Skip to main content

வன்னியகுல சத்ரிய சொந்தங்களுக்கு ஒரு சிந்தனை!!

திராவிட கட்சிகளை தவிர்த்து தனியாக நாம் இயங்குவது தேர்தலை எதிர்கொள்வது என்ற நமது நிலைபாட்டால் நமக்கு நம்மக்களிடையெ பெருகிவரும் செல்வாக்கினை பொறுத்துகொள்ள முடியாமல் திராவிட அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நமது ஒற்றுமையினை வளர்ச்சியினை தடுக்க முயல்கின்றது அதன் விளைவாகத்தான் இந்த மரக்காணம் சம்பவம்..ஆம்! வன்னியர்களின் எழுச்சியின் காரணமாக நாம் கோடி சொந்தஙக்ளை சித்திரை முழுநிலவு மாநாட்டில் ஓரணியில் திரண்டு ஒன்றிணைந்தோம்! மாநாடு வெற்றி நிகழ்வாக உருவெடுக்கும் அந்த இனிய வேலையில் ஆளும் அரசு அதனை பொறுத்து கொள்ளமுடியாமல் ஒரு மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விட்டது திட்டமிட்ட ஒரு கும்பலால் நமது வன்னிய சொந்தஙக்ள் தாக்கப்பட்டார்கள் கற்கள்கொண்டும் கத்திகள் கொண்டும் யாதும் அறியாத நமது சொந்தஙள் இருவர் படுகொலை செய்யப்பட்டார்கள்! 

உண்மையில் நமது வெற்றிமாநாட்டை திசை திருப்பும் அவர்களது முயற்ச்சிக்கும் மாண்புமிகு தமிழ ஊடகத்துறையாளர்கள் ஒத்து ஊதினார்கள்(ஜால்ரா போட்டுத்தான் உங்களது டிஆர்பி ரேட்டிங்க் உயர்த்தவேண்டுமா?) எது நியாம என்று சிறிதுகூட அக்கறைகொள்ளாமல் இந்த ஊடகங்கள் தொடர்ந்து ஒரு கும்பலால் நிறைவேற்றப்பட்ட‌ அந்த வன்முறை வெறியாட்டத்தினை மட்டுமே தலைப்பு செய்திகளாக வெளியிட்டன அதன்மூலம் நமது வெற்றிமாநாட்டை திசைதிருப்பு தமிழக மக்கள் நம்மீது வெறுப்புகொள்ளும்படி சித்திரிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பினார்கள் உண்மையில் மாமல்லையில் கோடி வன்னியர்களுகு மேல் கூடினார்கள் என்ற செய்தினை எந்த ஒரு ஊடகமும் வெளியிட முன்வரவில்லை.இதிலிருந்தே தெரியவருகின்றது வன்னியர்களின் உண்மை நிலைமையினை இங்கு யாரும் வெளிபடுத்த தயாராக இல்லை. ஒரு பெரும்பாண்மை சமூகத்தின்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையினை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் கண்டுகொள்ள தயாராக இல்லை!!

ஆதலால் வன்னியபெருங்குடி மக்களே! இனிதான் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு எதையும் செய்யவேண்டும்! இல்லையேல் அவர்களது சூழ்ச்சி வென்று நாம் தோற்றுவிடுவோம்!!

ஆதலால் அனைத்து வன்னியபெருங்குடி மக்களும் ஓரணியில் திரளவேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்!!

ஒன்றுபடுவோம்!! வென்று காட்டுவோம்!!

Comments

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் பெருவிழா - தமிழர்த் திருவிழா

பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -குறள் (1031)
எனும் குறள் இதனை தெளிவு செய்யும்.உழவுத் தொழில் செய்யாமல் மற்ற தொழில் செய்கின்றவர் எல்லாரும் உழவுத் தொழில் செய்கின்றவரைத் தாங்குவதால் இந்நாள் உழவர்க்கே உரிமை உடையதாயினும் உலகு புரக்க உழைப்பவர் அனைவருமே தேவை என்பதால் மற்ற உழைப்பாளர்களும் போற்றுகின்ற நாளாகிறது பொங்கல் பெருநாள்.

உழவு தவிர மற்றவை அனைத்தும் தொழில் என்னும் சொல்லால் குறிக்கப்படும். எனவே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவு வளமும் தொழில் வளமும் இன்றியமையாதன ஆகின்றன. ஆகவே, உழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம்.

அதனால்தான் புரட்சிப் பாவலர் பாரதிதாசன், "உழவே தலை என்றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்" என்று பாடிப் போற்…

பூம்புகார் நகரின் சிறப்பு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.