிழுக்காக ஒரு மளிகைக் கடைக்காரர்

உன்னதமான சேவை செய்யும் மாமனிதர். வாழ்க பல்லாண்டு மதுரையில் ஒரு புத்தக ஐயா…. 9578797459. உங்களுக்கு தமிழில் ஏதேனும் நூல்கள் தேவைப்படலாம்.அப்போது நீங்கள் இவரை ஒரு முறை அழையுங்கள்.புத்தகம் இருந்ததால் கொடுப்பார்,இல்லை தேடியாவது கொடுப்பார்.தொலைவில் இருந்தால் அனுப்பிவைப்பார்.ஏனென்றால் இதுதான் பல ஆண்டுகாலமாக இவரது வாழ்க்கை.நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் முனைவர் பட்ட ஆய்வுக்கு குறிப்புதவி நூல்களை தேடி கொடுத்து உதவியவர்.ஐயா முருகேசன் அவர்கள்.அகவை 70 கடந்தவர்.மதுரை காமராஜ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்களுக்கு இந்த தமிழ்ப்பெரியவரை தெரியாமல் இருக்க முடியாது. ஒரு மளிகைக் கடைக்கரராக வாழ்வை தொடங்கி,பழைய புத்தக விற்பனையளராக மாறி,பின்னர் தன்னிடம் சேர்ந்த நல்ல தமிழ் நூல்களின் பெருமையை அறிந்த பின் இத்தகைய நூல்கள்,அறிவாக பயன்படவேண்டும் என்று மாணவர்களை தேடிச்சென்று அளிப்பார்.இப்படி தொடங்கிய வாழ்க்கை அப்படியே தொடர்கிறது.பிள்ளைகள் அனைவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.துணைவரும் இல்லை.ஒரு தனி மனிதராக தம் வாழ்க்கையை தொடர்கிறார்.வீடெல்லாம் புத்தகம் தான்.நடைபாதையை தவிர அனைத்து இடமும் புத்தக அடுக்குகள் தான். ம...

தமிழ் இலக்கணச் சொற்களுக்கு ஆங்கிலம்

எழுத்து - Letter முதல் எழுத்து – Primary letter சார்பு எழுத்து – Secondary letter உயிர் – Vowels மெய் – Consonants ஆய்தம் – Guttural குறில் – Short Letters நெடில் – Long letters அளபெடை – Prolongation of letters, Protraction சுட்டெழுத்து – Demonstrative letters அண்மைச் சுட்டு – Proximate demonstratives சேய்மைச் சுட்டு – Remote demonstratives வினாவெழுத்து – Interrogative letters இன எழுத்து – Kindred letters வல்லினம் – Hard Consonants மெல்லினம் – Soft Consonants இடையினம் – Medial Consonants உயிர்மெய் – Vowel-Consonants குற்றியலுகரம்- Shortened குற்றியலிகரம் – Shortened பெயர்ச்சொல் – Noun வினைச்சொல் – Verb இடைச்சொல் – Interjection, Conjunction, Particles and Adjuncts உரிச்சொல் – Adjective and Adverb பொருட் பெயர் – Names of things இடப்பெயர் – Names of places காலப் பெயர் – Names of times சினைப் பெயர் – Names of parts or the organs of the body குணப் பெயர் – Names of quality பண்புப் பெயர் – Abstract Nouns தொழிற் பெயர் – Verbal Nouns ...

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..  திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330 திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194 திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம் திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிர...

சிதம்பரம் ‎நடராஜர்‬ கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் !!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான். (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ). (2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே வ...

மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை!!!

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது. தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு  பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை. பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன. கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ்  பங்கியாவைப்   ‘பண்டேயா‘ எ...

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வ...