Wednesday, April 25, 2012

தாய் மொழியான தமிழ் நிலைக்குமா?


தற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது.


சில மொழிகள், எஞ்சியுள்ள அம்மொழி பேசும் ஒருவரின் இறப்புடன், உடனடியாக மறைந்து போகின்றன. இதர மொழிகள், இரு மொழி கலாச்சார சூழலில் படிப்படியாக ,அழிந்து போகின்றன. குறிப்பாக, பூர்வீக மொழிகள், பள்ளியில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, சந்தையில் செல்வாக்கு செலுத்தும் மொழி, தொலைக் காட்சியில் ஆட்சி செய்யும் மொழிகளால், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மிக விரைவாக மொழிகள் அழிந்து போகும் ஐந்து பகுதிகளாக, அண்மையில் ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. வடக்கு ஆசுத்திரேலியா, மத்திய தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் உயர் பசிபிக் கடற்கரை மண்டலம், கிழக்கு சைபீரியா, ஒக்லகோமா மற்றும் தென் மேற்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பகுதிகள் ஆகும்.


இப்பகுதிகள் அனைத்திலும், பலவகையான மொழிகள் பேசும் பூர்வீகக் குடிகள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். இவ்வாய்வு, தேசிய நிலநூல் கழகம் மற்றும் அழியும் நிலையில் உள்ள வாழும் மொழிகள் ஆய்வு நிறுவனத்தின், கள ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இக் கண்டுபிடிப்புகள், தேசிய நிலம் மற்றும் மொழி குறித்த வலைப் பதிவில் விவரிக்கப் பட்டுள்ளது ஜாத் மொழி: கவலையில் பழங்குடியினர்..... கோல்கட்டா : உத்தரகண்ட் மாநிலத்தின், ஜாத் பழங்குடி மொழி, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதைக் கண்டு, பழங்குடியினர் செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர். உலகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு செயல்களால், சிறுபான்மை மொழிகள் நாள்தோறும் அழிந்து கொண்டே வருகின்றன. சில வாரங்களுக்கு ஒருமுறை, ஒரு சிறுபான்மை மொழி அழிகிறது. யுனெஸ்கோவின், அழிந்து வரும் மொழிகள் அறிக்கை, இன்னும் 50 ஆண்டுகளில் உலகில் பேசப்பட்டு வரும் சிறுபான்மை மொழிகள் 6 ஆயிரத்தில் பாதிக்கு மேல் இருக்காது என்று கூறியுள்ளது.அதே அறிக்கை, இந்தியாவில் உள்ள சிறுபான்மை மொழிகளில் 196 அழியும் தருவாயில் இருப்பதாகவும் எச்சரிக்கை செய்துள்ளது. அந்த பட்டியலில் உத்தரகண்ட்டின் ஜாத் மொழியும் ஒன்று.திபெத் அருகிலுள்ள நேலாங் மற்றும் ஜாதுன் ஆகிய கிராமங்களில், ராங்பா என்ற பழங்குடியினர் வசித்து வந்தனர்.


1962ல் ஏற்பட்ட இந்திய-சீன போரில், அவர்கள் அப்போதைய உத்தரபிரதேச மாநிலத்தின் டுண்டா போன்ற சிறு நகரங்களில் குடியேறினர். ஜாத் மொழி தற்போது 2,000 பேர்களால் மட்டுமே பேசப்பட்டு வருகிறது.இது குறித்து ராங் பா பழங்குடியின வயதானவர்கள் கூறியதாவது:எங்கள் இளைஞர்கள், ஜாத் மொழியைப் பேசத் தயங்குகின்றனர். தாய்மொழியில் அவர்களுக்கு மேலெழுந்த வாரியான அறிவே இருக்கிறது. எங்கள் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் பாடும் பாடல்கள் கூட மறைந்து வருகின்றன. ஜாத்துக்கு வரி வடிவம் கிடையாது. ஆனால் எங்கள் இளைஞர்கள் மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் போது ஆங்கிலத்தில் ஜாத்தில் பரிமாறிக் கொள்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் நகரங்களில் பணியாற்றுகின்றனர். தாங்கள் பழங்குடியினர் என்ற காரணத்தால் தனிமைப்பட அவர்கள் விரும்பவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்தியாவில், தமிழகத்தில் 7, கர்நாடகாவில் 6, ம.பி.,யில் 11, பீகாரில் 5, இமாச்சல பிரதேசத்தில் 19, அருணாச்சல் பிரதேசத்தில் 36, உத்தரகண்ட்டில் 12, மே.வங்கத்தில் 10, ஜம்மு காஷ்மீரில் 12 ஆகிய சிறுபான்மை மொழிகள் அழிவின் விளிம்பில் காத்திருக்கின்றன. இம்மொழிகளை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின், பாரத் பாஷா விகாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே நாம் நம் தாய்மொழி தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம் ....

நாம் குழைந்தைகள் நம்மை mummy daddy என்று கூப்பிடுவதை கண்டிப்புடன் தவிர்ப்பதோடு அம்மாஅப்பா என்று சொல்ல வைப்போம்.....

வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!!...

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்