Skip to main content

Posts

இலவசங்கள் தொடர்ந்தால்...!!!

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் ‍‍‍‍‍‍~ எதற்க்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்? நான் கேட்டேன் ~ கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்? அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார் ~ என்னைப்பார், ஒரு ரூபாய்க்கு அரிசியும், ரூ. 140 க்கு பருப்பும் (ஆடு அரைப்பணம் ------ முக்கப்பணம்)  வாங்கி சமைத்து உண்டு உறங்கிவிடுவேன். போரடித்தால் அரசு வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துவிடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் சென்று உயர் சிகிச்சை பெற்றுவிடுவேன் ராஜமரியாதையுடன் (பொதுவார்டில் இருந்தால் மட்டுமெ என்பது முக்கியம்). நான் கேட்டேன் ~ உழைக்காமல் எப்படி இத்தனையும் கிடைக்கும் என்று? அதற்க்கு அதிர சிரித்துவிட்டு சொன்னார் ~ நான் யார் தெரியுமா? தமிழ்நாட்டின் குடிமகன் , என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்க்கு எரிவாயு அடுப்பும் இலவசம், பொழுதுபோக்கிற்க்கு(பல அறிய அறிவுசார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் ) வண்ணத்தொலைக்காட்சிபெட்டி மின்சாரத்துடன் இலவசம் , உழைக்காமல் நோய் வந்தால் குடுப்பத்தார்க்கு உயிர்காக்கும் உயர்சிகிச்சையும் இலவசம் பிறகு எதற்க்காக உழை...

துடைத்து எறியப்படவேண்டும் இந்த மட்டமான திரைப்பட கலாச்சாரம்

ஒரு கடைக்கோடி கூத்தாடிக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, அங்கீகாரமோ நம் நாட்டின் ஓரு சாதாரண ஏழை விவசாயிக்கோ,  ஒரு மீனவனுக்கோ (அ) ஒரு மாணவனுக்கோ கிடைக்குமா? பணம், (மொக்கை)புகழ் இருக்கிறதென்பதற்க்காக மட்டும் ஏன் கூத்தாடிகளை தலையில் வைத்து தூக்காத குறையாக முக்கியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் என்னத்தை செய்தார்கள் இந்த் மக்களுக்கு? ஒரு உதாரணம்: கடந்த குறைந்த காற்றழுத்தத்தின் விளைவாக மிகுந்த மழையினை தமிழகம் எதிர்கொண்டது, இதில் நீலகிரியில் பெரும் நிலச்சரிவு, பல வீடுகள் தகர்ந்து தரைமட்டமாயின மேலும் 65 க்கும் மேற்ப்பட்ட மனித உயிர்கள் பலியாயின மேலும் இழப்பு மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. அரசும் துரிதமாக மீட்ப்பு பணிகளை முடிக்குவிட்டது, பிற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வு அமைப்புகளும்  தங்களால் இயன்ற உதவிகளை கொடுப்பதாக அறிவித்தன. மேலும் திருப்பூரை சேர்ந்த சில பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆயுத்த ஆடைகளை கொடுத்ததாக ஒரு நாளேட்டில் வெளியாகியிருந்தது. இந்நிகழ்வுகள் இருக்க, உதகையின் இயற்கை பிரதேசங்கள் காட்டி பெரும் தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன இதை யாரும் ம...

ரௌத்திரம் பழகு..

" சமுதாயம் காப்பது சத்ரியன் தர்மம் " - வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்! - ருத்ர வன்னியன்  --------------------------------------------------------------------------- உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா ---------------------------------------------------------------------------- நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ ---------------------------------------------------------------------------- நீ கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து, உலகம் உன்னைப் போற்றும். பாதையை தேடாதே....... உருவாக்கு - லெனின் -------------------------------------------------------------------------- கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் - விவேகானந்தர் -------------------------------------------------------------------------- தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது...

இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?

ஏன் இந்த அவல நிலை ??? இன்னும் எத்தனை காலம் பொறுப்பது ? " பாராண்ட பல்லவ வம்சம் " நம் வம்சம் ஆனால் இன்று நம் நிலைமைஎன்ன ? தமிழகத்தில் 6 கோடி மக்கள் தொகையில் 2 கோடி மக்களைக் கொண்ட வன்னியர்கள் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் அரசு பணியில் நிலையைப் பார்த்தால் வேதனையும் , கண்ணீரும்தான் மிஞ்சுகிறது .. நாம் முறையாக அரசால் அங்கீகரீக்கப்பட்டிருக்கிறோமா ? எதனால் இந்த அவல நிலைமை ? சுதந்திரம் பெற்றபின்பு கூட உழைப்ப ‌ வன் இன்னும் வறுமையின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற முடிய இயலவில்லை .. இங்கே ஒரு கடை நிலை கூத்தாடிக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட ஒரு விவசாயிக்கு கிடைக்கிறதா என்று சொல்ல எந்த ஒரு தகவலும் சான்றாக இல்லை என்பது தின்னம் . ஏன் இப்படி ஒரு அவல நிலை ? எதை முன்னிட்டு நாம் இப்படி நிற்கிறோம் !! எனக்கு ஒரு உண்மை புலப்படுகிறது .. நம் ஒற்றுமையின்மைதான் என்றுகூட தோன்றுகிறது . இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தொகையிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிறிந்து கிடக்கிறோம் ! ஒற்றுமையின் வலிமை தெரிந்...

என் இனிய சமுதாயமே!

என் இனிய சமுதாயமே! என் மனதில் எப்பொழுதும் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறது... அது என்னவென்று நானும் எனக்குள் உட்புகுந்து பார்க்க் முயன்றேன். அது முகம் காட்ட மறுத்தது... ஆனாலும் நான் அசரவில்லை ஏனென்றால் எப்பொழுதும் என் மனதில் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறதே!... ஆம் அயராத முயற்ச்சியின் முடிவில்.. என் முயற்ச்சி பயனளித்தது! அந்த முகத்தை என்னால் பார்க்க முடிந்தது மேலும் அது என்னிடம் சில வினாக்க்ளை வினாவியது.. அவ்வினாக்கள் என்னுள் கனன்று கொண்டிருந்த அக்னியை ஒரு காட்டுத்தீயாக்கியது! முடிவில் அவ்வினாக்ளுக்கு விடை தேடும் சற்றே கடினமான முயற்ச்சியி்ன் முதற்ப்படியில் நான்... ஆம் அதுயாதெனில்... நீ யார்? உன் அடையாளம் என்ன? உன் பிறவியின் நோக்கமென்ன? உன் பிறப்பால் ஏதேனும் மாற்றம் உண்டோ உன் வாழ்வில்..? மாற்றம் காணவைக்கமுடியுமோ பிறர் வாழ்வில்..? அப்படியானால் நான் எதை ஆரம்பிப்பது..? எங்கிருந்து ஆரம்பிப்பது...? யாருக்காக ஆரம்பிப்பது...? யாரை நோக்கி ஆரம்பிப்பது...? உன்னால் முடியுமோ..? விடை கூற.. ஆம் அதுயாதெனில்... பிறப்பிற்க்கு பின்பு வாழ்க்கை உண்டோ... நிச்சியமில்லை அது அவரவர் வ...