Skip to main content

துடைத்து எறியப்படவேண்டும் இந்த மட்டமான திரைப்பட கலாச்சாரம்

ஒரு கடைக்கோடி கூத்தாடிக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, அங்கீகாரமோ நம் நாட்டின் ஓரு சாதாரண ஏழை விவசாயிக்கோ,  ஒரு மீனவனுக்கோ (அ) ஒரு மாணவனுக்கோ கிடைக்குமா?

பணம், (மொக்கை)புகழ் இருக்கிறதென்பதற்க்காக மட்டும் ஏன் கூத்தாடிகளை தலையில் வைத்து தூக்காத குறையாக முக்கியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் என்னத்தை செய்தார்கள் இந்த் மக்களுக்கு? ஒரு உதாரணம்: கடந்த குறைந்த காற்றழுத்தத்தின் விளைவாக மிகுந்த மழையினை தமிழகம் எதிர்கொண்டது, இதில் நீலகிரியில் பெரும் நிலச்சரிவு, பல வீடுகள் தகர்ந்து தரைமட்டமாயின மேலும் 65 க்கும் மேற்ப்பட்ட மனித உயிர்கள் பலியாயின மேலும் இழப்பு மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. அரசும் துரிதமாக மீட்ப்பு பணிகளை முடிக்குவிட்டது, பிற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வு அமைப்புகளும்  தங்களால் இயன்ற உதவிகளை கொடுப்பதாக அறிவித்தன. மேலும் திருப்பூரை சேர்ந்த சில பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆயுத்த ஆடைகளை கொடுத்ததாக ஒரு நாளேட்டில் வெளியாகியிருந்தது.

இந்நிகழ்வுகள் இருக்க, உதகையின் இயற்கை பிரதேசங்கள் காட்டி பெரும் தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன இதை யாரும் மறுக்க முடியாது! அதைவைத்து தமிழ் திரைஉலகமும் பெரும் பணம் சம்பாதிதிதுக்கொண்டன. ஆம் என்னுடைய வினா என்னவென்றால்? புயலினால் சேதமான அன்டை மாநிலத்திற்க்கு பல லட்சங்கள் நிதியுதவி அளித்த இந்த திரையுலக கூத்தாடிகள் ஏன் இங்கே உதகையில் ஏற்ப்பட்ட நிலச்சரிவின்போது இவர்க்ளால் எந்த நிதியுதவியும் கொடுக்க மமில்லை அதிலும் தமிழக (தறிகெட்ட‌)இளைஞர்களால் பெரிதும் போற்றப்படும் கூத்தாடிகள் குறைந்த்து ஒரு வெற்றறிக்கைகூட வெளியிடவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது. அதுவும் மேடைக்குமேடை இவர்கள் தமிழகம்தான் எங்களுக்கு வாழ்வு கொடுத்தது என்று வெட்டி பேச்சுக்கள் பேசுவது அதையும் இந்த மக்கள்.... என்னத்த சொல்லுவது?! யோசித்து பாருங்கள் தமிழக மக்களே கொஞ்சம்!  

ஒரு நடிகை அவள் யார்? அவளின் பூர்வீகம் என்ன? அவள் நாட்டுக்காக என்ன செய்தாள்? அவளால் தமிழ் நாட்டு மக்கள் என்ன பயன் அடைந்தார்கள்.  ஆனால் எளிதாக அவளெல்லாம் நாட்டின் முதலமைச்சரை பார்க்கமுடிகிறது அதைக்கொண்டு அவர்கள் பெரும் கோடிகள் குவித்துவிடுகிறார்கள். 

ஒரு ஏழை விவசாயியோ, மீனவனோ அதை போல உங்களை பார்க்க முடியுமா? அவர்களையும் கூப்பிட்டும் வைத்து படம் எடுப்பீங்களா? என்ன கொடுமை இது? இந்த மட்டமான சுயநலத்தனமான சினிமா கலாச்சாரத்திற்க்கு நாம் ஒரு முடிவு கட்டியாகவேண்டும்.. ஒரு ஆரோக்கியமான சினிமா கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும். மேடையில் தோன்றும் ஒரு கூத்தாடி சாதாரன் மக்களுக்காக தெருவில் இறங்கிபோராடமுடியுமா? எத்தனையோ நிகழ்வுகள் எடுக்கப்பட்ட இந்த திரையுலகில் ஒரு விவசாயியோ, ஒரு மீனவனோ படும் பாட்டினை உண்மையாக எடுக்க முடியுமா....? இன்னும் எத்தனையோ வினாக்கள்..

தமிழன் எவ்வளவோ படித்து உயர்பதவியில் இருகிறான் இங்கேயும், வெளிநாட்டிலும் ஆனால் சினிமாவையும், அரசியலையும், நாட்டையும் இன்னும் பிரித்து பார்த்து அறிந்துகொள்ளாமல் இருக்கிறான்... இது எங்கே போயி முடியும் என்று தெரியவில்லை..

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், மீனவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள்... எந்தெந்த பன்னாடை பரதேசிகளெல்லாம் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறார்கள்.. நினைத்தால் நெஞ்சுபதைக்குது..இன்னும் வினாவுவேன் முன்பைவிட வீரியமாக...

Comments

  1. நல்ல பதிவு இது. என்னை போன்றவர்களின் மன குமறல் இது .தொடருங்கள்...

    ReplyDelete
  2. கூத்தாடிக்கு தமிழன் தரும் அங்கீகாரம் இதற்கு ஒரு மிகபெரிய காரணம். உங்களை போன்றவர்களின் ஏக்கங்கள் வெளி உலகிற்கு தெரியும் வரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

பூம்புகார் நகரின் சிறப்பு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மோனோலிசாவை விட அழகானவள் எங்கள்...!!

இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார். அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது. ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான். பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது.
பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது. மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை.  (இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்க பதாகை என்போரும்…