Skip to main content

அம்மையாரிடம் கேட்க நம்மிடமும் பல கேள்விகள் உள்ளது:-

இந்த கூத்தாடியம்மா பேசுவதில் ஒன்றும் நாம் ஆச்சிரியப்படத் தேவையில்லை! ஏனென்றால் இதுவரை வன்னியர்கள் உள்ளிட்ட பெரும்பாண்மை சமூகங்களின் மீது சவாரி செய்துதான் அனைத்து திராவிட கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியிருக்கின்றார்கள் ஆனால் எங்கே அந்த நிலைமை மாறிவிடுமே என்ற அச்சத்தில் இந்த அம்மையார் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் அது இது என்று கதை விட்டுகொண்டிருக்கின்றார்!!

அந்த அம்மையாரிடம் கேட்க நம்மிடமும் பல கேள்விகள் உள்ளது:-

1. ஆக, அதிமுக அனைத்து கூட்டஙக்ளிலும் மிகச்சரியாக 9.59 மணிக்கு நிகழ்ச்சியை முடித்திருக்கின்றதா?!

2. வன்முறையை பற்றி இந்த் அம்மையார் பேச எந்தவித அருகதையும் இல்லை..ஏனெனில் ஒன்றும் தெரியாத அப்பாவி வேளான் கல்லூரி மாணவிகள் 3பேர் பேருந்தோடு வைத்து கொழுத்தப்பட்டதும் அதிமுக தொண்டர்களால்தான் என்பதும் அனைவருக்கும் தெரியும்.3. சட்டதிட்டஙக்ளை மீறுவதா?!! இதையெல்லாம் ஒரு ஒழுக்க சீலர் கூறவேண்டும்.. இங்கே பெங்களூரில் அம்மையாரின் மீது தொடங்கப்பட்டடுள்ள சொத்துகுவிப்பு வழக்கில் பல முறை குட்டு வாங்கியிருக்கின்றார் நேரில் வந்து ஆஜராகவேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்திடம்.. இவரெல்லாம் பேசி கேட்கவேண்டிய நிலையில் நாம் இருப்பது சொல்லவண்ண வேதனையை தருகின்றது.

4. மற்றொரு முக்கியமான வினா:- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூடச்சொல்லி நீதிமன்றம் பல முறை ஆணைபிறப்பித்தும் இந்த அம்மையார் அரசு அவரும் செவிசாய்க்காமல் அந்த ஆணையினை மதிக்காமல் இன்றுவரை அந்த ஆணையை செயல்படுத்தாமல் இருப்பது எந்த வகையான சட்ட கலாச்சாரம்?!5. ஒரே கையெழுத்தில் ஓராயிரத்திற்க்கு மேலான சாலை பணியாளர்கள் மற்றும் மக்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதும் அனைவரும் அறிந்ததே!!

இதைபோன்று அநேக கேள்விகள் நம்மாலும் அவரை பார்த்து கேட்கமுடியும்! தயவுசெய்து சட்டமன்றத்திற்க்கு செல்லும் நம்முடைய கட்சி உறுப்பினர்கள் இவற்றைபோன்ற புள்ளி விபரங்களுடன் சென்றால் அம்மையாரின் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க முடியும்!!

மொத்ததில் அவர்களுக்கு பீதி ஏற்பட்டுவிட்டது என்பது நமக்கு கண்கூடாக தெரிகின்றது! நம்முடைய கவனமெல்லாம் இன்னும் நம்மை பலப்படுத்துவதில் இருக்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!

Comments

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் பெருவிழா - தமிழர்த் திருவிழா

பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -குறள் (1031)
எனும் குறள் இதனை தெளிவு செய்யும்.உழவுத் தொழில் செய்யாமல் மற்ற தொழில் செய்கின்றவர் எல்லாரும் உழவுத் தொழில் செய்கின்றவரைத் தாங்குவதால் இந்நாள் உழவர்க்கே உரிமை உடையதாயினும் உலகு புரக்க உழைப்பவர் அனைவருமே தேவை என்பதால் மற்ற உழைப்பாளர்களும் போற்றுகின்ற நாளாகிறது பொங்கல் பெருநாள்.

உழவு தவிர மற்றவை அனைத்தும் தொழில் என்னும் சொல்லால் குறிக்கப்படும். எனவே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவு வளமும் தொழில் வளமும் இன்றியமையாதன ஆகின்றன. ஆகவே, உழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம்.

அதனால்தான் புரட்சிப் பாவலர் பாரதிதாசன், "உழவே தலை என்றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்" என்று பாடிப் போற்…

பூம்புகார் நகரின் சிறப்பு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.