Skip to main content

இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?

ஏன் இந்த அவல நிலை???

இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?


"பாராண்ட பல்லவ வம்சம்" நம் வம்சம் ஆனால் இன்று நம் நிலைமைஎன்ன?

தமிழகத்தில் 6 கோடி மக்கள் தொகையில் 2 கோடி மக்களைக் கொண்ட வன்னியர்கள் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் அரசு பணியில் நிலையைப் பார்த்தால் வேதனையும், கண்ணீரும்தான் மிஞ்சுகிறது.. நாம் முறையாக அரசால் அங்கீகரீக்கப்பட்டிருக்கிறோமா? எதனால் இந்த அவல நிலைமை? சுதந்திரம் பெற்றபின்பு கூட உழைப்பவன் இன்னும் வறுமையின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற முடிய இயலவில்லை.. இங்கே ஒரு கடை நிலை கூத்தாடிக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட ஒரு விவசாயிக்கு கிடைக்கிறதா என்று சொல்ல எந்த ஒரு தகவலும் சான்றாக இல்லை என்பது தின்னம்.

ஏன் இப்படி ஒரு அவல நிலை? எதை முன்னிட்டு நாம் இப்படி நிற்கிறோம்!! எனக்கு ஒரு உண்மை புலப்படுகிறது.. நம் ஒற்றுமையின்மைதான் என்றுகூட தோன்றுகிறது. இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தொகையிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிறிந்து கிடக்கிறோம்! ஒற்றுமையின் வலிமை தெரிந்தும் நாம் அவரவர்கள் தோன்றும் பாதையில் பயணித்துகொண்டுடிருக்கிறோம்..


இது நம் மக்களின் தவறல்ல என்பது என்னுடைய எண்ணம்....

இங்கே நம்மை ஒன்றினைக்கும் உணர்வு எது? அந்த உணர்வை வளர்க்கதவறியது எது? யார்?


படையாண்ட பல்லவர்கள்
பரதேசி ஆனதென்ன ?

நாடாண்ட நம்மவர்கள்
நடுத்தெருவில் நிற்பதென்ன?

நம் உரிமையை நாம்
பெற கையேந்தி நிற்பதென்ன ?

நம்மை அண்டிப்பிழைதவர்கள்
நம் இனத்தை அழிக்க நினைப்பதென்ன ?

ஆயிரம் ஆயிரம் பட்டபின்னும்
நமக்கு புத்தி வர மறுப்பதென்ன ?

அரசியல் சந்தையிலே நாம்
அடிமாடாய் திரிவதென்ன ?

இத்தனையும் நான் கூறிய பிறகும்
நீங்கள் சிந்திக்காமல் சிரிப்பதென்ன ?

பொறுமைக்கும் எல்லையுண்டு
அதை நீங்கள் மறந்ததென்ன ?

அமைதி காக்கும் நம் பொறுமையிலே
எருமை மாடு மேய்வதென்ன ?


போதும் இந்த இழிநிலை
இனம் காக்க நினைத்திடுவோம்
இன்றே இணைத்திடுவோம் ...!
பத்திஎரியட்டும் வன்னியர் எழுர்ச்சி ... 


- ருத்ரன் வன்னியன்
(நன்றி www.vanniyar.org)

இன்னும் வருவேன் முன்பைவிட வீரியமாக...


Comments

 1. முரளி ,

  எனக்குள்ளும் எப்போதுமுள்ள வினா இது. நீங்கள் தொடங்கியிருக்கின்றீர்கள். நானும் வடம் பிடிக்கிறேன். இன்னும் கரங்கள் சூலும். பலப்படுத்தலாம். பயணப்படலாம்.

  ReplyDelete
 2. உங்களின் கருத்துக்கள் மிகவும் நன்று.

  ReplyDelete
 3. பல்லவர்கள் நீங்களா ,,, ,,,,,,,,,,,அப்போ உங்க வன்னியகுலம் பலவர்கள் அப்படித்தானே ,,,,,,,அப்பா உங்கள் பூர்விக நாடு எது நண்பா ,,,,,,,,,,,,,,,உங்கள் வரலாறுதான் என்ன ,,,,,,,,,

  மனிதன் மேல் அக்கறை வையுங்கள் ,,,,,ஜாதி மேல் வேண்டாம் ,,,,,,,,சுனாமி வந்தால் யாரு எந்த ஜாதி என்று அதற்க்கு தெரியாது நண்பா

  ReplyDelete
 4. yalla vanniyanukum ulla unarvukalai velipaduthungal vetri pera vazhathugal

  ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் பெருவிழா - தமிழர்த் திருவிழா

பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -குறள் (1031)
எனும் குறள் இதனை தெளிவு செய்யும்.உழவுத் தொழில் செய்யாமல் மற்ற தொழில் செய்கின்றவர் எல்லாரும் உழவுத் தொழில் செய்கின்றவரைத் தாங்குவதால் இந்நாள் உழவர்க்கே உரிமை உடையதாயினும் உலகு புரக்க உழைப்பவர் அனைவருமே தேவை என்பதால் மற்ற உழைப்பாளர்களும் போற்றுகின்ற நாளாகிறது பொங்கல் பெருநாள்.

உழவு தவிர மற்றவை அனைத்தும் தொழில் என்னும் சொல்லால் குறிக்கப்படும். எனவே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவு வளமும் தொழில் வளமும் இன்றியமையாதன ஆகின்றன. ஆகவே, உழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம்.

அதனால்தான் புரட்சிப் பாவலர் பாரதிதாசன், "உழவே தலை என்றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்" என்று பாடிப் போற்…

பூம்புகார் நகரின் சிறப்பு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.