Skip to main content

எங்கே செல்கிறது ஊடங்களின் பாதை/ நோக்கம்?!

கலாச்சார சீரழிவு. விசயங்கள் அனைத்தும் அதிர்ச்சிகொள்ளும்வகையில் உள்ளது. ஆம் கலாச்சாரம் சீரழிந்துதான் உள்ளது அதிலும் கொடுமை என்னவென்றால் பெரும் பல‌ கோடிகளும் செல்வாகுகளும் கொண்டவர்களே அதை செய்கிறார்கள் வசதியான வீட்டுபையன் திருடுவதுபோல. இன்று இளைஞர்களையும் சிறுவர்களையும் வெகுவாக அடிமைபடுத்தி அவர்களை அவைகளின் ஆளுமையின் கீழ் வைத்துள்ளன ஊடகங்கள் அவைகளுள் முதன்மையானவைகள் திரைப்படம், வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஒருவனது தனிப்பட்ட உள் எண்ணங்கள் வைத்துக்கொள்வோம் தற்பொழுதிய சூழ்நிலையில். ஆம் சமுதாய அக்கரையோடும், அறிவுசார்ந்த விசயங்களை கொண்டுசெல்லும் பெரும்பொறுப்புகள் மேற்க்கண்ட ஊடகங்க்ளுக்கு இருக்கிறது இல்லையென்று சொல்லிவிடமுடியாது ஏனென்றால் இன்று ஏறக்குறைய இவைகளை கடக்காத எவரும் இருக்கமுடியாதென்று அடித்து சொல்லலாம் அப்படியிருக்க பொறுப்போடு செய்திகளை, கருத்துக்களை வெளிவிடவேண்டும்.

ஆனால் இன்று அப்படியல்ல நிலமை, முதலில் திரைப்படத்திற்க்கு வருவோம் இன்றைய இளைஞர்கள் பட்டாலம் தங்களது தாய் தந்தையரின் புகைப்பட்ங்களை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக கூத்தாடி ஒருவரின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள் அந்த அளவுக்கு அவர்கள் மட்டமான் ஒரு விசயத்தை சாதாரண நிகழ்வாக செய்துவிட்டார்கள். அதற்க்கு ஒரு சில பெற்றோர்களே அதரவு!! திருடு என்பதையே சுட்டுவிடு என்று (அ)நாகரீகமாக சொன்னதது இந்த திரைப்படம்தான். எங்கே போகிறது இளைய சமுதாயம்?! ஒரு கூத்தாடி, புகழ் உச்சானிக்கொம்பில் இருக்கும் ஒரு நட்ச்சத்திர நடிகர் அவருக்கு காவடிதூக்கும் பெரும் கூட்டம்கூட அவரை பின்பற்றிகொண்டு இருக்கிறது என்றுகூட கூறலாம் அவர் ஒரு படத்தில் வந்தார்(நடிக்கவில்லை) மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் அந்த நடிகா சர்வசாதாரணமாக முதல்வரைக்கூட சந்திக்கும் அந்தஸ்து கொண்ட அந்த‌ கூத்தாடி, அந்த படத்தில் கேவலமான இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்களை ஏற்று நடித்திருப்பார் தன்னை மகா ஞானி என்றும் சொல்லும் இவர் தனக்கு கல்யாண வயதில் மகள்கள் இருக்கிறார் என்பதைக்கூட அவர் மறந்து மோசமான காரியத்தை செய்திருக்கிறார்?! ஒரு பெரிய அந்தஸத்தில் இருக்கும் கூத்தாடிக்கு ஒரு பொறுப்பு வேண்டாம? வெறும் பணத்திற்க்காகத்தான் என்றால் பணம் அவரிடம் இல்லாததா?! கூறுங்கள் யாரவது தெரிந்தால்?!

இரண்டாவது காணொளி கூடகம் எனப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள்: ஊடகங்களிலே அதிக சக்திமிக்க ஊடகம் தொலைக்காட்சி எனலாம் இலட்ச்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டது உலகம்முழுவதும். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால், ஒரு பெரும் தொலைகாட்சி அலைவரிசைகளை கொண்ட ஒரு குழுமம், மக்களையோ, இளைஞர்களையோ, சமுதாயத்தையோ அவ்ர்கள் எள்ளள‌வும் கண்டுகொண்டதாக தெரியவில்லை என்பதை சமீபத்தைய ஒரு ஒளிபரப்பு அதை உறுதிசெய்கிறது. அது இதுதான், கடந்த மாதம் மும்பையில் கடந்த ஒருவருடத்திற்க்கு பிறகு புனேயில் குண்டுவெடித்தது அதை அனைத்து ஆங்கில சேனல்களும் திரும்ப திரும்ப காண்பித்தார்கள் மக்களை விழிப்புற செய்யக்கூடிய நிகழ்வு மேலும் வரவேற்க்ககூடியது அது. அசேசமயம் தமிழ் சேனல்கள் ஒவ்வொன்றாக வலம் வந்தபோழுது எந்த ஒரு தமிழ் சேனல்களிலும் அது ஒளிபரப்பப்படவில்லை மீடியாவின் ராஜா என்று சொல்லிதிரியும் அந்த பெரிய நெட்வொக்கில்கூட ஒளிபரப்பாகவில்லை. ஆனால் அதை காண்பிக்காத அதே சேனல் போன வாரம் ஒரு காணொளியினை ஒளிபரப்பு செய்தது அதுவும் கொஞசம் கூட எடிட் செய்யாமல் அவர்களது படத்தைக்கூட எடிட்செய்து வெளியிடும் அவர்க்ள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பசெய்து குடும்பத்தோடு பார்த்துகொண்டிருப்பவர்களை கூசவைத்தது.. அன்று குண்டுவெடிப்பு ஒரு செய்தி அதுவும் ம்றுநாள் செய்தியோடு ஒளிபரப்பிய அந்த சேனல் இதைமட்டும் கொஞசம்கூட பொறுப்பில்லாமல் திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்கின்றது எங்கே செல்கிறது அவர்களது நோக்கம் மக்களை கீழ்த்தரமான எண்ணங்களை உசுப்பேற்றுவது போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அக்குழுமம் தீவிரம்காட்டுகிறது அதன் மூலம் தனது கல்லா நிறைந்தால் போதும் என்று குறுகிய மனப்பாண்மையோடுயிருக்கிறது. ஏன் இவர்களாம் ஒரு டிஸ்கவரி, ஹிஸ்டரி, நேட்கியோ போன்ற ஒரு அலைவரியை ஏற்ப்படுத்தமுடியாது?! பணமில்லைய இல்லை செல்வாக்கில்லையா? இருக்கிறது அவர்களுக்கு சமுதாயத்தின்பால் மக்க்ளின்பால் அக்கரை இல்லை.

அடுத்துவருவோம் வாரயிதழ்கள்!! இன்றையா வார இதழ்கள் அனைத்தும் நல்ல விசயங்களை கருத்துக்களை வெளியிடாமல் கூத்தாடிகளின் அந்தரங்கத்திலிருந்து அவர்களின் அம்பலம் வரை ஒவ்வொரு செய்திகளை இன்ஞ் இன்ஞ்சாக தெரிந்துவைத்து வெளியிடுகிறாக்ள். பக்கத்திற்க்கு பக்கம் அவர்களின் டேட்டா பேஸைத்தான் வெளியிடுகிறாகள் இவைகளை தெரிந்து மக்களுக்கு சமுதாயத்திற்க்கு என்ன பயன்? இவர்களுக்கு அதிக பிரதிகள் விற்க்கவேண்டும் என்பதற்க்காகந் மிகவும் கீழ்த்தரமான செய்திகளை வெளியிடவும் தயாராகிவிட்டார்கள். புதிதாக ஒரு வார இதழ் வந்தது புதியதலைமுறை என்ற பெயரோடு அது வெளிவந்த சில மாதங்களிலேயே பல இலட்ச்சம் பிரதிகளை தாண்டிவிட்டதாக கேள்வி. அதற்க்கு அவர்கள் சினிமா சம்பந்தமாக ஒரே ஒரு பக்கம்தான் அதுவும் கலைஞர்களை ஊக்கிவிக்கு நோக்கில் வெளியிடுகிறார்கள். அதை நாம் வாரயிதழ் என்று சொல்லலாம்?! இதழ்கள் முழுவதும் அவ்வள்வு கருத்துக்கள் மக்களுக்கு சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாற்று கருத்து இருந்தால் கூறுங்கள்?!

இவ்வகையில் மக்களை, இளைஞர்களை, சமுதாயத்தை பெருவாரியாக சென்றடையும் மேற்க்க்ண்ட ஊடகங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கிறது? அவர்களின் நோக்கம் பணம் மட்டும்தானா? அவற்றையும் தாண்டி வரமுடியாதா? விடைதெரிந்தால் சொல்லுங்கள்?!

Comments

 1. ஊடகங்டகள் எல்லாம் ஒரே மாதிரியில்ல மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியில்ல

  ReplyDelete
 2. நான் எல்லா ஊடங்களையும் சொல்லவில்லை நண்பரே! இங்கே தமிழகத்தில் பெரும்பாலும் அப்படித்தான் தற்பொழுது செயல்படுகின்றன.. அதை யாரும் மறுக்கமுடியாது!

  ReplyDelete
 3. மிகச்சரியானது ஆனால் கோடிகனக்கானோர் உபயோகிக்கும் மீடியாவை சில பேர் மட்டுமே உபயோகிக்கும் வலைப்பபூக்கள் மூலம் விமர்சிப்பதால் மாற்றம் நிகழாது என்பதே என் கருத்து

  ReplyDelete
 4. மிகச்சரியானது ஆனால் கோடிகனக்கானோர் உபயோகிக்கும் மீடியாவை சில பேர் மட்டுமே உபயோகிக்கும் வலைப்பபூக்கள் மூலம் விமர்சிப்பதால் மாற்றம் நிகழாது என்பதே என் கருத்து

  ReplyDelete
 5. நன்றி நண்பர் கலைவாணன் அவர்களுக்கு! நாம் நமக்குதெரிந்த நம் கண்முன்னால் நடக்கும் சம்பவத்தின் அடிப்படையில் விமர்சிப்போம்! நம்மால் முடிந்த சங்கை ஊதிவைபோம் அது கேட்கிற வரையில் கேட்கட்டும்!!

  உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால்
  நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா

  மேற்க்கண்ட கருத்தை நீவீர் ஆதரிப்பவரானால் நான் செய்ததும் அப்படியே!!

  ReplyDelete
 6. first intha cigar,drinks,sex nu tamil movies uh direct pandravangala naduu road la nikka vechi sudanum..apathan namala matheri youths olunga padipanga...

  ReplyDelete
 7. உண்மை நண்பர் தியாகு!!

  ReplyDelete
 8. //நம்மால் முடிந்த சங்கை ஊதிவைபோம் அது கேட்கிற வரையில் கேட்கட்டும்!! //

  முரளி,

  உண்மையானச் சொல்.

  சிந்தனையைத் தூண்டும் பதிவு.

  ReplyDelete
 9. நன்றி நண்பரே! உங்களது கனிவான் பதிவிற்க்கு!!

  ReplyDelete
 10. அருமையான பதிவு ... தொடரட்டும் உங்கள் பணி...

  ReplyDelete
 11. நன்றி செங்கதிரோன்! உங்கள் கருத்துக்கள் எனக்கு மேலும் எழுத‌ ஊக்கமளிக்கும்!!

  ReplyDelete
 12. இணையத்தில் வன்னியர்களுக்கு எதிரான பிரச்சாரம்

  1.

  http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html

  2.

  https://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=3602178630371023243

  ReplyDelete
 13. இணையத்தில் வன்னியர்களுக்கு எதிரான பிரச்சாரம்

  1.

  http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html

  2.

  https://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=3602178630371023243

  ReplyDelete
 14. //அது இதுதான், கடந்த மாதம் மும்பையில் கடந்த ஒருவருடத்திற்க்கு பிறகு புனேயில் குண்டுவெடித்தது அதை அனைத்து ஆங்கில சேனல்களும் திரும்ப திரும்ப காண்பித்தார்கள் மக்களை விழிப்புற செய்யக்கூடிய நிகழ்வு மேலும் வரவேற்க்ககூடியது அது.

  அசேசமயம் தமிழ் சேனல்கள் ஒவ்வொன்றாக வலம் வந்தபோழுது எந்த ஒரு தமிழ் சேனல்களிலும் அது ஒளிபரப்பப்படவில்லை மீடியாவின் ராஜா என்று சொல்லிதிரியும் அந்த பெரிய நெட்வொக்கில்கூட ஒளிபரப்பாகவில்லை.

  ஆனால் அதை காண்பிக்காத அதே சேனல் போன வாரம் ஒரு காணொளியினை ஒளிபரப்பு செய்தது அதுவும் கொஞசம் கூட எடிட் செய்யாமல் அவர்களது படத்தைக்கூட எடிட்செய்து வெளியிடும் அவர்க்ள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பசெய்து குடும்பத்தோடு பார்த்துகொண்டிருப்பவர்களை கூசவைத்தது.. அன்று குண்டுவெடிப்பு ஒரு செய்தி அதுவும் ம்றுநாள் செய்தியோடு ஒளிபரப்பிய அந்த சேனல் இதைமட்டும் கொஞசம்கூட பொறுப்பில்லாமல் திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்கின்றது எங்கே செல்கிறது அவர்களது நோக்கம் மக்களை கீழ்த்தரமான எண்ணங்களை உசுப்பேற்றுவது போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அக்குழுமம் தீவிரம்காட்டுகிறது அதன் மூலம் தனது கல்லா நிறைந்தால் போதும் என்று குறுகிய மனப்பாண்மையோடுயிருக்கிறது. //

  இது ஒரு நல்ல குறிப்பு(observation). சரியாக கவனித்து சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். மக்களுக்கு மாற்று பொழுது போக்கு நிகழ்ச்சியாக நல்ல நாடகங்களை, கூத்துக்களை கொண்டு செல்ல வேண்டும்.

  ReplyDelete
 15. Hi,
  See the link

  http://alturl.com/rwty

  ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

பூம்புகார் நகரின் சிறப்பு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மோனோலிசாவை விட அழகானவள் எங்கள்...!!

இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார். அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது. ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான். பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது.
பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது. மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை.  (இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்க பதாகை என்போரும்…