Skip to main content

Posts

Showing posts from August, 2013

உங்களுக்கு ஆய கலைகள் 64 எவை எவை என்று தெரியுமா...?

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை. தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்)  5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்)  8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) 16. மறவனப்பு (இதிகாசம்) 17. வனப்பு 18. அணிநூல் (அலங்காரம்) 19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 20. நாடகம் 21. நடம் 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்) 23. யாழ் (வீணை) 24. குழல் 25. மதங்கம் (மிருதங்கம்) 26. தாளம் 27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை) 29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை) 30. யானையேற்றம் (கச பரீட்சை) 31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை) 32. மணிநோ

என் தமிழுக்கு அழிவில்லை.....!தமிழில் பேச தயங்குவதால் தமிழுக்கு எந்த இழப்பும் இல்லை...!!

அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுகளை 4500 ஆண்டுகட்கு முன்பு கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை.. உலகத்தின் மாபெரும் வல்லரசை 2800 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய ரோமாபுரி மன்னர்கள் வளர்த்த இலத்தின் மொழி, இன்று யாருடைய தாய்மொழியும் இல்லை.. மகான் புத்தர் தம் புரட்சிகரமான கருத்துகளை 2600 ஆண்டுகட்கு முன் பரப்பிய பாலி மொழி, அறவே அழிந்துவிட்டது.. உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்கிய பகுதிகளை வென்ற மகா அலெக்சாந்தர் 2300 ஆண்டுகட்கு முன்பு பேசிய கிரேக்க மொழி, இன்று திரிந்து விட்டது.. வரலாற்றின் போ்கையே மாற்றி அமைத்த அன்பரசர் ஏசுநாதர் 2000 ஆண்டுகட்கு முன்பு தம் கருத்துகளை போதித்த அரமிக் மொழி (ஹுப்ரூ மொழியின் கிளை மொழி) இன்று வழக்கிழ்து விட்டது.. ஆனால், இந்தப் பழம்பெரும் மொழிகள் வாழ்ந்து சிறந்த காலத்தில் தானும் வளமாக வாழ்ந்து, இன்று தன் பழைய தோழமை மொழிகள் அனைத்தும் மாண்டு போன போதும், நீண்ட மனித வரலாற்றின் பார்வையாளனாக, இன்றும் இளமையோடு வாழும் ஓரே மொழி நம் தமிழ் மொழி மட்டுமே..