Skip to main content

வீறு கொண்டு எழவேண்டும் என்னுயிர் இன சொந்தங்களே!!

அறவழியில் நமது போராட்டங்களை கண்டங்களை தெரிவிப்போவோம் வன்முறையில் இறங்காமல் திராவிட அரசின் சூழ்ச்சிகளிலிருந்து விலகி போராடுவோம்!!

பல்லாயிரம் நூற்றாண்டுகளாக இந்த் மண்ணில்தான் வாழ்ந்துவருகின்றோம் மண்ணிற்கு மக்களுக்கும் ஒரு ஆபத்துவரும்பொழுது வீறு கொண்டு எழுந்துவந்து மக்களையும் மண்ணையும் காக்கின்றோம்...இது நம் தாய்தமிழ்நாடு.

அய்யகோ!! என் தாய்தமிழ்நாடே!!

ஊழல் செய்தவனும் கொலைசெய்தவனும் நாட்டை காட்டிகொடுத்தவனும் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் உரிமைக்காக உணர்வுக்காக போராடிய உன்னத நம் மருத்துவர் சிறைசெய்யப்பட்டிருக்கின்றார். இது அநீதி!! நீதிக்காக சொந்த மகனேயே தேர்சக்கரத்தில் வைத்து நீதிவழங்கிய தமிழ்மரபில் தோன்றிய நமகா இந்த அநீதி!!

வந்தேரிகளெல்லாம் நம்மை ஆழவிட்டதின் பலன் நமக்கு இப்பொழுது கிடைக்கபெறுகின்றது.. திராவிடத்தை தேனூற்றி வளர்க்கு நவீன புரட்சியாளர்களே இப்பொழுது உங்களுக்கு சந்தோசமா?

இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்?! அவர் செய்த குற்றம்தான் என்ன?!

108 சாதிகள் உள்ளிட்ட மக்களுக்கும் கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதிக்கீடு வேண்டிய் போராடியது குற்றமா?

அம்பானிக்கி கிடைக்கும் கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டிய சம்ச்சீர் கல்வி வேண்டி போராடியது குற்றமா?

உழைக்கும் பெருங்குடி மக்கள் நாளும் இந்த மதுக்கடைகளால் பாதிக்கபடுவதால் மதுவிலக்கு வேண்டிய்
போராடியது குற்றமா?

அனைத்து சமுதாய மக்களூம் நலமுடன் வாழ‌ சமுதாய நல்லினக்க மாநாடுகளை மாவட்டம்தோறும் நடத்தியது  போராடியது குற்றமா?

தமிழ் மண்ணும் உரிமைகளும் மறுக்கப்படும்போது பறிக்கப்படும்போதும் போராடியது குற்றமா?

நவீன புரட்சியாளர்களே சொல்லுஙக்ள்?!!

Comments

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

ராஜேந்திர சோழரின் வங்கதேச படையெடுப்பு: லண்டன் நூலகத்தின் ஒளிப்பட ஆவணத்தில் தகவல்

முதலாம் ராஜேந்திர சோழரின் வங்காள படையெடுப்பின்போது கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை வரலாற்று ஆய் வாளர்களின் கூற்று. ஆனால், வட கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான ஆவணம் தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது.

கங்கைகொண்ட சோழரின், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவைகள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.
ராஜேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாள மாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான்.
இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோ…

பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் பெருவிழா - தமிழர்த் திருவிழா

பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -குறள் (1031)
எனும் குறள் இதனை தெளிவு செய்யும்.உழவுத் தொழில் செய்யாமல் மற்ற தொழில் செய்கின்றவர் எல்லாரும் உழவுத் தொழில் செய்கின்றவரைத் தாங்குவதால் இந்நாள் உழவர்க்கே உரிமை உடையதாயினும் உலகு புரக்க உழைப்பவர் அனைவருமே தேவை என்பதால் மற்ற உழைப்பாளர்களும் போற்றுகின்ற நாளாகிறது பொங்கல் பெருநாள்.

உழவு தவிர மற்றவை அனைத்தும் தொழில் என்னும் சொல்லால் குறிக்கப்படும். எனவே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவு வளமும் தொழில் வளமும் இன்றியமையாதன ஆகின்றன. ஆகவே, உழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம்.

அதனால்தான் புரட்சிப் பாவலர் பாரதிதாசன், "உழவே தலை என்றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்" என்று பாடிப் போற்…