Tuesday, July 27, 2010

எனது "கடவுள்"

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவ்ன் முதற்றே உலகு.

- வான் புகழ் வள்ளுவர்.

பொருள்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன்,
உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

"கடவுள்" ‍~ இதை அவ்வளவு சுலபமாக யாரும் விளக்கிவிடமுடியாது. முதலில் கடவுள் என்பது ஏதோ கற்ப்பனையில் நாம் வடித்துகொண்ட உருவமலல! உருவமில்லாதவற்றை உணரும் திறனில்லாத பாமரனுக்காக வடிக்கப்பட்டதுதான் உருவங்கள்! அதை மேன்மேலும் அழகாக்கி அழகுபார்க்க நினைத்தபோது உருவானதுதான் ஆலயங்கள்! உண்மையில் நாம் அனைத்து கடவுள் உருவங்களயும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அந்த தோற்ற்ங்களின் உண்மையான் அர்த்தம்.. அது அனைத்து உயிரிடத்திலும் மனிதர்களாகிய நாம் அன்போடு பற்றோடு இருக்கவேண்டும். அன்பொன்றே உயிர்களிடத்தில் அடிப்படையானது அது ஒன்றே நம் துன்பங்களிலிருந்து விடுவிக்கவல்ல ஒரு அருமருந்து! அந்த அருமருந்தின் தத்துவங்கள்தான் "கடவுள்" ~ நாம் அதை கண்களால் காணமுடியாது அதை நாம் உணரத்தான் முடியும்.

இன்றைய உலகில் அந்த விலைமதிக்கமுடியாத் அன்பெனும் அருமருந்து வறண்டுகொண்டிருக்கிறது அதன் பயனாகத்தான் நாம் துன்பங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம்! அன்பெனும் அருமருந்தினை நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் செலுத்த முயன்றாலொழிய நாம் துன்பங்களிலுருந்து விடுபடமுடியாது.. கடவுள் இருக்கிறாரா என்பதை உணர்ந்து பார்த்து அறிந்துகொள்! கண்ணால் காண முயலாதே!!


\\ஆராய முடியாத, உணர முடியாத, மனிதனுக்கு புரியாம இருக்ற யாரோ ஒருத்தர கடவுள்னு\\

முடியாததென்பது இல்லை மனிதன் முயலுவதில்லை அது மனிதர்களாகிய நம் குற்றம் பிறகெதற்க்க்கு கடவுளை அன்பை குற்றம் கூறமுடியும்?! சக மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று உணர்த்துவதுதான் கடவுள்களின் தத்துவும் அதை சரியாக புரிந்துகொள்ளாத, புரிந்தும் அன்பு செலுத்தாத நாம்தான் குற்றவாளிகள்?


//மனிதனக்கு காட்டலாம் உதாரணமாய், இப்படி தான் அன்பை போதிக்க வேண்டும்//

இந்த வாக்கியத்திற்க்கு உங்களுக்கு சரியான பதில் தெரியும் என் நம்புகிறேன்! உங்களது வயது அனுபவம் என்ன? இது வரையில் எத்தகையான் புத்தகங்களை படித்திருக்கிறீர்கள்? நீங்கள் சொல்வதிலிருந்து கடவுள் மனிதனுக்கு அருளிய தத்துவ புத்தகங்கள் யாவும் கரைத்து குடித்து விட்டவர்போலவும் அதில் எதிலுமே மனிதனுக்கு அன்பினை போதிக்கும் தத்துவத்தை சொல்லவில்லை போல இருக்கிறது உங்களது கருத்து. உலகில் எல்லவற்றையுமே ஒவ்வொரு மனிதனும் அனுபவித்துதான் தெரிந்துகொண்டாகவேண்டும் என்றில்லை! அப்படியானால் எவருக்கு வயது போதாது! அதனால்தான் பாமர மக்களாகிய நாம் ஆன்றோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர்கள் எழுதிய புத்தகங்களின் மூலம் நாம் வாழ்வை, அன்பை நாம் அறிய முடியும்!

யாவற்றையும் அனுபவித்து தெரிந்து கொள்வதற்க்கு உமக்கோ எனக்கோ யாருக்குமோ தன் வாழ்நாள் போதா! அதனால்தான் வாழ்க்கைக்கான் தத்துவத்தை நாம் ஏற்க்கனவே நன்கு ஆராயப்பட்டு அனுபவிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள தத்துவ புத்தகங்களை பின்பற்றுகிறோம்!


//இப்படி எழுதினவரே ஒரு மனிதன் தான் , அதனால் அவரே சொல்லிட்டாரு கடவுள் இருக்குரார்னு அப்டின்னு, அதனால கடவுள் இருக்கிறார்னு அப்டின்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்//

உலகப்பொதுமறை எனவும், கடவுள் மனிதனுக்கு போதித்தது கீதை, மனிதன் மனிதனுக்கு போதித்தது குறள் எனவும், உலக மொழிகளில் இன்றளவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் திருக்குறள் ஆகும், எந்த நாட்டிற்க்கு, எந்த மக்களுக்கு, எந்த சூழ்நிலைக்கு, எந்த துறைக்கும் பொருத்தமாக எழுதப்பட்டதென சான்றோர்கள் கூறியிருக்கிறாரகள்! ஆகவே திருவள்ளுவர், புரட்சி கவி பாரதி, கன்னித்தமிழ் தந்த திருவாசகம் போன்ற புத்தகங்களை வாசிக்கிறோம் ஆராய்ந்து அறிந்து அதன்மூலம் நாம் வாழ்க்கைக்கான நெறிகளை பின்பற்றுகிறோம்! ஆகவே எந்த தத்துவமும் நமகெதிராக அல்ல நாம் அதை தவறாக புர்ந்துகொண்டுறுக்கிறோம் ஆகவே நாம் தான் முதல் குற்றவாளி!


"God" is not an object, we can't see this, won't come to us to make us happy like a movie hero!! "God" is a verb we only can feel it. "God" has given/teached us in many ways to be peace life. But all the things above said, we have been made. We only find the way to the peaceful life from that instructed way us by “God”

வான் புகழ் திருவள்ளுவரை மிஞ்சிய எளிமையான தத்துவஞானி எவரும் என்னறிவுக்கு யாருமில்லை!

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்