Skip to main content

Posts

Showing posts from January, 2015

தமிழ் மொழி

அந்நிய மொழிகள் ஆயிரம் முளைத்தும் அழியாக் கதிராய் அவள் தான் நிலைத்தாள்.... பேரலை வந்தே பெருஞ்சேதம் நிகழ்ந்தும் வள்ளுவன் சிலையாய் பெருமையுடன் நின்றாள்.... எம்மொழியிலும் காணவியலா இனிமையது எம்மொழியில் செம்மொழியாய் சிறந்திடவே சரித்திரமும் படைத்தாள்.... அம்மியம்மி அரைத்தாலும் அழித்திட இயலுமோ ? இம்மையிலும் மறுமையிலும் இதுபோல் மொழியுண்டோ ? உணர்ந்திட்ட உள்ளங்கள் உள்ளதிங்கு சொற்பமாக உறுதியுடன் தமிழ்பேச பிறமொழியாகும் அற்பமாக... தமிழராக வாழ்வதே தரணியில் நம் பேறு தடையின்றி எந்நாளும்.!! தமிழ் வாழுமென்பதில் மறுப்பேது....!!

தமிழுக்காக ஒரு மளிகைக் கடைக்காரர்

உன்னதமான சேவை செய்யும் மாமனிதர். வாழ்க பல்லாண்டு மதுரையில் ஒரு புத்தக ஐயா…. 9578797459. உங்களுக்கு தமிழில் ஏதேனும் நூல்கள் தேவைப்படலாம்.அப்போது நீங்கள் இவரை ஒரு முறை அழையுங்கள்.புத்தகம் இருந்ததால் கொடுப்பார்,இல்லை தேடியாவது கொடுப்பார்.தொலைவில் இருந்தால் அனுப்பிவைப்பார்.ஏனென்றால் இதுதான் பல ஆண்டுகாலமாக இவரது வாழ்க்கை.நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் முனைவர் பட்ட ஆய்வுக்கு குறிப்புதவி நூல்களை தேடி கொடுத்து உதவியவர்.ஐயா முருகேசன் அவர்கள்.அகவை 70 கடந்தவர்.மதுரை காமராஜ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்களுக்கு இந்த தமிழ்ப்பெரியவரை தெரியாமல் இருக்க முடியாது. ஒரு மளிகைக் கடைக்கரராக வாழ்வை தொடங்கி,பழைய புத்தக விற்பனையளராக மாறி,பின்னர் தன்னிடம் சேர்ந்த நல்ல தமிழ் நூல்களின் பெருமையை அறிந்த பின் இத்தகைய நூல்கள்,அறிவாக பயன்படவேண்டும் என்று மாணவர்களை தேடிச்சென்று அளிப்பார்.இப்படி தொடங்கிய வாழ்க்கை அப்படியே தொடர்கிறது.பிள்ளைகள் அனைவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.துணைவரும் இல்லை.ஒரு தனி மனிதராக தம் வாழ்க்கையை தொடர்கிறார்.வீடெல்லாம் புத்தகம் தான்.நடைபாதையை தவிர அனைத்து இடமும் புத்தக அடுக்குகள் தான். ம

தமிழ் இலக்கணச் சொற்களுக்கு ஆங்கிலம்

எழுத்து - Letter முதல் எழுத்து – Primary letter சார்பு எழுத்து – Secondary letter உயிர் – Vowels மெய் – Consonants ஆய்தம் – Guttural குறில் – Short Letters நெடில் – Long letters அளபெடை – Prolongation of letters, Protraction சுட்டெழுத்து – Demonstrative letters அண்மைச் சுட்டு – Proximate demonstratives சேய்மைச் சுட்டு – Remote demonstratives வினாவெழுத்து – Interrogative letters இன எழுத்து – Kindred letters வல்லினம் – Hard Consonants மெல்லினம் – Soft Consonants இடையினம் – Medial Consonants உயிர்மெய் – Vowel-Consonants குற்றியலுகரம்- Shortened குற்றியலிகரம் – Shortened பெயர்ச்சொல் – Noun வினைச்சொல் – Verb இடைச்சொல் – Interjection, Conjunction, Particles and Adjuncts உரிச்சொல் – Adjective and Adverb பொருட் பெயர் – Names of things இடப்பெயர் – Names of places காலப் பெயர் – Names of times சினைப் பெயர் – Names of parts or the organs of the body குணப் பெயர் – Names of quality பண்புப் பெயர் – Abstract Nouns தொழிற் பெயர் – Verbal Nouns

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..  திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330 திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194 திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம் திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத

சிதம்பரம் ‎நடராஜர்‬ கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் !!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான். (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ). (2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே வ

மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை!!!

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது. தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு  பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை. பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன. கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ்  பங்கியாவைப்   ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ள