Skip to main content

ஃபேஸ்புக்கினால் 2014 தேர்தலில் 30% முடிவை மாற்றமுடியுமாம்!

முகநூல் (Facebook)

ஏற்கனவே கூறிய அற்க்கைகளின் படி அமெரிக்காவிலும் பிற சில நாட்டிலும் ஆட்சி மாற்றத்திற்க்கு பெரும் பங்கு வகித்தது இந்த முகநூல் என்பதை நாம் அறிகின்றோம். அந்த அறிக்கைகளின்ன்படி இந்தியாவிலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதற்க்கு அடுத்துவரும் அனைத்து மாநில தேர்ந்தலிகளும் அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்றும் நமக்கு தெரியவருகின்றது.


ஆதலால் நாம் முதலில் ஒன்றினை நமது சிந்தையில் நிலைநிறுத்திகொள்ளவேண்டும்.. ஆம், நாம் பொழுதுபோக்கிற்க்கு முகநூலை பயன்படுத்துவதோடு நில்லாமல் நாம் நமது சிந்த்னையை கருத்தினை எண்ணத்தை வெளிப்படுத்துவதற்க்கான ஒரு அறிய வாய்ப்பாகவும் நாம் எடுத்துகொள்ளவேண்டும்..

நாம் நினைத்தால் நாம் சிந்தித்தால் ஒரு புரட்சிக்கான ஒரு சிறு தீயை விதையை நாம் நிச்சயம் மூட்ட முடியும் விதைக்க முடியும் என்பது என்னுடைய கருத்து!!

இத்தகைய நவீன ஊடகஙக்ள் இல்லாத காலகட்டங்களில் பத்திரிக்கை ஊடகம் சமுதாய முன்னோற்றத்தில் அரசியல் மாற்றங்களில் பெரும் தாக்கத்தைனை ஏற்ப்படுத்தியிருக்கின்றதை நாம் மறுக்க இயலாது அதைபோலத்தான் இதுவும் ஆம்.. பத்திரிக்கை என்பது ஒரு சில குறிப்பிட்ட ஆசிரியர் உள்ளிட்ட குழுவின் கருத்துக்களின் ஒட்டுமொத்த தொகுப்பு என சொல்லலாம் ஆனால் முகநூல் என்பது அதைபோன்றதல்ல...இங்கே நல்ல ஒரு சிந்தனையானும் ஒரு பத்திரிக்கைக்கு சமம்.

பேனாவின் முனை வாள்முனையைவிட வலிமையானது என்றொரு சொற்றடர் உள்ளது என்பதை நினைவூட்டிகொள்வோம்..

அதைப்போலத்தான் முற்போக்கு சிந்தனையுள்ள தொலைநோக்கு சிந்தனையுள்ள ஒவ்வொரு சிந்தனையாளனும் ஒரு பேனா முனைதான் ஒரு வாள்முனைபோலத்தான்..!!

ஆதலால் ஆக்கப்பூர்வமாக் சிந்தியுங்கள்! நம் சமுதாயம் மீதும் நமது மொழி, கலாச்சாரம், வரலாறு, பண்டையகால நாகரீகம், கலை, இலக்கியம் மற்றும் சிற்ப்பம் போன்ற விசயங்களில் பற்றுகொள்ளுங்கள் அதின்மீது உங்களது கவனத்தினை திருப்புங்கள் அதன்பொருட்டு உங்களது சிந்தனையை கூர்தீட்டுங்கள் எழுதுங்கள் வெளிப்படுத்துங்கள் பின்பு நீங்களும் ஒரு மிகப்பெரிய சிந்தனையாளர் ஆவது உறுதி!!

உங்களை சுற்றியுள்ள நடைமுறை வாழ்க்கை பிரச்சனைகளை ஆராயுங்கள் அதை நல்ல தமிழ் புலமையோடு எழுதுங்கள்! நீங்களும் ஒரு சிந்தனையாளராக மாறி அவ்வகையான ஒரு புரட்சிக்கு மாற்றத்திற்க்கு வித்திட்டால் அது முகநூலின் உதவில் நமக்கு கிட்டும் மிகப்பெரிய வெற்றியாகும்.

Comments

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

ராஜேந்திர சோழரின் வங்கதேச படையெடுப்பு: லண்டன் நூலகத்தின் ஒளிப்பட ஆவணத்தில் தகவல்

முதலாம் ராஜேந்திர சோழரின் வங்காள படையெடுப்பின்போது கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை வரலாற்று ஆய் வாளர்களின் கூற்று. ஆனால், வட கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான ஆவணம் தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது.

கங்கைகொண்ட சோழரின், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவைகள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.
ராஜேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாள மாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான்.
இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோ…

மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை!!!

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது. தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு  பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை. பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன. கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ்  பங்கியாவைப்   ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ளார். அத…