Thursday, May 23, 2013

நம்மொழிக்கு தமிழ் என்று பெயர் எப்படி வந்தது?!க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.,
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.,
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.


உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன், உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…

த் + அ = 'த' வாகவும்,
ம் + இ = 'மி' யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்


என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா!!

வாழ்க எம் தாய்த்தமிழ் வாழியவே என்றென்றும்!!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்று சங்கே முழங்கு….!!

  
எங்கும் தமிழ்.!
எதிலும் தமிழ்..!
என்று சங்கே முழங்கு….!!

எங்கும் வன்னியர்.!
எதிலும் வன்னியர்..!
என்று…. சங்கே முழங்கு...!!

உலகம் போற்ற வாழ்ந்த 
உத்தமர்களின் வரிசையிலே.. 
வாழ்வான் வன்னியன்.. 
என்று.. சங்கே முழங்கு..!!

எதற்கும் இளைத்தவன்
இவனில்லை என்று
சங்கே முழங்கு....!!
அனைவரையும் வாழவைப்பான்…
அவனுக்கு நிகர் அவனேதான்… 
அவன்தான் வன்னியன்
என்று சங்கே முழங்கு…..!!

ஏக்கம் எங்கும் போக்கிடவே…
துணிவுகொண்டு அழித்திடுவான்….
வீரம் செறிந்தவன்… வீர வன்னியன்…!
என்று சங்கே முழங்கு…..!!

சொர்ப்ப காசுக்கு ஆங்கிலேயரிடம்
சென்னையை தானம் கொடுத்த சென்னப்ப
நாயக்கர்…. நம் இனம் தான்…!
என்று சங்கே முழங்கு…..!!
 

வாரிகொடுத்த வள்ளல்
செங்கல்வராய நாயக்கரும்… 
நம் இனம் தான்…!
என்று சங்கே முழங்கு…..!!

இருபதாயிரம்
கானி நிலத்தை வாரிசே
இல்லாமல் விட்டுச்சென்ற
ஆளவந்தான் வள்ளலும்… நம்
இனம்தான்…!
என்று சங்கே முழங்கு…..!!

வரலாறு படைத்த பல்லவ
மன்னன் பரம்பரையும்… நம்
இனம்தான்…!
என்று சங்கே முழங்கு…..!!

புதிய
வரலாற்றை உருவாக்க
துடிக்கும்
எல்லா நெஞ்சங்களும்…
இதை படிக்கும்
எல்லா உள்ளங்களும்…
நம் இனங்களே….!!
என்று சங்கே முழங்கு…..!!

 

Thursday, May 16, 2013

பூம்புகார் நகரின் சிறப்பு

 
  
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.


தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால், இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது. இதுவரையிலும் கூட பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.!!!

Tuesday, May 14, 2013

என்னுயிர் "தமிழா!"படம் பார்த்தே பாவத்திலே
பாதியை செய்தோம் தன்
அகம் காட்டிய அழகிக்கெல்லாம்
ஆலயம் செய்தோம்!!

நடிகன் வெறும் நடிகன்தான்
தெரிந்து கொள்க!
நடிப்பு நாடாள தகுதி அல்ல
புரிந்து கொள்க!!

தமிழை வளர்த்த பெரியவர்களை
தெருவில் வைத்தோம்!
தமிழை வைத்து வளர்ந்தவர்களை
பதவியில் வைத்தோம்!!

திராவிட தெலுங்கன், கன்னடன், மலையாளி
என்றாவது திராவிடன் என்று சொன்னதுண்டா??

நாம் ஏமாந்த கதையெல்லாம்
ஆவணம் செய்வோம்!
நம் தலைமுறைக்கு அறிவூட்டி வரும்
ஆபத்தை அழிப்போம்!!

"தமிழ்நாட்டை தமிழன் நிர்வகிக்கட்டும்!"
"தமிநாட்டை தமிழன் ஆளட்டும்!!"

 ஒன்றுபடுவோம்!  வென்று காட்டுவோம்!!Thursday, May 9, 2013

அம்பாசங்கர் குழுவின் பரிந்துரையும், எம்ஜிஆர் அவர்கள் வன்னியர்க்கு இழைத்த துரோகமும் :

========================================================================

வடதமிழகத்தில் எம்ஜிஆருக்கு ஆதரவு இல்லாத நேரத்தில் எம்ஜிஆரை அழைத்து வந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதல் மாணவரணி நாத்தி காட்டியவர் வன்னியரான வல்லம்படுகை பாலசுந்தரம் . இவரது தீவிர செயல்பாட்டின் காரணமாக திமுக மாணவர் அணியை சாரந்தவர்களால் , அதே மண்ணில் வெட்டி சாய்க்கப்பட்டார்...
 1972 இல் திமுகவை விட்டு எம்ஜிஆர் அவர்கள் வெளியேற்றப்பட்ட போது, திமுகவினரோடு எழுந்த அரசியல் விரோதத்தில் வெட்டி கொல்லப்பட்டவர் சுகுமாரன் . இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் . 

அப்போது இவரின் உயிர் தியாகம் எம்ஜியாரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்லலாம் . 

சுகுமாரன் கொலையுண்ட சுவரொட்டி புகைப்படங்களை ஊரெங்கும் ஒட்டிதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது .

ஆனால் இந்த தியாகங்களுக்காக எல்லாம் எம்ஜிஆர் வன்னியர் இனத்திற்கு பெரிதாக எதுவும் செய்து விடவில்லை . மாறாக, தருமபுரி , வடார்க்காடு , திருப்பத்தூர் பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளை கொம்புசீவி விட்டு பல வன்னிய இளைஞசர்களை நக்சலைட்டுகள் என்ற பெயரில் சுட்டு கொள்ள செய்தார் . 

இதுதவிர அம்பாசங்கர் குழு அளித்த பரிந்துரையை நடைமுறை படுத்தாமல் கிடப்பில் போட்டதும் தான் எம்ஜிஆர் அரசுதான் . இந்த குழு மருத்துவர் அய்யாவின் கோரிக்கையை ஏற்று 1982 இல் அமைக்கப்பட்டது.

அதற்க்கு முன் இருபது கோரிக்கையை கொண்ட கருத்துகளை முன்வைத்தார் மருத்துவர் அய்யா . 

• வன்னியர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பதால் அரசின் சலுகைகள் முழுவதுமாக அவர்களை சென்றடைவதில்லை . 

• 95 சதவிகிதம் வன்னியர்கள் ஏழ்மை நிலையில் கூலித்தொழிலாளியாக இருப்பதாலும், கல்வியின் முக்கியத்துவம் அறியாததாலும் அவர்களது குழந்தைகளும் , கல்வி அறிவு பெற முடிவதில்லை . 

• பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகை பெரும் ஆண்டு வருமானத்தை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் .

• இடஒதுக்கீடு முறையானது அனைத்து துறைகளிலும் பின்பற்ற படவேண்டும் .

• பிற்படுத்தப்பட்டோருக்கான சதவிகித இடஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் பிரித்து வழங்கினால்தான் வன்னியர்கள் பலன் அடைய முடியும் . 

• வன்னியர்களுக்கென்று தனி வாரியம் அமைத்து அவர்கள் நலனை மேம்படச் செய்ய வேண்டும் .

• சேலம், செங்கல்ப்பட்டு போன்ற மாநகராட்சிகளில் வன்னியர்கள் துப்புரவு தொழிலாளர்களாகவும் , திருநெல்வேலி போன்ற மாவட்டத்தில் இன்னும் கீழ் நிலை வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள் . இவர்களை அடையாளம் கண்டு அவர்களின் புணர் வாழ்விற்கு அரசு உதவிட வேண்டும் .

• வன்னியர்கள் பெரும்பாலும் வசிக்கும் பாராளுமன்ற -சட்டமன்ற தொகுதிகள் இன்றளவில் தனித் தொகுதிகளாக உள்ளன . 

• அதை ரத்து செய்வதின் மூலம் பெருமான்மை வன்னிய சமுதாய மக்களின் கோரிக்கைகள் , பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒலித்திட வகை செய்திட வேண்டும் .

என்பது போன்ற இருபது கருத்துக்கள் அடங்கிய கோரிக்கைகளை நம் மருத்துவர் அய்யா முன்வைக்க அம்பாசங்கர் குழு அதை கனிவுடன் பரிசீலித்து மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த பின் 1985 ஆம் ஆண்டு தனது பரிந்துரைகளை அப்போதைய முதல்வர் எம்ஜியாரின் முன் வைத்தது .

தமிழகத்தை பொறுத்த வரையில் , பெரும்பான்மை சமூகமாக வாழ்வது வன்னியர்கள் என்றும், இவர்களில் பெரும்பான்மையான மக்கள் குத்தகைக்கு பயிர் செய்து செய்தல் , நெசவு, மரம் வெட்டுதல் , கல் உடைத்தல் , சாலை போடுதல் , வண்டி ஒட்டுதல் போன்ற ஏழ்மையான நிலையில் உள்ளனர் என்றும் அவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த அம்பாசங்கர் அறிக்கை குறிப்பிடிருந்தது.

சட்டநாதன் குழுவை போல இந்த குழுவும், பிற்படுத்த பட்டோர் பட்டியலில் சில சாதிகள் நன்கு முன்னேறிய சாதிகள் என்றும், அவைகளை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது . 

வன்னியர்கள் அனைத்து துறைகளிலும் பின்தங்கி இருப்பதால், அவர்களை மிகவும் பிற்படுத்த பட்டோர் என்று அறிவித்து இவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது .

ஆனால் சட்டநாதன் குழுவின் பரிந்துரையை கிடப்பில் போட்டு கருணாநிதி துரோகம் செய்தது போல, எம்ஜியாரும் அம்பாசங்கர் குழுவின் பரிந்துரையை கிடப்பில் போட்டு தன் பங்கிற்கு வன்னியர்களுக்கு துரோகம் செய்தார் . 

இதனால் எந்தவித முன்னேற்றமும் அடையாமல் இருந்தது வன்னிய சமுதாயம் . :(

இதுதான் எம்ஜியாருக்காக உயிர் நீத்த வன்னிய சமுதாயத்தினருக்கு இவர் ஆற்றிய நன்றி கடன் .