Tuesday, August 16, 2011

அன்னா ஹஸாரே கைது


இந்திய ஜனநாயக நாட்டில் அகிம்சை வழியில் போராடிகொண்டிருக்கிற ஒரு ஒப்பற்ற தியாகி அன்னா ஹஸாரே வினை கைது செய்திருப்பதன்மூலாம் ஊழலால் கரைபட்டுகொண்டிருக்கும் காங்கிரஸின் கபடபுத்தி தெள்ளதெளிவாகிறது!

இந்த நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த போராட்டமாக அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட சுதந்திரபோராட்டத்தினை டைம் பத்திரிக்கை சுட்டிகாட்டியது அவ்வழியில் காந்தியவாதியான திரு அன்னா அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்க்கு அனுமதி மறுத்தும் அவரை கைதுசெய்திருப்பதும் நாட்டில் குடிமக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது அப்படி அவரொன்றும் அவரது சொந்த நலனுக்காக போராடவில்லை நாட்டையே உலுக்கிகொண்டிருக்கும் ஊழல் என்று கிருமியினை வலுவான சட்டம்கொண்டு அழிக்க வேண்டு மென்பது அவரதுமட்டுமல்ல அவரைப்போன்ற தூயள்ளம் கொண்ட இந்தியர்களின் எண்ணமாக கொண்டுதான் போராடுகிறார்.

சுமார் அறுபது ஆண்டுகாலாமாக ஆட்சிகட்டிலில் கோலோச்சிகொண்டிருக்கும் இந்த காங்கிரஸ் கட்சியில்தான் போபார்ஸ் ஊழலிருந்து தொடங்கி இன்று ஸ்பெக்ரம், ஆதர்ஸ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது! இந்த காங்கிரஸ் ஆட்சியிருக்கும் வரை இந்திய திருநாடு எந்த வலுவான் வளர்ச்சியினையும் காணமுடியாது இவர்களுக்கு எள்ளலவும் கூட நாட்டுபற்று கிடையாது அவர்களின் ஒரே நோகமெல்லாம் ஒருவரை கைப்பாவையாகக்கொண்டு வேறொருவரை பிரதராக்குவதுதான். மேலும் இவர்கள் ஆட்சி தொடர்ந்தால் அண்டை நாடுகளெல்லாம் நம்மை சீண்டிப்பார்பதோடில்லாமல் ஏளனமாகவும் பார்க்கதொடங்கிவிடுவார்கள்! இந்தியாவால் சுதந்திரநாடான வங்காள தேசம்கூட நம்மை சீன்டிப்பார்த்தாலும் ஆட்சியப்படுவதிற்க்கில்லை!

ஆதலால் திரு அன்னா அவர்களின் போராட்டத்திற்க்கு மனப்பூர்வமான ஆதரவினை தெரிவித்துகொள்கிறது! சொந்தங்கள் அனைவரும் நிச்சயம் தங்களது மேலான ஆதரவினை அளிப்பதோடில்லாமல் உஙக்ளது கருத்துக்களையும் உலகுகிற்க்கு தெரியபடுத்துங்கள்!!

1 comment:

 1. மிஸ்டர் பிரதமர்!! உஙகளுக்கு நாட்டின் மக்கள் கேட்கும் கேள்விகள் கேட்டிருக்குமென்று நம்புகிறேன்! இல்லையெனில் இதோ உங்கள் டர்பனுக்குள் அனேகமாக 5 அல்லது 6 வருடமாக மக்களின் மனசாட்சிகளின் குரல்கள் எட்டாதவாறு இழுத்து கட்டப்பட்டிருக்கும் காதினை திறந்து வைத்து கேளுங்கள்!

  1. அன்னா ஹசாரே வின் போராட்டத்தால் யாராது பாதிக்கப்பட்டவர்களா?

  2. சில முக்கியமான ரகசிய காப்புபிரமாணங்கள் எடுத்துகொண்டுதான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஏற்க்கிறார்கள் அவர்கள் அனைவரும் அதை மீறாமல் கடைபிடித்துண்டா?!

  3. ஜனநாயக முறையில் அஹிம்சை வழியில் போராட இந்திய குடிமகனுக்கும் உரிமையுண்டென்று அனைத்து சட்டஙக்ளும் சொல்கிறது!!

  4. நெஞ்சை தொட்டுசொல்லுஙக்ள் கல்மாடி, ராஜா, ஆதர்ஸ் ஊழல், ஷீலா தீட்தித் போன்றோர்கள் செய்த ஊழல்கள் உஙக்ளுக்கு தெரியாமலா நடந்தது?!

  மதிகெட்டு கிடக்கும் பிரனாப், சோனிய, ராகுல், கபில் சிபில், சிதம்பரம், அம்பிகா சோனி இவர்கள் மட்டுமே இந்திய பேரரசல்ல கொஞ்சம் காதுகொடுத்தும் கேளுஙகள் அனைத்து மாநிலங்களிலும் ஊழலுக்கெதிரான குரல்கள் ஒழிக்கத்தொடங்கிவிட்டது! இனியாவது திருத்திகொள்ளுங்கள் மக்கள் நம்பிக்கையோடுதான் உம்மை மீண்டும் பதவியில் அமர்த்தினார்கள் அவர்களை எல்லாம் முட்டாள் என எண்ண வேண்டாம்!

  ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்