Skip to main content

மூத்தகுடிமக்கள் யாவரும் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து தமிழனின் தமிழகத்தின் பாரம்பரிய‌ பெருமைகளை கட்டமைப்புகளை மீட்டெடுப்போம்!

மிகத்தொண்மையான அரசப்பாரம்பரியம் கொண்டது நம் வன்னியகுல சத்ரியர்கள் பேரினம்!

பெரும்பாறைகளையும் கற்களையும் குடைந்து பல குடவரைக்கோவில்களையும் கற்றழிகளையும் சிற்ப்பங்களையும் தோற்றுவித்த உயர்திரு. நரசிம்மவர்ம பல்லவம் அவரது பணிகளை ஏற்று செவ்வனே செய்து முடித்த உயர்திரு. பரமேசுவர்ம பல்லவரும் அவரது இளவல் உயர்திரு. இராசசிம்ம பல்லவரும் இணைந்து இன்றைய மாமல்லபுரம் (மாமல்லை), காஞ்சி (கைலாசநாதர் மற்றும் ஏகாம்பரேசுவர் ஆலயங்கள்) போன்ற ஊர்களில் தோற்றுவித்து அழியாத பல கலை கலஞ்சியங்களை உலகிற்க்கு வழங்கிய வேந்தர்களின் வழிவந்தது வன்னிய பேரினம்!

மற்றொரு பல்லவகுல தோன்றல் உயர்திரு. கருணாகரத் தொண்டைமான் முதல் வடக்கே இமயம் வரை படைநடத்தி சென்று வென்று தமிழ் அரசை நிலைநாட்டிய பேரரசர் உயர்திரு. மும்முடிசோழர். ராசராசசோழ தேவரும் கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, ஜாவா மற்றும் கடாரம் (மலேசியா) நாடுகளை வென்று தமிழகத்தின் உன்னத ஆட்சியை அங்கேயும் நிலைநாட்டி தமிழனின் பெருமையை பறைசாற்றிய‌ உயர்திரு. ராசேந்திர சோழதேவரும் அவருக்கு பேருதவியாக இருந்து அவரது ராஜதூதனாக சீனம் வரை சென்றவரும் அரசகவி புலவர். சேக்கிழாரிடத்தில் பெரியபுராணம் என்ற சைவ பொக்கிசத்தை உருவாக்க கோரிய உயர்திரு. அநபாயச் சோழ தேவரும் தோன்றிய குலத்தில் உதித்த வன்னியப்பேரினம்! 

இவ்விதம் உயர்திரு. இராசராச சோழ தேவரும் உயர்திரு. இராசேந்திர தோழ தேவரும் வெற்றுகரமாக ஆட்சியமைத்து நமது ஒருங்கிணைந்த முந்தைய தமிழ் மன்ணையும் பாரம்பரியத்தையும் காத்துவந்தது பல குறுநில சமுதாய மன்னர்களின் ஒத்துழைப்பாலும் பேருதவியாலும் என்றால் அது மிகையாகாது. மாட்சிமை மிக்க பழுவேட்டையார் சமுதாயமும் வீரமிக்க செம்பியான் குல‌ சமுதாயங்களும் இன்னும் பற்ப்பல சமுதாயஙக்ளும் இணைந்து ஒன்றுபட்டும் ஓரணியில் இருந்துதான் பழ‌ம்பெரும் தமிழ்நாட்டினை ஆண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை நாம் வரலாற்றில் காண முடிகின்றது! 


பாரபட்சமற்ற ஆங்கிலேயன் அங்கீகரித்த தென்இந்தியாவின் மூத்த போர்குடி மக்கள் வன்னிய பெருங்குடி மக்கள்!

ஆகையால் தான் இன்றுவரை தமிழக கெஜட்டில் உள்ள தமிழ் சத்ரிய குலம் என்பதாக வீரவன்னிய பிரிவு உள்ளது! 

இனி அதை முழுமையாக உணர்ந்து, முற்போக்கான வீரத்துடன் நடப்போம்! அதாவது அரசின் எந்த சொத்துக்களையோ, பொது சொத்துக்களையோ எப்போதும் சேதப்படுத்தாமல், நெஞ்சம் நிமர வைத்த நமது முன்னவர் "நாகப்பன் படையாட்சி" போல் அமைதியான வழியில் நமது உரிமைக்கான அதிகாரமையத்தை பெற‌ போராடுவோம்!!

ஆதலால் தமிழ்நாட்டிலுள்ள‌ மூத்தகுடிமக்கள் யாவரும் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து மீண்டும் பழைய பெருமைகளை கட்டமைப்புகளை மீட்டெடுப்போம்!

திராவிட ஓநாய்களின் தந்திரத்தால் விழுந்து இன்றுவரை
தன்னையும் தனது பெருமைகளையும் அழித்துவிட்ட தமிழ்பேரினமே!

நீ ஏன் ஜாதியே இல்லை என்று சொல்லும் தலைவனை எதிர்ப்பார்க்கிறாய் ?.
உனக்குள் வீரம் செத்துவிட்டதா ??
உனக்குள் போராடும் திறன் குறைந்துவிட்டதா ??
தமிழினமே நீ அரசாண்ட இனத்தில் பிறந்தும் 
ஏன் எவனுக்கோ அடிபணிகிறாய் ??.
தனி ஆளாக நின்று நீ பல சாகசம் புரியும்போது 
ஏன் சொந்தங்களோடு சேர மறுக்கிறாய் ??
இன்று யார்யருக்கோ பாதிப்பு என்று நினைக்கிறாயோ ??
அது நாளை உனக்கும் நடந்தால்! ?? 

அன்று உன்னைப்போல அப்பாவிகள் தானே 
இடஒதுக்கீடு போராட்டத்திலும் மரக்காணம் கலவரத்திலும் குருபூஞைகளிலும் கொல்லப்பட்டவ‌ர்கள்! ??.
நான் உன்னை வாள் எடுக்க சொல்லவில்லை 
ஒற்றுமையோடு சாதிக்காக வா என்றுதான் சொல்கிறோம்!! 

வடக்கிலிருந்து வந்து "திராவிடம்" என்று உன்னை யாரோ ஆட்டிவைக்கிறார்கள் ??
ஆனால் பூர்வீக குடிகளோடு நீ ஏன் சேர மறுக்கிறாய் ?
எவனோ உன்னையும் அடக்க நினைக்கிறான்,
மற்றவரையும் அடக்க நினைக்கிறான்!.

நம் இருவரின் நிலை இப்படி இருக்கையில் 
நாம் சேருவதில் என்ன தப்பு இருக்கு ??
வடகே வன்னிய குல சத்ரியர்கள், 
தெற்க்கே முக்குலத்தோர்கள்,
மேற்கே வெள்ளாளர்கள் 
நாம் சேர்ந்து ஆளுவோமே !??. நம்மால் முடியாதா ??... 
எவனுக்கோ அடங்கி போவதற்கு 
நாம் நம் தோழமையோடு தோள் கொடுப்போமே ??


தமிழ்பூர்வகுடி சமுதாயங்கள் இணைவதில் என்ன பிழை இருக்கின்றது?!
வாருங்கள் ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! 

பிறகு நாளை நமதே! இத் தாய்தமிழ் நாடும் நமதே!!

Comments

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

பூம்புகார் நகரின் சிறப்பு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மோனோலிசாவை விட அழகானவள் எங்கள்...!!

இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார். அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது. ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான். பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது.
பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது. மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை.  (இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்க பதாகை என்போரும்…