Skip to main content

Posts

“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன். தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு- கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெர...

பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !.

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்..இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் . தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன். தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்ப...

பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் பெருவிழா - தமிழர்த் திருவிழா பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. -குறள் (1031) எனும் குறள் இதனை தெளிவு செய்யும். உழவுத் தொழில் செய்யாமல் மற்ற தொழில் செய்கின்றவர் எல்லாரும் உழவுத் தொழில் செய்கின்றவரைத் தாங்குவதால் இந்நாள் உழவர்க்கே உரிமை உடையதாயினும் உலகு புரக்க உழைப்பவர் அனைவருமே தேவை என்பதால் மற்ற உழைப்பாளர்களும் போற்றுகின்ற நாளாகிறது பொங்கல் பெருநாள். உழவு தவிர மற்றவை அனைத்தும் தொழில் என்னும் சொல்லால் குறிக்கப்படும். எனவே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவு வளமும் தொழில் வளமும் இன்றியமையாதன ஆகின்றன. ஆகவே, உழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம். அதனால்தான் புரட்சிப் பாவலர் பாரதிதாசன், "உழவே தலை என்றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்" என்று ப...

தமிழ் மொழியின் வரலாற்று தடங்கள்

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய்... மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ் , இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், த...

அன்னா ஹஸாரே கைது

இந்திய ஜனநாயக நாட்டில் அகிம்சை வழியில் போராடிகொண்டிருக்கிற ஒரு ஒப்பற்ற தியாகி அன்னா ஹஸாரே வினை கைது செய்திருப்பதன்மூலாம் ஊழலால் கரைபட்டுகொண்டிருக்கும் காங்கிரஸின் கபடபுத்தி தெள்ளதெளிவாகிறது! இந்த நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த போராட்டமாக அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட சுதந்திரபோராட்டத்தினை டைம் பத்திரிக்கை சுட்டிகாட்டியது அவ்வழியில் காந்தியவாதியான திரு அன்னா அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்க்கு அனுமதி மறுத்தும் அவரை கைதுசெய்திருப்பதும் நாட்டில் குடிமக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது அப்படி அவரொன்றும் அவரது சொந்த நலனுக்காக போராடவில்லை நாட்டையே உலுக்கிகொண்டிருக்கும் ஊழல் என்று கிருமியினை வலுவான சட்டம்கொண்டு அழிக்க வேண்டு மென்பது அவரதுமட்டுமல்ல அவரைப்போன்ற தூயள்ளம் கொண்ட இந்தியர்களின் எண்ணமாக கொண்டுதான் போராடுகிறார். சுமார் அறுபது ஆண்டுகாலாமாக ஆட்சிகட்டிலில் கோலோச்சிகொண்டிருக்கும் இந்த காங்கிரஸ் கட்சியில்தான் போபார்ஸ் ஊழலிருந்து தொடங்கி இன்று ஸ்பெக்ரம், ஆதர்ஸ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது! இந்த காங்கிரஸ் ஆட்சியிருக்கும...

தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர் -- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். " நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான் பறப்பேன், பறப்பேன், பறப்பேன் ' என்று உங்களுக்குள் திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள். இந்த புவியில், இளைஞர்களின் ஆற்றல்தான் பெரிய ஆற்றல். இந்தியாவின் சமூக பொருளாதார நிலையை மாற்றும் சக்தி மாணவர்களின் செழுமையான சிந்தனைக்கு மட்டுமே உண்டு. 2020ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்கிற வல்லரசுக் கனவு, இந்தியாவுக்கு உண்டு. இந்த லட்சியத்தை எட்ட, தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். பல்பையும், வெளிச்சத்தையும் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசனும், விமானங்களைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், கணிதம் என்றதும் சீனிவாச ராமானுஜமும், "பிளாக் ஹோல்' என்றதும் சுப்ரமணியன் சந்திரசேகரும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்துவத்துடன் இயங்கியவர்கள்; தமக்கென்று ஒ...

நினைவில்கொள்ளவும் நடைமுறைபடுத்தவும் சில‌ சத்தியமான‌‌ பொக்கிச வாக்கிய‌ங்கள்!

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்! 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்! 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்! 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்! 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்! 13. ...