Skip to main content

அரசு கம்பிவட நிறுவனத்தினை (Cables Services) விரைவாக நடைமுறைடுத்துவதில் அரசிற்க்குள்ள‌ ஆர்வமும் இதிலும்..

அரசு கம்பிவட நிறுவனத்தினை (Cables Services) விரைவாக நடைமுறைடுத்துவதில் அரசிற்க்குள்ள‌ ஆர்வமும் அவசரம்மும் சமச்சீர்கல்வி சம்பந்தமான விசயங்களில் காட்டலாமே! பாடசாலைகள் திறந்து மேற்படி இரண்டுமாதகாலம் முடிந்துவிட்டது இன்னும் மாணவர்களுக்கு படிக்க புத்தங்கள் இல்லாமல் அவதிபட்டுகொண்டிருக்கிறார்களே! அவர்களது புலம்பல் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லையா?

இந்த ஆட்சியிலாவது நமது துன்பங்கள் துயரங்கள் துடைக்கப்படும் என்று நம்பிதான் மக்களும் ஒவ்வொரு முறையும் வாக்களித்து ஒரு மாற்று ஆட்சியினை அமைக்க உதவுகிறார்கள் ஆனால் ஆட்சியாளர்களே வெறும் வெற்று அறிக்கைகளை நிறைவேற்றும் செய்வதில் உள்ள ஆர்வமும் அவசரமும் மாணவரக்ளின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் கல்வியில் காட்டாமல் இருப்பதன் மர்மம் என்ன‌?! தொடர்ந்து மெளணம் ஏன்? மாணவர்கள் என்ன பிழை செய்தார்கள்?! அவர்கள் ஏன் துன்பபடவேண்டும்?!

எதிர்கட்சிகளின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்கள் செய்த அத்துனையும் மாற்றிவிட்டீர்கள் அது உங்கள் விருப்பம். நாட்டுமக்களிலுருந்து மாணவர்கள், நடுநிலையாளர்கள் ஏன் உங்களது கூட்டணி கட்சியினர் சிலர்கூட எடுத்துகூறியும், சுட்டிகாட்டியும் மற்றும் வேண்டிகொண்டும்கூட‌ இந்த சமச்சீர்கல்வி திட்டத்தில் மட்டும் வரட்டு கவுரவம் பார்க்கிறீர்கள்?! இது எந்த விதத்தில் நியாயமாக இருக்கமுடியும்?!

அட அனைத்துதரப்பு எண்ணஙக்ளையும் விடுஙக்ள், நமது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் சிறிதுகூட காலம்தாழ்த்தாமல் சமச்சீர்கல்வியினை அமுல்படுத்தகூறி ஆணைபிறப்பித்தபிறகும் அமல்படுத்த மறுக்கிறீகளே? இது எம்மைபோன்ற பாமரமக்களுக்கு இன்னும் விளங்கவேயில்லை?! மக்கள் எத்தனை நம்பிக்கையோடு உங்களுக்கு வாக்களித்தார்கள்! அவர்கள் பிள்ளைகளின் எதிர்கால நன்மையையினை முன்னிட்டு சிறிது மனமிறங்ககூடாதா?!

என்று திறக்கும் ஆட்சியாளர்களின் மனசாட்சி?!

Comments

 1. சிங்கத்திடம் தப்பி, புலி வாயில் மாட்டிய நிலை தான் தமிழர்கள் நிலை.

  ReplyDelete
 2. தாங்கள் கூறுவது சரியே, அம்மாவிற்கு மாணவர்கள் மேல் அக்கரை இல்லை என்பதையே காட்டுகிறது. தான் சொல்வது படிதான் நடக்கவேண்டும் என்பது அம்மாவின்
  குணம். ஐந்தாண்டுகள் ஆட்சியை தமிழக மக்கள் எப்படி தாக்குபிடிப்பார்கள் என்றுதான் தெரியவில்லை.

  ReplyDelete
 3. மிக்க நன்றி ஆனந்த் மற்றும் அசோக்!

  ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்

'பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....!!!
========================================================================

"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே. பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷய…

பூம்புகார் நகரின் சிறப்பு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மோனோலிசாவை விட அழகானவள் எங்கள்...!!

இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை அதிகாரியு மான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார். அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக் கிறது. ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜ சிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான். பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது.
பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது. மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை.  (இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்க பதாகை என்போரும்…