Skip to main content

பெரியகோயில் 1000-வது ஆண்டுவிழா: தஞ்சை

இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று


ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.


தரணிபுகழ் மிக்க மாமன்னன் தோற்றுவித்த பெருவுடையார் ஆலயம் உயர்ந்தந் செருக்கோடும் கலைநயத்தோடும் மாமன்னன் ராஜராஜன் புகழ் திக்கெட்டும் பரவுமபடி அது 1000 ஆவது ஆண்டில் வீரநடை போட்டுகொண்டிருக்கிறது. மாமன்னன் அவர்களை வாழ்த்த நம்க்கெல்லாம் அருகதையில்லை அந்தளவுக்கு பரந்த அறிவும் தீரமான் வீரமும் கலையின் மீது தீராத ஆர்வமும் கொண்ட தலைவர்கள் சிலரைத்தவிர யாருமில்லை. இந்திய சாம்ராஜ்ஜியங்களிலே சோழ பேரரசில்தான் கப்பல்படை இருந்தது அதுவும் இந்திய எல்லைகளை கடல்தாண்டி கடாரம், சாவகம், சுபத்திரா, பர்வதம், இலங்காபுரி போன்ற தீவுகளையும் நாடுகளையும் வெற்றிகொண்டிருக்கிறது. அப்படி படையெடுப்பின்போது தமிழ்சமூகமும் அந்தந்த நாடுகளில் தீவிகளில்ல் தமிழர்களின் பெருமை சிறக்க குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள் பின்னர் அந்த தமிழ்சமூகத்திற்க்கு ஏதேனும் தீங்கு நேரிடும்போது மீண்டும் படையெடுத்து பகைவர்களை அழித்து தமிழர்களுக்கு நல்வாழ்வு அளித்தார் மாமன்னர் ராஜராஜ சோழன்.


தான் எத்தனைபெரிய சாம்ராஜியதிபதியாகயிருந்தபோதும் தான் என்றும் உண்மையான அன்புக்கும் அடிமையென்று நிரூபித்திருக்கிறார் பலமுறை. சிறுவய்திலே அன்னையினை இழந்த மாமன்னன் தனது தமக்கையின் பராமரிப்பில் அனைத்து அறிவுகளிலும் தேர்ச்சிபெற்றுவிளங்கினார் என்றும் தனது தமக்கையாரின் வாக்கினை மீறியதில்லை என்பது வரலாறு. கொடை என்றுவரும்பொழுது தான்மட்டுமே செய்தேன் என்றில்லாமல் யார்யாரெல்லாம் அறப்பணியில் ஆர்வமுடன் கொடைசெய்துள்ளார்கள் என்று அவர்களின் சிறப்பினையும் வரலாறுகூறட்டுமே என்று அவர்களின் கொடைபணிகளையும் கல்வெட்டாக ஏற்றியிள்ளார் மாமன்னன் ராஜராஜன்.


இப்படி தனிச்சிறப்புகள் பலகொண்ட மாமன்னன் ராஜராஜன் அவர்களினைபோன்று யாரும் சமுதாயத்திற்க்கு நாட்டுக்கு சிறப்புகள் செய்ததுமில்லை செய்யபோவதுமில்லை அவரை வாழ்த்தவயதில்லை ஆதலால அவர்களின் திருவடிக்கு தலைவணங்கி புகழினை போற்றுவோம். மேலும் அவர்களின் முதன்முதலாக உருவாக்கிய உலோகச் திருவுருவசிலை குஜராத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதாக கேள்வி அதனை மீட்டு மீண்டும் தரணிபுகழ்பாடும் தஞ்சையில் நிறுவவேண்டுமென்று கனம் ஆட்சியாளர்களிடம் எடுத்துரைப்போம்.


குஜராத் மாநிலத்தில் உள்ள மாமன்னர் ராசராச சோழனின் உலோகச் சிலையை மீட்டு, மீண்டும் தஞ்சை பெரிய கோயிலுக்குள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தஞ்சை பெரிய கோயிலை எழுப்பியவர் மாமன்னர் ராசராச சோழன். அவர் வாழ்ந்த காலத்தில், பெருவுடையாரைப் பார்த்து வணங்கும் நிலையில் சுமார் ஒன்றரை அடி உயரத்திலான ராசராச சோழனின் உலோகச் சிலை பெருவுடையார் கோயில் கருவறை முன் நெடுங்காலமாக வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தது.


தற்போது, உலகப் பாரம்பரியச் சின்னமான பெரிய கோயிலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இந்தக் கோயில் வருவதற்கு முன்னதாக மராட்டிய அரச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது கோயிலுக்குள் இருந்த ராசராச சோழனின் உருவச் சிலை மற்றொருவர் கைக்குச் சென்றுவிட்டது.


மறைந்த முன்னாள் முதல்வர் ஆட்சிக் காலத்தில் பெரிய கோயிலுக்குள் இருக்கும் ராசராச சோழன் சிலை கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது அல்ல என்பதும், சிலை கைமாறிய பிறகு உண்மையான சிலைக்குப் பதிலாக போலியாக உருவாக்கப்பட்ட சிலையே கோயிலுக்குள் இருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டது. அதன்பிறகு, சிலையை மீட்க எம்.ஜி.ஆர். மேற்கொண்ட நடவடிக்கை ஏனோ வெற்றி பெறவில்லை.


இதனிடையே, உண்மையான ராசராச சோழனின் சிலை குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கவுரம் சாராபாய் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், அருங்காட்சியக உரிமையாளர் சட்டத் திட்டங்களுக்கு உள்பட்டு ராசராச சோழன் சிலையை விலைக்கு வாங்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.


ராசராச சோழனால் எழுப்பப்பட்ட பெருவுடையார் கோயில் 1,000-வது ஆண்டு நிறைவு விழாவை எட்டும் நிகழ்வு தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும். இத்தகைய போற்றுதற்குரிய ராசராச சோழன், சமய ஈடுபாடு கொண்டவராக இருந்ததோடு, அடுத்த தலைமுறையினரும் தலை நிமிர்ந்து வாழும் வகையில் தமிழகக் கட்டக் கலையையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் கருவூலமாக பெரிய கோயிலைத் நமக்கு தந்தவர்.


கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மாமன்னர் ராசராச சோழனின் உலோகச் சிலை பெருவுடையார் கோயிலுக்குள் இல்லாமல், ஆமதாபாதில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருப்பது தமிழர்களுக்கு ஏற்கத்தக்கதல்ல.


எனவே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி தமிழன்னைக்கு மேலும் ஒரு மணிமகுடம் சூட்டி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிவு பெற்றுள்ள தமிழகம், அடுத்து, பெரிய கோயில் 1,000-வது ஆண்டு விழாவை நடத்தி வரலாற்றுப் பதிவில் மற்றொரு இடத்தையும் பெறவுள்ளது.


இந்த நேரத்திலாவது தமிழக அரசு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, ஆமதாபாத் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ள ராசராச சோழனின் உலோகச் சிலையை மீட்டு, மீண்டும் பெரிய கோயிலுக்குள் வைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.


கல்கோயிலையும், ராசராசனின் சிலையும் ஒருங்கே பார்க்கும்போது, 1,000-வது ஆண்டு விழா முழுத் திருப்தியுடன் நடைபெற்றதாக உணர முடியும். ராசராச சோழனின் உருவச் சிலை நமது பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. அதை மீட்க வேண்டிய அவசியமும், அதற்கான காலச் சூழலும் தற்போது உருவாகியுள்ளது.


மன்னர்களின் ஆட்சி முறை, நிர்வாக முறை, வளர்ச்சிப் பணிகள் குறித்து வரலாற்றில் படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. ராசராச சோழன் மிகப் பிரம்மாண்டமான கோயிலை எழுப்பினார், அதில் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் அனைத்தும் ஒரு பெட்டகமாக அடங்கியுள்ளன. அனைத்துக்கும் சான்றாக இன்றைக்கும் கம்பீரமாக வானத்தைத் தொடும் அளவுக்கு கோபுரமாய் நின்று கொண்டிக்கிறது பெரிய கோயில். பெரிய கோயிலைப் பார்த்து அதிசயத்துப் போகும் மனித சமுதாயம், அதை உருவாக்கிய மன்னரின் உண்மையான உலோகச் சிலையையும் காணத் துடிக்கிறது என்பதே உண்மை!!


வாழ்க நின்புகழ்! வளர்க தமிழகம்!!

Comments

  1. 1. ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட் !!
    2. சினிமா விமர்சனம்-குறுக்குப்புத்தி 18+
    3. இந்தியா ஒளிர்கிறது, இந்தியா ஒளிர்கிறது
    4.நேரடி ஒளிபரப்புக்கு ஜெயலலிதா பயன்படுத்தும் இணையதளம்!
    5.ஆயிஷா

    (www.jeejix.com ) . உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete
  2. தமிழோசை நாளிதழில் வரும் சின்னம் (logo) யாழ் தானே ?

    ReplyDelete
  3. tamilosai newspaper contains a logo . what it is? i think it is yazh musical instrument right.

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம